நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 24 செப்டம்பர், 2015

தவறான கருத்து ஃபேஸ்புக்கில் பரப்பிய நபருக்கு சிறை தண்டனை!

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெல்லோ என்ற 28 வயது இளைஞர் சிங்கப்பூரில் நர்ஸ் வேலை பார்த்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ’சிங்கப்பூர் மக்கள் தோல்வியாளர்கள்’ என்று ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், ”சிங்கப்பூர் மக்களிடமிருந்து நாம்
 (பிலிப்பைன்காரர்கள்) வேலைகளை எடுத்துக் கொண்டோம். அவர்களின் எதிர்காலத்தை எடுத்துக் கொண்டோம். அவர்களின் பெண்களை எடுத்துக் கொண்டோம். இன்னும் சிறிது காலத்தில் அந்தத் தோத்தாங்குளிகளை சிங்கப்பூரை விட்டே வெளியேற்றுவோம். சிங்கப்பூர் 
விரைவிலேயே பிலிப்பைன்ஸின் ஒரு மாகாணமாக ஆகப் போகிறது. சிங்கப்பூரில் இயற்கைப் பேரழிவுகள் ஏற்படப் பிரார்த்திக்கிறேன். அப்படி எதுவும் நடந்தால் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி” என்று ஒரு பதிவு போட்டிருந்தார்.
சுமார் 600 லைக்குகள் வேறு அந்தப் பதிவிற்கு. பலத்த எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அந்த போஸ்ட்டை நீக்கிய பெல்லோ, தனது ஃபேஸ்புக் பக்கத்தை யாரோ ஹேக் செய்து விட்டார்கள் என்று காவல்துறையில் புகார் ஒன்றினை அளித்தார். ஆனால் இதே போன்ற மேலும் சில பதிவுகளை அவர் கடந்த ஆண்டும் பகிர்ந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்..
பிரச்னைக்குரிய கருத்துகளைப் பகிர்ந்தது, காவல்துறை அதிகாரிகளிடம் தவறான தகவல்களை அளித்தது என்ற புகார்களின் அடிப்படையில் அவருக்கு நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை அளித்து நீதிபதி சிவசண்முகம் தீர்ப்பளித்தார். சிங்கப்பூர் அரசின் முடிவை பிலிப்பைன்ஸ் அரசு வரவேற்றுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக