நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 11 ஜூலை, 2016

வெளியேறிய ரொனால்டோ: ஹீரோ ஆனார் மாற்று வீரர் ஈடர்?

ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் காயம் காரணமாக ரொனால்டோ வெளியேறியதால் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய ஈடர் ஹீரோ ஆனார்.
15-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர் பிரான்ஸ் நாட்டில் நடந்து வந்தது. இதில் 24 அணிகள் பங்கேற்று 
விளையாடின. 
இறுதிப் போட்டியில் உலக கால்பந்து தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள போர்ச்சுகல் அணியும், 17-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணியும் 
மோதியது. 
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்தப் போட்டியில், ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ காயம் காரணமாக வெளியேறினார். இது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
70-வது நிமிடத்தில் ஜான்செஸுக்கு பதிலாக மாற்று வீரராக ஈடர் களமிறங்கினார். இறுதிவரை இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், கூடுதலாக அளிக்கப்பட்ட நேரத்தில் ஈடர் கோல் அடித்து
 அசத்தினார். 
இதனால், காயம் காரணமாக ரொனால்டோ வெளியேறியதால் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய ஈடர் ஹீரோவானார். அவர் அடித்த ஒரு கோல்தான் போர்ச்சுகல் அணிக்கு கோப்பையை வென்று 
அளித்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக