ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் 2 இடங்களில் ஏற்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தலைநகர் அபுஜாவில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குஜி என்ற பகுதியில் உள்ள காவல்நிலையம் அருகில் நேற்று இரவு முதல் குண்டு வெடித்தது. அதனை தொடர்ந்து நயன்யா பகுதி பேருந்து நிலையத்தில் 2-வது வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது.
இந்த தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 3 பேர் இறந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக