நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 16 மார்ச், 2019

நியூஸிலாந்து பள்ளிவாசல் படுகொலை இலங்கையர்களுக்கும் பாதிப்பா

நியூசிலாந்தின் – கிரிஸ்சர்ச் நகரில் அமைந்துள்ள இரண்டு பள்ளிவாசல்கள் மீது இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக
 அதிகரித்துள்ளது.
மேலும், 48 பேர் காயமடைந்துள்ள நிலையில், அதில் 20 பேரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில், பெண்ணொருவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் 
தெரிவிக்கின்றன.
இதில், அவுஸ்திரேலிய நாட்டவர் ஒருவரும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த திடீர் அனர்த்தத்தின்போது பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பங்களாதேஷ் கிரிகெட் வீரர்கள் மயிரிழையில்
 உயிர்தப்பியுள்ளனர்.
நியூசிலாந்தின் Christchurch பகுதியிலுள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த பள்ளிவாசலினுள் கறுப்பு நிற ஆடையுடன் நுழைந்த துப்பாக்கிதாரி அங்கிருந்தோர்மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
ஆகவே, நியுசிலாந்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இலங்கை பிரஜகைள் எவருக்காவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என அவுஸ்திரேலியாவிற்கான இலங்கையின் பிரதி தூதுவர் செனரத் திசநாயக்க 
தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரஜைகள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்வதற்காக துப்பாக்கி பிரயோகம் குறித்த தகவல்கள் அனைத்தையும் ஆராய்ந்து வருகின்றோம் என அவர் 
தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக