நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 17 மே, 2020

ஸ்பெய்னில் நோய்களை எதிர்த்துப் போராடி வென்று மீண்டு வந்த 113 வயதுப் பெண்மணி

ஸ்பெய்னில் மிகவும் வயதான பெண்மணி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்.Maria Branyas என்ற 113 வயதான பெண்மணியே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்.ஸ்பெய்ன் முடக்கப்பட்ட பின்னர் இவருக்கு கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
சில வாரங்கள் சுயமாக தனிமைப்படுத்திக்கொண்ட பின்னர், இந்த பெண்மணி குணமடைந்துள்ளார்.அவருக்கு சிறியளவிலான நோய் அறிகுறிகளே தென்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மரியா என்ற இந்த பெண்மணி 1919-1919 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட காய்ச்சல் நோய், 1936-1939 ஆம் ஆண்டுகளில் ஸ்பெய்னில் நடந்த 
சிவில் யுத்தத்தின் போது பரவிய கொடிய நோயையும் வெற்றிகரமாக எதிர்கொண்ட பெண் என்பது 
இதன் மூலம் தெளிவாகியுள்ளதாக ஊடகங்கள் கூறியுள்ளன.அவர் குணமடைந்துள்ளார். அவர் மிகவும் சிறப்பானவர். தனது அசாதாரண நிலைமை சம்பந்தமாக தெளிவுப்படுத்த
 அவர் விரும்புகிறார்” என அந்தப் பெண்மணியின் மகள் கூறியுள்ளார்.மரியா 1907 ஆம் ஆண்டு தென் அமெரிக்காவின் மெக்சிகோவில் பிறந்தார். இரண்டு ஆண்டுகளின் பின் அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோவுக்கு சென்று முதலாம் உலகப் போர் நடைபெற்ற போது 
ஊடகவியலாளரான தனது தந்தையுடன் ஸ்பெய்னின் கிரோனா மாகாணத்திற்கு வந்துள்ளார்.மரியாவுக்கு மூன்று பிள்ளைகள். அவரது மூத்த மகனுக்கு தற்போது 86 வயது. மரியாவுக்கு 11 பேரன் பேத்திகள் உள்ளனர். இந்த பேரன், பேத்திகளுக்கும் 13 பிள்ளைகள் உள்ளனர். அவர் தற்போது 13 கொள்ளுப் பேரப்பிள்ளைகளின் கொள்ளுப்பாட்டி.
 எனினும்,மரியா இரண்டு தசாப்தங்களாக முதியோர் பாதுகாப்பு இல்லத்தில் வசித்து வந்தார்.கடந்த ஆண்டு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்த மரியா, தனக்கு வாழ வேண்டும் என்ற ஆசையை விட வேறு எந்த ஆசையும் இல்லை எனக் கூறியுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக