நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 25 அக்டோபர், 2018

இலங்கைப் பெண்ணுக்கு டுபாய் நாட்டில் அடித்த அதிஷ்டம

டுபாய் நாட்டில் Duty free அதிஷ்டலாபச் சீட்டின் மூலம் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மாபெரும் பரிசு கிடைத்துள்ளது.குறித்த அதிஷ்டலாபச் சீட்டு குலுக்கல் டுபாயில் நேற்று நடந்தது.
இதில் இலங்கையைச் சேர்ந்த சஜீவா நிரஞ்சனா என்ற பெண்ணுக்கு 3ஆவது பரிசு கிடைத்துள்ளது.இதில் அவருக்கு ரேஞ்ச் ரோவர் அதி சொகுசு கார் பரிசாக கிடைத்துள்ளது.2018 ஆம் ஆண்டின் புதிய வெளியீடுகளில் ஒன்றாக ரேஞ்ச் ரோவர் கார் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இந்த கார் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கிடைத்துள்ளமை பெரிதும்
 பேசப்படுகின்றது.
இதேவேளை, இந்த அதிஷ்டலாபச் சீட்டு குலுக்கலில் இந்தியரான சவுரவ் தேவ் என்பவருக்கு முதல் பரிசு கிடைத்துள்ளதுடன், இவருக்கு இந்திய மதிப்பில் சுமார் 7.34 கோடி ரூபாய் பரிசாக
 கிடைத்துள்ளது.
இரண்டாவது பரிசாக பி.எம்.டிபிள்யு சொகுசு கார் இந்தியரான அஜித் பாபு என்பவருக்கு கிடைத்துள்ளது. Duty free lottery டிக்கெட் ஒன்றின் விலை 28 அமெரிக்க டொலராகும். எனவே இதை பெரும்பாலான நடுத்தர வர்க்கத்து மக்கள் ஆர்வத்தோடு வாங்குகிறார்கள்.
இது தொடர்பில் முதல் பரிசு வென்ற இந்தியரான சவுரவ் தேவ் கருத்து தெரிவிக்கையில், "எனக்கு முதல் பரிசு கிடைத்துள்ளதை இப்போதுவரை என்னால் நம்ப முடியவில்லை. இந்தப் பரிசு எனக்கு புதிய வருங்காலத்தையும், என் குடும்பத்துக்கு மிகப்பெரிய வாழ்வையும் மிக நீண்டகாலத்துக்கு அளிக்கும்"
என்று கூறியுள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக