நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 19 டிசம்பர், 2013

பிரித்தானிய பாடகருக்கு 35 வருட சிறை பாலியல் துஷ்பிரயோக வழக்கில்!!

 இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த ராக் இசைக்குழு லாஸ்ட்புராபெட்ஸ் என்பதாகும். இந்த இசைக்குழுவின் பாடகர்களில் ஒருவரான இயன் வாட்கின்ஸ்(36) சிறுவர் பாலியல் குற்றங்களுக்காக நேற்று 35 வருட சிறைத்தண்டனை பெற்றுள்ளார். இவர் மீது மொத்தம் 13 வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. இவருடன் இரண்டு குழந்தைகளின் தாய்மார்களும் இந்தக் குற்றச்சாட்டில் இணைக்கப்பட்டிருந்தனர். கடந்த மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையில் இவர்கள் அனைவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
   
தான் காவல்துறை அதிகாரியாகப் பணிபுரியும் கடந்த 28 வருடங்களில் இதுவே தன்னை மிகவும் பாதித்த வழக்காகும் என்று தெற்கு வேல்ஸ் பகுதியின் மூத்த காவல்துறை அதிகாரியும், துப்பறியும் நிபுணருமான பீட்டர் டோய்லே தெரிவித்துள்ளார். இதுதவிர ஜெர்மனியிலும், அமெரிக்காவிலும் இதுபோன்ற குற்றங்களில் இயன் வாட்கின்ஸ் ஈடுபட்டுள்ளாரா என்பதையும் ஆராய்ந்து கொண்டிருப்பதாக இவர் கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட இசைத்தட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்திருந்த இந்தக் இசைக்குழு வாட்கின்ஸ் மீது சுமத்தப்பட்ட குற்றத்தினால் கடந்த அக்டோபர் மாதம் பிரிந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக