நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 23 அக்டோபர், 2019

பேரதிர்ச்சி தரும் செய்தி உலக மக்களின் மாபெரும் கலைக்களஞ்சியத்திற்கு மூடுவிழா

சர்வதேச ரீதியாக பலரின் அறிவுப்பசிக்கு ஊட்டமாகவும், ஈடற்ற ஞானத்தை அளிக்கும் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா விரைவில் ஸ்தம்பிக்கும் நிலையை அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வௌியாகியுள்ளது.அரிய பல தகவல்களை
 தன்னகத்தே பொதிந்து வைத்திருக்கும் நவீன உலகின் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா நிதி நெருக்கடியால், தள்ளாட்டத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.வரலாற்றுக் காலத்தில் நமது வாழ்நாளுக்கு முற்பட்ட நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை பற்றிய அரிய தொகுப்புகள் ‘என்சைக்லோப்பீடியா’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் புத்தக தொகுப்புகளாக முன்னர் 
வெளிவந்தன.
ஆங்கில எழுத்துகளின் அகரவரிசைப்படி பல்வேறு தொகுப்புகளாக வெளியான இந்த புத்தகங்களின் மூலம் நாம் அறிய விரும்பிய தகவல்கள் அனைத்தையும் விளக்கப்படங்களுடன் தெரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.ஆனால், இந்த புத்தகங்கள் ஒவ்வொன்றும் பலநூறு பக்கங்களை கொண்டதாகவும் முழு தொகுப்பும் பல நூறு டொலர்கள் விலையிலும் இருந்ததால் ஏழை-எளியவர்களால் இவற்றை பெற்று பயனடைய முடியாத நிலை ஏற்பட்டது.என்சைக்லோப்பீடியா
 புத்தக தொகுப்பு
எனினும், முக்கிய நூலகங்களில் ‘குறிப்புதவி நூல்கள்’ என்ற பகுதியில் இவை வைக்கப்பட்டிருந்தன. சாதாரண மக்களால் இந்த புத்தகங்களை சொந்தமாக்கி கொள்ள இயலாமல் போனாலும் தேவையான குறிப்புகளை பெற ‘என்சைக்லோப்பீடியா’ தொகுப்புகள் உறுதுணையாக அமைந்தன.சில ஆண்டுகளுக்கு பின்னர் புதுப்பிக்கப்பட்ட 
பதிப்புகளாக வெளியாகும் ‘என்சைக்லோப்பீடியா’ புத்தகங்களில் முந்தைய பதிப்புக்கு பிறகு நடைபெற்ற மேலும் பல சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.நாளடைவில் உலகளாவிய அளவில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி அபாரமான வளர்ச்சியை அடைந்தது. கணிணி, மின்னணு எழுத்தியல் முறை அதிகரித்தது. இந்தநிலையில், இணையத்தளத்தின் பயன்பாடு 
தவிர்க்க முடியாத அம்சமாக மாறியது.எழுத்துகளாக அச்சுக்கோர்த்து, மையால் காகிதத்தில் அச்சிட்டு புத்தகமாக தயாரித்து விற்பனை செய்த காலம் மாறி, இணையத்தின் வழியாக மின்னணு முறையில் கணிணியில் புத்தகங்களின் பக்கங்களை காணும் நிலை உருவானது.இவ்வாறு சில தகவல்கள் பல இடங்களில் பரவிக்கிடக்கும் நிலையை
 மாற்றி அனைத்து தகவல்களையும் கலைக்களஞ்சியமாக ஒரே இடத்தில் குவியலாக படைக்கும் எண்ணம் அமெரிக்காவை
 சேர்ந்த ஜிம்மி வேல்ஸ் என்பவருக்கு தோன்றியது.இதன் விளைவாக ‘என்சைக்லோப்பீடியா’ புத்தகத் தொகுப்புகளைப்போல் இணையத்தளத்தின் வாயிலாக ஓர் அறிவுக்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சிகளை ஆரம்பித்தார்.விக்கிப்பீடியா’ என்ற பெயருடன் 15-1-2001 அன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையவழி அறிவுச்சேவைக்கு இன்று 18 வயதாகின்றது.

ஜிம்மி வேல்ஸ்

தற்போது அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள ’விக்கிப்பீடியா’ நிறுவனத்தின் படைப்புகளுக்கு தனிப்பட்ட முறையில் பிரதான ஆசிரியர்கள் என்று எவரும் இல்லை.உலகின் பல்வேறு விவகாரங்கள் மற்றும் பிரபலங்கள், முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்புகளை தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து இந்த ’விக்கிப்பீடியா’ இணையப்பக்கத்தில் தனித்தனி தலைப்புடன் பதிவு செய்கின்றனர்.
இந்த தகவல் திரட்டுகளை எல்லாம் பாதுகாப்பதற்காக ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றைகளை விலைகொடுத்து பெறுவதற்கும், தகவல் திரட்டுகளை எல்லாம் எண்மாண கோப்புகளாக சேகரித்து, பாதுகாத்து சர்வர்களின் மூலம் பயனாளிகளுக்கு அளிப்பதற்கும் ஏராளமான பணம் தேவைப்பட்டாலும் வர்த்தக நோக்கம் ஏதுமின்றி, பயனாளிகளின் அறிவுப்பசிக்கு தேவையான அம்சங்கள் அனைத்தும் இங்கு இலவசமாகவே கிடைத்து வருகின்றன.இந்நிலையில், சில தகவல்களை தேடி விக்கிப்பீடியா பக்கத்துக்கு செல்லும் வாசகர்களுக்கு அந்நிறுவனத்தின் சார்பில் ஒரு அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, சில விக்கிப்பீடியா பக்கங்களின் முகப்பில் ஒரு விண்ணப்பம் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.அனைத்து வாசகர்களும் அறிவது.., விக்கிப்பீடியாவின் சுதந்திரத்தை நீங்கள் பாதுகாத்து நிலைநாட்ட ஆண்டுக்கு ஆயிரம் டொலர் என்ற அளவில் உங்களிடமிருந்து நன்கொடைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால், 99 சதவீதம் பேர் அப்படி தருவதில்லை.

என்சைக்லோப்பீடியா புத்தகத்தின் உள்பக்கங்கள்
இதை வாசிக்கும் அனைவரும் ஒரு டொலரையாவது அன்பளிப்பாக அளித்தால்தான் இனிவரும் ஆண்டுகளுக்கு அபிவிருத்திக்கான பாதையில் விக்கிப்பீடியாவை அழைத்துச் செல்ல இயலும்.லாபநோக்கமற்ற முறையில் இந்த விக்கிப்பீடியாவை நாங்கள் ஆரம்பித்த போது இதனால் ஏற்படப்போகும் பொருளிழப்பு பற்றியும் இதற்காக நீங்கள் வருத்தப்பட நேரிடும் என்றும் பலர் எச்சரித்தனர்.

ஆனால், விக்கிப்பீடியா வர்த்தக ரீதியாக மாற்றப்பட்டு விட்டால் அதனால் இந்த உலகிற்கு பேரிழப்பு என்று நாங்கள் கருதினோம். ஞானத்தை விரும்பும் அனைவரையும் விக்கிப்பீடியா ஒன்றிணைத்து வருகிறது. படைப்பாளிகள், வாசகர்கள் மற்றும் சில கொடையாளர்கள் ஆகியோர் நம்மை வாழ்வித்து வருகின்றனர்.நம்பகத்தன்மை மற்றும் நடுநிலைத்தன்மை மாறாத எண்ணற்றத் தகவல்களை இங்கு பதிவிட்டு உங்களுக்காக உழைக்கும் மக்களை உள்ளடக்கிய சமுதாயமாக திகழும் விக்கிப்பீடியா இணையத்தில் உயிர்ப்புடன் இருக்கவும் வளரவும் உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள்’ என அந்த தகவலில்
 குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக