பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் இலங்கையர்களுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பம் வழங்குமாறு ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் லோர்ட் தாரிக் அஹமட்டிடம்(Lord Tariq Ahmed) அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksha) கேட்டுக்கொண்டுள்ளார்.இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய அமைச்சரை, கடந்த வாரம் அரச தலைவர் அலுவலகத்தில் சந்தித்தபோது அவர் இந்த விடயத்தைக் கேட்டுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.மனித...