நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 16 மார்ச், 2016

ஜேர்மனியில் சிகரெட் கொடுக்க மறுத்த நபர் மீது ’ஆசிட்’ வீசிய சிறுமி¨!

ஜேர்மனி நாட்டில் சிகரெட் கொடுக்க மறுத்த நபர் மீது 16 வயது சிறுமி ஒருவர் ஆசிட் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மன் தலைநகரான பெர்லினில் நேற்று இரவு 8.30 மணியளவில் பெயர் வெளியிடப்படாத 16 வயது சிறுமி ஒருவர் சாலையில் நடந்து 
சென்றுள்ளார்.
அப்போது, அங்கு வந்த 42 வயதான நபரை நோக்கி சென்ற அந்த சிறுமி சிகரெட் ஒன்று கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், அந்த நபர் சிகரெட் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சிறுமி அவர் தலை மற்றும் முகத்தில் ஆசிட்டை
 ஊற்றியுள்ளார்.
அலறி துடித்த நபர் சிறுமியை பிடிக்க முயற்சி செய்துள்ளார். நபரிடம் தப்பி ஓடிய சிறுமியை விரட்டி சென்று மடக்கி பிடித்துள்ளார். அப்போது, சிறுமியின் கால்களிலும் அந்த ஆசிட் பட்டதாக கூறப்படுகிறது.
சிறுமியை தனது கட்டுப்பாட்டில் வைத்த அந்த நபர் உடனடியாக பொலிசாரை அழைத்துள்ளார்.
விரைந்து வந்த பொலிசார் இருவரையும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் பேசியபோது, ‘நபர் மீது வீசப்பட்ட திரவகத்தின் வகை குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், எனினும், அது ஆபத்தை விளைவிக்கும் ஆசிட் வகையை சேர்நதாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக