பிரேசிலில் ஆயிரக்கணக்கான மாடுகள் கடற்கரையில் இறந்து கரையொதுங்கியதால், துர்நாற்றம் வீசி அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
லெபனான் கப்பல் ஒன்று கடந்த வாரம் 5000 மாடுகள் மற்றும் 750 டன் எண்ணெய்யுடன் பாரா பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த போது, பிரேசில் அருகே விபத்திற்குள்ளாகி மூழ்கியது.
கப்பலில் இருந்த மாடுகளும் கடலில் மூழ்கி
இறந்தன.
டன் கணக்கில் எண்ணெய் கடலில் கலந்துள்ளதால், கடல் உயிரினங்கள் மட்டுமில்லாமல், அப்பகுதி மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்த மாடுகள் கரை ஒதுங்கி துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கப்பல் மூழ்கியமை குறித்து விசாரணைகள் இடம்பெற்று
வருகின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக