ஒஸ்திரியாவில் இடம்பெறும் சிறிலங்காவின் 73வது சுதந்திர தின வைபவத்திற்கு அமைவாக ஒஸ்திரியாவில் விற்பனை செய்யக்கூடிய இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் 30 பொருட்களுக்கு போட்டிமிகு விநியோகஸ்தர்களை கவருவதற்கு அந்நாட்டிலுள்ள எம் டி சி எக்ஸோடிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
எம் டி சி எக்ஸோடிக் வர்த்தக தொகுதியின் ஒத்துழைப்புடன் இலங்கையின் தயாரிப்புகளை எந்தவித செலவுகளுமின்றி வியன்னாவில் உள்ள நகர் மத்திய நிலையத்தில் காட்சிப்படுத்துவதற்கான வசதிகளை செய்வதற்கு அங்குள்ள இலங்கை தூதரகம் தற்பொழுது நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளது.
இந்த முயற்சியின் மூலம் இலங்கை உற்பத்திக்கு ஒஸ்திரியாவில் புதிய சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு முடியுமென நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம் டி சி எக்ஸோடிக் என்ற நிறுவனம் வலுவான நுகர்வோரை அடிப்படையாகக் கொண்ட ஒஸ்திரியாவில் பிரபலமிக்க அங்காடி வர்த்தக வலைப்பின்னலாகும். இதன் மூலம் இலங்கை தயாரிப்புகளை சந்தைப் படுத்துவதற்கும், அதனை வர்த்தக ரீதியில் மேம்படுத்துவதற்கும் பெரும் மேடையாக இது அமையும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக