நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 25 மார்ச், 2019

ரசாயனத் தொழிற்சாலை விபத்தில் சீனவில் 44 பேர் பலி

சீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின், ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தொழில்பூங்காவில் அமைந்துள்ள பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் ரசாயன ஆலையில் எதிர்பாராத வெடிவிபத்து நேரிட்டது.
இதில், வேகமாகப் பரவிய தீயை தீயணைப்பு வீரர்களால் கட்டுப்படுத்த இயலவில்லை.
பலமணி நேரப் போராட்டத்திற்குப் பின் இன்று அதிகாலை தீயணைப்பு வீரர்கள், தீயைக் கட்டுக் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் தற்போதுவரை, 44 பேர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதில் 30க்கும் மேற்பட்டோரின் நிலை மிகவும், கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக