நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 22 நவம்பர், 2018

நாட்டில் இணையத்தின் மூலம் ஆவணங்களை உடன் பெறலாம்

இலங்கையில் முதன் முறையாக இணையத்தின் மூலம் முக்கிய ஆவணங்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
நாட்டின் எல்லாப் பாகங்களிலும் இருந்து மக்கள் தங்களின் விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை இணையத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்
 தெரிவித்துள்ளார்.
 பொது மக்கள் இதற்கான விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்வதற்கான கட்டணத்தினை செலுத்தி உடனடியாக பிரதிகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
 கால விரயத்தினையும் பண விரயத்தினையும் தவிர்க்கும் முகமாக அரசாங்கம் இவ்வாறான செயற்திட்டத்தை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இணையக் கணினி வசதியின் ஊடாக இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த வசதிகளை பொது மக்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளார்.
 1960 ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையான பதிவுகளை எதிர்வரும் 29ம் திகதி முதல் வார நாட்களில் திங்கட்கிழமை முதல் பெற்றுக்
 கொள்ள முடியும்.
 தற்போது அந்த அந்தப் பிரதேச செயலகப் பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை மாத்திரமே பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி நடைமுறையில் உள்ளமை 
குறிப்பிடத்தக்கது. 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக