நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 30 மார்ச், 2016

விலங்கிட்டு விலங்குகள் போன்று வாழும் மன நோயாளிகள்!?

இந்தோனேஷியாவில் உள்ள கிராமங்களில் மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளை கையில் விலங்கிட்டு இருட்டிய அறையில் அடைத்துவைத்துள்ளது அதிர்ச்சியை 
ஏற்படுத்தியுள்ளது.
இந்த இடங்களை பார்க்கையில் ஒருவித அச்சம் ஏற்படுகிறது, இந்தோனேஷியாவின் Sidoharjo, Karangpatihan மற்றும் Krebet ஆகிய கிராமங்களின் ஒதுக்குப்புறமாக உள்ள இடங்களில் சிறு சிறு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த அறைகள் வெளிச்சம் கூட இல்லாமல், இருட்டாக காணப்படும், அதில் இந்நோயாளிகளை கையில் விலங்குகள் போன்று அடைத்து வைத்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.
டவுன் சின்ட்ரோம் (Down’s Syndrome) குறைபாட்டால் பாதிக்கப்பட்ட இவர்கள், Kampung Idiot என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர். 10 முதல் 50 வயதுக்குட்பட்டர்கள் என, சுமார் 400 பேர் வரை அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்.
கால்கள் மடங்கிய நிலையில் நடக்கமுடியால் இருத்தல், கண்பார்வை குறைபாடு, உடல் பாகங்கள் வளர்ச்சியின்மை, கேட்கும் திறனற்றல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களே
 இங்கு அதிகம்.
ஊட்டச்சத்தின்மை மற்றும் அயோடின் பற்றாக்குறை காரணமாகதான் இதுபோன்று குறைபாடுடைய குழந்தைகள் இந்தோனேஷியாவில் பிறக்கின்றனர் என இந்தோனேஷிய அரசாங்கம்
 தெரிவித்துள்ளது.
இவர்களது பெற்றோர்கள் மாதத்திற்கு 30 முதல் 50 டொலர் வரை சம்பாதிப்பதால், அத்தொகையை வைத்து இவர்களை முழுமையாக பராமரிக்க முடியாத காரணத்தால் இவ்வாறு அனுப்பிவிடுகின்றனர்.
இந்தோனேஷிய அரசு 1977 ஆம் ஆண்டு விலங்குகள் போன்று அடைத்துவைப்பதை தடை செய்தது, ஆனால் தற்போது அது நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மனித உரிமை அமைப்பு வளியிட்டுள்ள அறிக்கையில், இந்தோனேஷியாவில் 57,000 பேர் விலங்குகள் போன்று அடைத்துவைக்கப்படும் நடைமுறையால் பாதிக்கப்பட்டுள்ளனர், தற்போது இதன் எண்ணிக்கை 18,800 ஆகும் எனக்கூறியுள்ளனர்.
அவர்கள் நரகத்தில் தான் வாழ்கின்றனர், இது ஒருவகை சித்ரவதை ஆகும், இந்தோனேஷியாவின் கிராமப்புறங்களில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் தான் மனிதர்களுக்கு இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன என கூறியுள்ளது.
இந்தோனேஷியாவில் சுமார் 14 மில்லியன் பேர், மனவளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர், இவர்களில் 15 வயதுக்குட்பட்டவர்களே அதிகம் எனக்கூறியுள்ளது.
இந்நிலையில், இந்தோனேஷியாவில் குறைபாடுகள் குறித்து ஆராய்ச்சி நடத்தி வரும் ஆராய்ச்சியாளர், Kriti Sharma கூறியதாவது, 2016 ஆம் ஆண்டில் மனநலம் குன்றியவர்கள் யாரையும் விலங்கிட்ட நிலையில் அடைத்துவைக்கவில்லை, ஆனால் மீண்டும் மீண்டும் இதுபோன்ற குற்றச்சாட்டு வருகின்றது.
இந்தோனேஷியாவில் 48 மனநல மருத்துவமனைகள் உள்ளன, இவைகளில் அதிக மருத்துவமனைகள் நகரப்புறங்களில் உள்ளன, 250 மில்லியன் மக்கள் தொகையில், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் அரிதாகவே சிகிச்சை பெற்றுக்கொள்கின்றனர் எனக்கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக