நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

கனடாவில் குடியுரிமை மறுக்கப்பட்ட 99வயது பெண்?

80-வருடங்களிற்கு மேலாக கனடாவில் வாழ்ந்தாலும் குடியுரிமை மற்றும் சுகாதார அட்டை மறுக்கப்பட்ட 99-வயதுடைய பெண் ஒருவர் தனது நிலைமையை CBC விசாரனை செய்தி பகுதியான Go Public- கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
ஜோன் ஸ்ரேலிங் என்ற இப்பெண்ணின் விண்ணப்பம் மறுக்கப்பட்டதற்கு ஒரே ஒரு காரணம் ஒரு பிரத்தியேக அடையாளம்—– கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டிற்கு முற்பட்ட அவரது பிறப்பு அத்தாட்சி பத்திரம்– அவரால் சமர்க்க முடியாமல் போனதே.
இவரது சிநேகிதி டயான வற்சன் 2012 தொடக்கம் ஸ்ரேலிங்சை ஒரு கனடிய பிரசையாக அடையாளம் காட்டுமாறு போராடிவருகின்றார். இதற்கான ஒரு முக்கிய காரணம் இந்த வயோதிபர் பொது சுகாதார பராமரிப்பு நலனை பெறமுடியும் என்பதுமாகும்.
வற்சன் கனடா குடியுரிமை மற்றும் குடிவரவு பகுதியினருக்கு ஸ்ரேலிங் யு.கேயில் பிறந்து கனடா வந்து அவருடைய நீண்ட வரலாறு இங்கு உண்டானதென்பதனை நிரூபிக்க 20ற்கும் மேற்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.
இந்த ஆவணங்கள் ஸ்ரேலிங்ஸ் 1930லிருந்து ரொறொன்ரோவில் வசிக்கின்றார் என்பதை மட்டுமின்றி வேலை, தனது வரியை செலுத்துதல், ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்தமை போன்றனவற்றை உறுதிப்படுத்துகின்றன. ஸ்ரேலிங் யுகே அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டும் அவரது பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை பெற முடியவில்லை.
மற்றய அனைத்து ஆதாரங்கள் இருந்தும் CICஸ்ரேலிங்கிற்கு குடியுரிமை சான்றிதழை வழங்க மறுத்து விட்டனர். பெரிய கோப்பு ஒன்றை தான் அனுப்ப பிறப்பு சான்றிதழ் வேண்டும் என்ற ஒரு பக்க கடிதம் தனக்கு அனுப்ப பட்டதென அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
1916ல் லண்டனில் பிறந்த ஸ்ரேலிங் யு.எஸ் வந்து பின்னர் எல்லையை கடந்து 1933ல் தனது 17வது வயதில் கனடா வந்தார். ஏன் எல்லையை கடக்கின்றீர்கள் எவ்வளவு காலம் தங்குவீர்கள் போன்ற எதுவித கேள்விகளையும் எவரும் கேட்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இவர் திருமணம் செய்யவில்லை. வாகனமோட்டும் அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு பெறவில்லை. கடந்த சில வருடங்கள் வரை சுகாதார அட்டை பெறவேண்டிய அவசியமும் அவருக்கு ஏற்படவில்லை.
இவருக்கு இரண்டு காரணங்களிற்காக தான் உதவவிரும்புவதாக வற்சன் தெரிவித்தார். இவரது வயது காரணமாக இவருக்கு சுகாதார பராமரிப்பு திட்டங்களின் அணுகல் தேவை. இவரது சேமிப்பு முடிவடையும் போது இந்த வயோதிபரால் அவரது ஓய்வு கால இல்லத்திற்கும் கட்டணம் செலுத்த முடியாத நிலைமை ஏற்படும்.சுகாதார அட்டை இன்றி இவரால் நீண்ட-கால அரசாங்க பராமரிப்பையும் அணுக முடியாது.
Go Public ஸ்ரேலிங்களின் வழக்கை கனடா குடியுரிமை மற்றும் குடிவரவு பிரிவினருக்கு எடுத்து சென்றனர். அங்கு இவரது வழக்கை எடுத்துக்கொள்ள உடன்பட்டனர்.
முடிவு?
யூன் மாதம் செய்யப்பட்ட சமீபத்திய குடியுரிமை சட்ட திருத்தங்கள் ஸ்ரேலிங் ஒரு கனடிய குடியுரிமையாளர் என்பதை உறுதிப்படுத்துவதாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த மாற்றங்கள் 1947ல் இருந்த அந்த பழைய சட்டங்களை அங்கீகரிப்பதாக கூறப்படுகின்றது.
ஸ்ரேலிங் மற்றும் வற்சன் இருவருக்கும் இச்செய்தி மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. ஸ்ரேலிங் தனது குடியுரிமை சான்றிதழ் மற்றும் நிரந்தர சுகாதார அட்டையையும் பெறுவார்.
நானும் மற்றய கனடியர்கள் போல் உணர்கின்றேன் என ஸ்ரேலிங் தெரிவித்தார்.
Go Public- ஸ்ரேலிங்கின் 82வருட கனவை நிறைவேற்றியுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக