தாய்வான் நாட்டின் தென்பகுதியில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 10 மாத குழந்தை உள்பட ஐவர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபோன்ற இயற்கை சீற்றத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் தைவானில் இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.
தாய்வானின் இரண்டாவது பெரிய நகரமான காவோசியுங்
நகரில் இருந்து
சுமார் 39 கிலோமீட்டர் தொலைவில் பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விளைவாக 16 தளங்களை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்பட நான்கு
கட்டிடங்கள் சரிந்து விழுந்ததாகவும், இடிபாடுகளில் சிக்கிய பத்து மாத குழந்தை உள்பட மூவர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
அருகாமையில் உள்ள இன்னொரு ஏழு மாடி கட்டிடத்தில் சிக்கியிருந்த சுமார் 200 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், அவர்களில் காயமடைந்த நூற்றுக்கும் அதிகமானோர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்த பேரிடர் மீட்புக் குழுவினர், தொடர்ந்து அங்கே இடிபாடுகளை அகற்றும் பணியிலும், மக்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 1999-ம் ஆண்டு தைவானை தாக்கிய 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு சுமார் 2400 பேர் பலியாகினர் என்பது
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக