நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

கற்பை இணையதளம் மூலம் சந்தித்து பறிகொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!!

பிரித்தானிய நாட்டில் இணையத்தளம் மூலமாக அறிமுகமில்லாத ஆண்களிடம் சிக்கி கற்பை பறிகொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை 6 மடங்காக அதிகரித்துள்ளது அந்நாட்டு அரசை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானிய நாட்டின் தேசிய குற்றவியல் ஏஜென்சி அண்மையில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ’டேட்டிங் அப்ளிகேஷன்’ மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக அறிமுகமில்லாத நபர்களை சந்தித்து கற்பழிப்பிற்கு உள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 6 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இணையத்தளம் மூலமாக சந்தித்து சீரழிந்தவர்களின் எண்ணிக்கை 2009ம் ஆண்டு 33 ஆக இருந்தது, 2014ம் ஆண்டில் 184 ஆக அதிகரித்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆண்களிடம் சிக்கிக்கொள்பவர்களில் 85 சதவிகிதத்தினர் பெண்கள் ஆகும்.
இந்த 85 சதவிகிதத்தில் 42 சதவிகிதத்தினர் 20 முதல் 29 வயதுடையவர்கள் என்றும் 24 சதவிகிதத்தினர் 40 முதல் 49 வயதுடைய பெண்கள் என்றும் தெரியவந்துள்ளது.
எனினும், இவ்வாறு கற்பை பறிகொடுத்துவிட்டு பொலிசாருக்கு தெரிவிக்காமல் பல பெண்கள் இருக்கலாம் என்பதால், இந்த எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
பொலிசாரிடம் புகார் அளிக்காமல் உள்ளவர்கள் தைரியமாக முன்வந்து பொலிசாரிடம் புகார் கொடுக்க வேண்டும் என தேசிய குற்றவியல் ஏஜென்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய நாடு முழுவதும் ’டேட்டிங்’ செய்யும் இணையத்தளங்களில் சுமார் 90 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களுடைய பெயர்களை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக