நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

பிரதமர் மோடி ஃபேஸ்புக்குடனான கலந்துரையாடலில் கண் கலங்கிய காணொளி


அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி , பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷக்கர்பேர்க்குடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இச்சந்திப்பைப் பொதுவெளியில் வைத்துக்கொள்ளச் சம்மதித்த மோடி அவர்கள் ஐந்து கேள்விகளுக்கு விடையளிக்கவும் சம்மதித்தார்.

இதன்போது மார்க் ஷக்கர்பேர்க் கேட்ட ஒரு கேள்வியின் போது மோடி கண் கலங்கி விட்டார். தாயைப் பற்றிய கேள்வியின் போதே மோடி கலங்கிவிட்டார்.

அக் கேள்வியும் , விடையும் வருமாறு:

ஷக்கர் பேர்க்: எனக்கும் உங்களுக்கும் ஒரு ஒற்றுமை. நாம் இருவருமே குடும்பத்திற்கு முக்கியத்துவம் தருபவர்கள்; எனவேதான் என் தாய் தந்தையரை இங்கே அழைத்து வந்திருக்கிறேன். உங்கள் தாயைப் பற்றிய உங்கள் நினைவுகளை எங்களோடு பகிர்ந்து கொள்வீர்களா?

முதலில் உங்கள் தாய்க்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உலகத்தையே இணைக்கும் ஒரு மகனைப் பெற்றெடுத்ததற்காக அவர் பெருமைப்பட வேண்டும்.
என் வாழ்வில் மட்டுமல்ல எல்லோர் வாழ்விலும் இரண்டு பேரை மறக்க முடியாது.

ஒன்று ஆசிரியர்; மற்றொன்று தாய்.
என் தாய் தான் என் வாழ்வின் ஆக்க சக்தி. சிறிய வயதில், நான் டீ விற்றுக்கொண்டிருந்தேன். இன்று உலகின் மாபெரும் குடியரசின் பிரதம மதிரியாக வீற்றிருக்கின்றேன் என்றால் அதற்குக் காரணம் என் தாய்தான்.

என்னைப் பொறுப்புடன் வளர்ப்பதற்காக அவர் உழைக்காத நாளேயில்லை.
என் தாய்க்கு எழுதப் படிக்கத் தெரியாது; ஆனால் எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொல்லுவார்.
தள்ளாத இந்த வயதிலும் தன் வேலைகளைத் தானே பார்த்துக்கொள்வார். தினந்தோறும் செய்திகள் கேட்பார்.
என் தாய் மட்டுமல்ல; நம் நாடு முழுவதும் இலட்சக்கணக்கானத் தாய்மார்கள், தங்கள் பிள்லைகளின் கனவுகளை நிறைவேற்றத் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்து வருகின்றனர்.
அந்தத் தாய்மார்களின் ஆசிர்வாதம் நம் நாட்டிற்குச் சக்தியளிக்கட்டும்.
என்று, பிரதமர் தன் பதிலை நிறுத்திக்கொண்டவுடன், அரங்கத்தில் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டினர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக