நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 24 ஜூன், 2022

தல்கஸ்பிடியவில் இரண்டரை வயதில் சாதனை படைத்த சிறுவன்

இலங்கை கேகாலை மாவட்டம் தல்கஸ்பிடிய எனும் ஊரைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை நுஹான் நுஸ்கி எனும் சிறுவன் உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார்.19 வினாடிகளில் அனைத்து அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம் கண்டு சர்வதேச சாதனைப் புத்தகத்தில் (International Book of Records) தனது பெயரினை பதிவு செய்து உலக சாதனை படைத்து தனது பொற்றோர்களுக்கும், நாட்டுக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம் காணும் முதலாவது...

புதன், 15 ஜூன், 2022

பிரித்தானிய பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு தேவையின்றி ரயில்களில் பயணிக்க வேண்டாம்

பிரித்தானியாவில் அடுத்த வாரம் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், தேவையின்றி ரயில்களில் பயணிக்க வேண்டாம் என்று பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதன்படி, ஐந்தில் ஒரு பகுதி ரயில் சேவைகள் மட்டுமே இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜூன் 21, 23 மற்றும் 25 ஆகிய திகதிகளில் பிரித்தானியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ள நிலையில் பாதிக்கும் மேற்பட்ட ரயில் பாதைகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பல இடங்களில்...

சனி, 11 ஜூன், 2022

கட்டுப்பாடுகளை தளர்த்த அமெரிக்கா விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கோவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான தீர்மானம் ஒன்றை அமெரிக்க எடுத்துள்ளது.இதன்படி, நாளை முதல் கோவிட் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.முன்னதாக, வேறொரு நாட்டிலிருந்து வருபவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முன்பு, கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.எனினும், கோவிட்-19 தொற்று...

சனி, 4 ஜூன், 2022

ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் உணவிலிருந்து சிமென்ட்தயாரிப்பு

வீணாக்கப்படும் உணவுக் கழிவுகளில் இருந்து கட்டுமானத்திற்கு தேவையான சிமென்ட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றுக் கூறினால் நம்ப முடிகிறதா?‘நீங்க நம்பலனாலும் அதுதான் நெசம்’ஆம். ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் தொழில்துறை அறிவியல் ஆராய்ச்சியாளர்களான கோட்டா மச்சிடா, யுயா சகாய் ஆகிய இருவரும் இணைந்து வீணாகும் உணவுக்கழிவுகளை கொண்டு கட்டுமானப் பயன்பாட்டிற்கான சிமென்ட்டை தயாரித்திருக்கிறார்கள்.சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் உணவு பொருட்களில் இருந்து...

வெள்ளி, 3 ஜூன், 2022

தாய்லாந்தில் ஒருவரின் தொண்டைக்குள் துள்ளி குதித்த மீன்

தாய்லாந்து நாட்டின் பாட்தலங் மாகாணத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் ஆர்வத்தில் நபர் ஒருவர் சென்றுள்ளார். இதற்காக நீரில் தூண்டிலை போட்டு விட்டு காத்திருந்து உள்ளார். அவரது தூண்டிலில் மீன் சிக்குவதற்கு முன், நீரில் துள்ளி குதித்தபடியே வந்த மீன் ஒன்று, அந்த மனிதரின் தொண்டைக்குள் விழுந்துள்ளது.5 அங்குலம் நீளம் கொண்ட அந்த மீன் அவரது மூக்கு வழியே வெளியேற முயற்சித்து முன்னேறி உள்ளது. ஆனால், குறுகலான பகுதியில் அதனால் வெளியே வர முடியவில்லை. தொண்டைக்கும்,...