நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

பிள்ளைக்கு பாலூட்டிய தாயாருக்கு 100 பவுண்டு அபராதம்!

பிரித்தானியாவில் வாகன நிறுத்தம் ஒன்றில் குழந்தைக்கு பாலூட்டிய தாயார் ஒருவருக்கு அபராதமாக 100 பவுண்டு விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் Northumberland மாகாத்தைச் சேர்ந்த 27 வயது கெல்லி ஜான்சன் என்பவர் தமது 7 கிழமைகள் பிராயம் கொண்ட குழந்தையுடன் வணிக வளாகமொன்றில் சென்றுள்ளார்.
அப்போது அந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான பாலூட்டும் அறையில் தமது குழந்தைக்கும் பாலூட்டியுள்ளார்.
இதனிடையே அந்த வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இவரது வாகனத்திற்கு குறிப்பிட்ட நேரத்தை விட அதிக நேரம் நிறுத்தப்பட்டிருந்ததாக கூறி 100 பவுண்டு அபராதம் செலுத்த கேட்டுள்ளனர்.
அந்த வளாகத்தில் இலவசமாக 3 மணி நேரம் வாகனத்தை நிறுத்தலாம் என்ற நிலையில், கெல்லி ஜாப்சன் அதிகப்படியாக 20 நிமிடங்கள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமது குழந்தைக்கு சுகவீனம் உள்ளதால் மட்டுமே தாம் தாமதிக்க காரணம் என தமது நிலையை விளக்கியும் குறிப்பிட்ட நிர்வாகத்தினர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர்.
மேலும், அந்த வணிக வளாகத்தில் உள்ள ஏதேனும் ஒரு அங்காடியில் பொருள் வாங்கியதற்கான ரசீதை ஒப்படைத்தால், அபராத தொகையை ரத்து செய்வதாகவும் அந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் அந்த சலுகையை பெறும் நிலையில் கெல்லி இல்லை என கூறப்படுகிறது. இதனிடையே கெல்லி தமது நிலையை எடுத்துக் கூறியும் குறிப்பிட்ட நிர்வாகத்தினர் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக கூறி குற்றம்சாட்டியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக