நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 13 செப்டம்பர், 2017

பிரசித்தி பெற்ற Equifax நிறுவனத்தின் இணையத்தில் தவகல்கள் திருடிட்டு!

பிரித்தானியாவில் பிரசித்தி பெற்ற Equifax நிறுவனத்தின் இணையத்தளத்தை ஊடுருவிய ஹேக்கர் 44 மில்லியன் மக்களின் தவகல்களை திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இதன் போது பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் மக்களினதும் தகவல் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் 
வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த தகவல் விபரங்கள் திருடப்பட்டுள்ள நிலையில், உங்களது பெயர் பொருட்கள் கொள்வனவு செய்தல் மற்றும் கிரெடிட் கார்ட் பெறுதல் போன்ற நடவடிக்கைகளில் வேறொருவர் ஈடுபடலாம்.
எனவே, இந்த விடயத்தில் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். Equifax நிறுவனமானது பிரித்தானியாவில் உள்ள பலரதும் தகவல்களையும் சேமித்து 
வைத்துள்ளது.
பெயர், முகவரி, கடன் பெற்றுள்ள விபரங்கள், அந்த கடனை எவ்வாறு செலுத்துகின்றனர் போன்ற விபரங்களை சேகரித்து வைத்துள்ள நிலையில், அதனை வங்கிகளுக்கும் Equifax நிறுவனம் 
வழங்குகின்றது.
இந்நிலையில், நேற்று முன்தினம் குறித்த நிறுவனத்தின் இணையத்தளத்தை ஊடுருவிய ஹேக்கர்ஸ் தகவல்களை திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக