நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 21 டிசம்பர், 2013

காதலர் தின ராட்சதனை மடக்கிய பிரான்ஸ் பொலிசார்

இத்தாலி நாட்டைச் சேர்ந்த தொடர் கொள்ளைகாரன் பிரான்ஸ் பொலிசாரிடம் சிக்கியுள்ளான்.
இத்தாலியை சேர்ந்த கேலியாரே என்பவன் “கிரிமினல் மனநோயாளி”.இவன் கடந்த 1980ம் ஆண்டு 3 விலைமாதுக்களை கொன்று மற்றொருவரை காயப்படுத்தினான்.
இதனடிப்படையில் இவன் பல வருடங்கள் மருத்துவமனையில் கிரிமினல் மனநோயாளிகளின் வார்டில் உள்ள அறைகளில் தங்க வைக்கப்பட்டான்.

இதனைதொடர்ந்து கடந்த 1990ம் ஆண்டு அம்மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய இக்கொலைகாரன் தன் பெண் நண்பர் ஒருவரின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பித்துள்ளார்.
இதுகுறித்து அன்ஸா என்ற செய்திநிறுவனம் விடுத்த அறிக்கையில், இத்தாலியை சேர்ந்த கேலியாரே என்ற நபர் சைக்கோ கொலைகாரன் ஆவான். இவன் தொடர் கொலை செய்வது மட்டுமல்லாது

கொள்ளை, கற்பழிப்பு, போதைப் பொருள் கடத்தல், ஆயுதங்கள் வைத்திருத்தல் போன்ற பல்வேறு குற்றங்களை செய்த குற்றவாளி என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொலிஸ் கண்ணில் மண்ணை தூவ எண்ணிய கேலியாரே இத்தாலிய சிறையிலிருந்து தப்பி வந்து பிரான்ஸிலுள்ள “பிரெஞ்சு ரிவேரியாவில்” பதுங்கியுள்ளான்.
ஆனால் இத்தாலிய பொலிசார் அளித்த தகவலின் பெயரில் பிரெஞ்சு பொலிசார் இவனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் இத்தாலிய ஊடகங்கள் இக்கொலையாளியை “வேலண்டைன் சீரியல் கில்லர்” (காதலர்தின தொடர் கொலைகாரன்) என்றும் ”வேலைடைன்ஸ் டே மான்ஸ்டர்” (காதலர் தின ராட்சதன்) எனவும் வர்ணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக