நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 8 நவம்பர், 2018

கண்ணீரில் மூழ்கடித்த இந்தோனேஷிய விமான விபத்து திட்டமிட்ட சதியா

உலக மக்களை கண்ணீரில் மூழ்கடித்த இந்தோனேசிய விமான விபத்தானது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்ற தகவல் கசியத்துவங்கியுள்ளன.189 பேரை பலிவாங்கிய போயிங் 737 மாக்ஸ் 8 ரக விமானம் தொடர்பில் அதிகாரிகள் தரப்பில் ஏற்பட்ட கடும்
 அக்கறையின்மையே
 முக்கிய காரணம் எனவும் தெரியவந்துள்ளது.குறித்த விமானத்தின் Flight Data Recorder-ல் பதிவான தகவல்களின் அடிப்படையிலேயே விமான விபத்து தொடர்பான காரணிகள் அம்பலமாகியுள்ளன.
மட்டுமின்றி விபத்தில் மர்மம் இருப்பதாக 
பயணிகளின் உறவினர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.இத்தனை பிரச்னைகள் இருந்து குறித்த விமானத்தை ஏன் பயணத்திற்கு அனுமதித்தீர்கள் என்ற கேள்வியும் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் வேகத்தை காட்டும் கருவியானது தொடர்புடைய விமானத்தின் கடந்த 4 பயணங்களிலும் கோளாறாக இருந்தது என தெரியவந்துள்ளது.மேலும், விபத்துக்குள்ளான 
விமானத்தின் CVR எனப்படும் Cockpit Voice Re
corder இதுவரை நிபுணர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.விமானம் புறப்பட்டு வெறும் 13 நிமிடங்களிலையே 
விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்துள்ளது.இச்சமயம் விமானிகள் பேசிக்கொண்ட உரையாடல்கள் பதிவான கருவி கிடைக்கும் எனில் விபத்துக்கான முக்கிய ஆதாரம் சிக்கும் 
என கூறப்படுகிறது.
இதனிடையே 737 போயிங் விமானத்தின் வேகத்தை காட்டும் கருவியில் கோளாறு இருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு போயிங் அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.
சர்வதேச அளவில் இதுவரை போயிங் நிறுவனம் 219 விமானங்களை கைமாறியுள்ளனர். மேலும் அடுத்த சில ஆண்டுகளில் மொத்தம் 4,564 விமான கட்டுமானங்களுக்கான ஒப்புதலையும் பல்வேறு நிறுவனங்களில் இருந்தும்
 பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு முதல் சேவையை துவங்கிய போயிங் 737 மாக்ஸ் ரக விமானம் விபத்தில் சிக்குவது இது முதல் 
முறையாகும்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக