பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
யாழ். பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
தொழில் போட்டி காரணமாக இவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கொலயுடன் யார் யார் தொடர்புபட்டுள்ளார்கள் என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்து
வருகின்றனர்.
அத்துடன், இவரது கொலையுடன் தமிழர்கள் சிலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தற்போது வரை சடலம் உறவினரக்ளிடம் கையளிக்கப்படவில்லை எனவும் பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக