நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 7 மார்ச், 2017

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் சோதனை!

கண்டம் விட்டு கண்டம் பாயும் 4 புதிய ஏவுகணைகளை ஏவி வடகொரியா நேற்று சோதனை செய்தது. இந்த ஏவுகணைகள் எல்லை தாண்டி ஜப்பான் கடலுக்குள் நுழைந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா உள்பட பல்வேறு உலக நாடுகளில் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை, அணுகுண்டு சோதனை, ஹைட்ரஜன் குண்டு சோதனைகளை நடத்தி வருகிறது.
நேற்று மீண்டும் 4 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தி உள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணைகள் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கை தாக்கக்கூடியவை. இச்சோதனை வெற்றி பெற்றதாக வடகொரியா கூறியுள்ளது. இதில் 3 ஏவுகணைகள் 
எல்லை தாண்டி ஜப்பான் கடல் பகுதியில் சென்று விழுந்ததால் புதிய பதற்றம் உருவாகி இருக்கிறது.
இதுதொடர்பாக ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபி கூறுகையில், “வடகொரியா 4 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது. இந்த சோதனைகள் ஒரே நேரத்தில் நடந்தன. இதில் மூன்று ஏவுகணைகள்
 ஜப்பான் கடல் பகுதியில் வந்து விழுந்தன” என்றார். மேலும் வடகொரியாவின் செயல் குறித்து ஜப்பான் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே தென்கொரியாவும் இதனால் ஆத்திரம் அடைந்துள்ளது. தென்கொரியாவின் அதிபர் பொறுப்பில் இருக்கும் வாங் யோ ஆன் உடனடியாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.
மேலும் வடகொரியாவின் ராணுவ நகர்தலை தொடர்ந்து கண்காணிக்கும்படி ராணுவத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார். வடகொரியாவின் இந்த சோதனை அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப்பிற்கு விடப்பட்ட நேரடி சவால் என்று தென்கொரியா கருத்து தெரிவித்துள்ளது.
அதோடு கடந்த வாரம் அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து யாங்யாங் கடல் பகுதியில் அணு ஆயுத
 போர் பயிற்சி மேற்கொண்டன. அதற்கு பதிலடியாக வடகொரியா இந்த சோதனையில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக