நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

பெண் மேயரை ஜேர்மனியில் கத்தியால் குத்திய நபர்

ஜேர்மனியில் குடியேற வரும் அகதிகளுக்காக குரல் கொடுத்த பெண் மேயர் ஒருவரின் கழுத்தை கத்தியால் அறுத்த நபர் மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.
ஜேர்மனியை சேர்ந்த Henriette Reker என்ற பெண் மேயர் கடந்த அக்டோபர் மாதம் நகராட்சி தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
அப்போது, கூட்டத்திலிருந்து பாய்ந்த 44 வயதான நபர் ஒருவர் மேயரின் கழுத்தை குறிவைத்து கத்தியால் 
அறுத்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மேயரை பாதுகாவலர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தினர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் அமோக வாக்குகள் பெற்று அந்த தேர்தலில் மகத்தான வெற்றியையும் பெற்றார்.
இவர் மேயர் மட்டுமின்றி, கலோங் நகரில் அகதிகளுக்கு தேவையான சேவைகளை இவர் தொடர்ந்து செய்து 
வருகிறார்
மேயரை தாக்கிய நபரை கைது செய்து விசாரணை செய்தபோது, அவர் அகதிகளுக்கு எதிரானவர் என்றும், ஜேர்மனி நாட்டில் அகதிகளை அதிகளவில் அனுமதிக்க மேயர் குரல் கொடுத்த காரணத்திற்காக அவரை தாக்கியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நபரை சிறையில் அடைத்த பொலிசார் அவர் மீது கொலை முயற்சி வழக்கை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், நபர் மீதான விசாரணை நேற்று Dusseldorfநகர நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.
நபரின் குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 5 வருடங்களுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக