நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 28 ஜூன், 2017

பெண்ணொருவர்கனடாவில் மர்மமான முறையில் மரணம்!

கனடாவில் தமிழ் பெண்ணொருவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
45 வயதான இரு பிள்ளைகளின் தாயான கலைச்செல்வி சாள்ஸ் ஜெயந்தன் என்பவரே உயிரிழந்தள்ளார்.

ஸ்காபிரோவில் அமைந்துள்ள Canbe உணவகத்தின் பின்புறத்தில் அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் உயிரிழந்த நிலையில் அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
Canbe உணவகம் தமிழர் ஒருவருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் அதிகாலை 1:13 மணியளவில் எரிகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டதாக அவசர உதவிப் பிரிவு 
தெரிவித்துள்ளது.
Ellesmere வீதியில் அமைத்துள்ள Canbe உணவகத்திற்கு பின்புறம் அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் கலைச்செல்வி கடுமையான தீக்காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதாக அவசர உதவிப் பிரிவினர்
 தெரிவித்தனர்.
உயிர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என அடையாளம் 
காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பின் ரொரண்டோ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 19 ஜூன், 2017

மீண்டும் லண்டனில் தாக்குதல் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்!

வடக்கு லண்டனில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Finsbury Park மசூதிக்கு வெளியில் உள்ள மக்கள் கூட்டத்தை நோக்கி வேன் சென்று மோதியுள்ளது
இன்று அதிகாலை 12.20 மணியளவில் அனர்த்தம் தொடர்பில் தகவல் கிடைத்ததாக லண்டன் பெருநகர் பொலிஸ் பேச்சாளர்
 தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு அவசர சிகிச்சை பிரிவு சென்றுள்ளது. தாக்குதல் காரணமாக உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
Seven Sisters வீதியின் ஒரு பகுதி தற்போது விசாரணைக்காக மூடப்பட்டுள்ளது.
இந்த மோதல் சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதா என்பது தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மசூதியில் ரமழான் நோன்பு துறக்கும் வேளையில் இந்த வெள்ளை நிற வாகனம் பாதசாரிகள் மீது பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் பெருமளவு முஸ்லிம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 26 மே, 2017

நீச்சல் குளம், மரக்கிளை என படபடக்க வைக்கும் பாம்புக் கோவில்!

மலேசியாவில் அமைந்திருக்கும் முருகர் கோவில், முருகர் சிலையால் மட்டுமல்ல அதன் புகழ்- பெருமைகளாலும் உயர்ந்து நிற்கிறது. மலேசிய முருகரை பார்த்து ரசிக்கும் நாம், அங்கே அமைந்திருக்கும் பழமையான பினாங்கு கோவிலை மறந்துவிடுகிறோம். இது பழமையான கோவில் மட்டுமல்ல… பாம்பும், புகையும் சூழ்ந்த விசித்திரமானக் 
கோவிலும் கூட.
பினாங்கு தீவில், சன்கை குளாங் பகுதியில் தான் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. சீன கட்டிடக்கலையில் கம்பீரமாக நிற்கும் இந்தக் கோவில், 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சூர் சோ காங் என்ற மன்னரின் நினைவாக இந்தக் கோவிலை கட்டியிருக்கிறார்கள். காங் மன்னர் பாம்புகளுக்கும், பூச்சிகளுக்கும் கரிசனம் காட்டியவர். அரண்மனைகளில் அவருடன் சேர்ந்து பாம்புகளும், பூச்சிகளும் வாழ்ந்ததாக ஒரு வரலாறு கூறப்படுகிறது.
இப்படி பாம்புகளுடன் அதிகமாக பொழுதைக் கழித்த காங் மன்னர், 65 வயதில் இறந்துவிட்டார். அதற்கு பிறகு தான் இந்த பாம்புக் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதை புத்த துறவி ஒருவர் கட்டி முடித்திருக்கிறார். மன்னரின் நினைவாக கட்டப்பட்டதால், நன்கொடை பலவழிகளில் 
இருந்தும் வந்திருக்கிறது. முதலில் காங் கோட்டையாக கட்டப்பட்ட இந்த இடம், பாம்புகளின் படையெடுப்பால் பாம்புக் கோவிலாக மாறிவிட்டது. அதனால் காங் மன்னர் சிலையுடன், பாம்புகள் தங்குவதற்கும், தொங்குவதற்கும் ஏற்ற வசதிகளையும் செய்திருக்கிறார்கள். இதனால் கோவில் முழுக்க பாம்புகள் நெளிந்து கொண்டிருக்கின்றன.
பாம்பு நீச்சல் குளம் :
கோவிலுக்குள் நுழைந்ததுமே ஒரு பிரமாண்ட மண்டபம் இருக்கிறது. அதில் அமர்ந்தபடி தான் வழிபாடு நடக்கிறது. பக்தர்கள் வழிபடுகையில் அவர்களை நோக்கி பாம்புகள் ஊர்ந்து வருகிறது. அப்படி நிகழ்ந்தால், நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். இந்த நிகழ்வு எல்லா சமயங்களிலும் 
நிகழ்வதில்லை.
ஒருசில பக்தர்களுக்கு மட்டுமே இந்த பாக்கியம் கிடைக்குமாம். இங்கு வழிபட்டவுடன் கோவிலுக்கு பின்புறத்தில் இருக்கும் பாம்பு குளத்திற்கு பக்தர்கள் செல்கிறார்கள். அதில் கொடிய விஷமுள்ள பாம்புகள் வாலை சுருட்டியபடி படுத்திருக்கின்றன. உலகில் இருக்கும் அதிபயங்கரமான விஷப்பாம்புகளை, இந்த நீச்சல் குளத்தில் பார்க்கலாம். ஆனால் அவை அனைத்தும் விஷம் நீக்கப்பட்ட பாம்புகள்.
ஆம்! 1950-ம் ஆண்டு வரை இந்தக் கோவிலில் விஷப்பாம்புகள் வளர்க்கப்பட்டன. ஆனால் தற்போது விஷம் நீக்கப்பட்ட பாம்புகளே இருக்கின்றன. இருப்பினும் பாம்பு கடித்து பக்தர்கள் இறந்த செய்தி பழைய வரலாற்றிலும் இல்லை. ஏன்.. இப்போதும் கூட பாம்புகள், பக்தர்களைப் பார்த்து கோபத்துடன் சீறியதாகவும் செய்தி இல்லை. அந்தளவிற்கு பாம்புகளை காங் மன்னர் வளர்த்திருப்பதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.
புகை சூழ்ந்த கோவில் :
நீச்சல் குளம், மரக்கிளை என கோவில் முழுக்க பாம்புகள் படர்ந்திருந்தாலும், அவை தூங்குவதற்காக பிரத்யேக ஸ்டாண்ட் அமைப்புகளை கோவில் நிர்வாகம் அமைத்திருக்கிறது. இரும்பு கம்பிகளை சுருள் வடிவில் வளைத்து, பாம்பு தூங்கும் இடமாக மாற்றி இருக்கிறார்கள். 
காலை முதல் மாலை வரை அங்கும் இங்குமாக சுற்றித்திரியும் பாம்புகளின் எண்ணிக்கை, இரவில் குறைந்து விடுகிறதாம். அதற்கான மர்மம் என்ன என்பது இதுவரை விளங்காமல் இருக்க, பினாங்கு கோவிலை மேலும் மர்மமாக்குகிறது.. ஊதுபத்தி
 புகை மண்டபங்கள்.
கோவிலை பாம்புகள் நிறைத்திருப்பது போல, புகை மண்டலமும் சூழ்ந்திருக்கிறது. புத்தமத வழிபாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் ஊதுபத்தி கலா சாரம், பினாங்கு கோவிலிலும் பின்பற்றப்படுகிறது. அதனால் பாம்புகளுக்கு இணையாக புகை மண்டலமும் 
சூழ்ந்திருக்கிறது. எந்நேரமும் கோவில் புகைமூட்டமாக இருப்பதால், பினாங்கு கோவிலை… ‘பினாங்கு வானம்’ என்றும் அழைக்கிறார்கள். இதுதவிர ‘அசூர் மேகம் நிரம்பிய கோவில்’ என்றும் 
சிறப்பிக்கிறார்கள்.
பாம்புகள் பக்தர்களை கடிக்காமல் இருக்க, கோவில் நிர்வாகத்தினர், ஊதுபத்தி புகைகளை பயன்படுத்துவதாகவும், புகையினால் பாம்புகள் மயங்கி கிடப்பதாகவும் ஒருசிலர் புகார் தெரிவித்தாலும், பாம்பு கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதிய வண்ணமே இருக்கிறது. 
காங் மன்னரின் பிறந்த நாள் தான், இந்த ஆலயத்தின் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த சமயங்களில் இந்தோனேஷியா, சீனா, ஜப்பான், இந்தியா என பல நாடுகளில் இருந்து பக்தர்கள் குவிகிறார்கள். இவர்களுக்கு போட்டியாக திருவிழா சமயங்களில் விஷப் பாம்புகளும் குவிவதுதான் ஆச்சரியம்.
என்ன தான் பாம்புக் கோவிலாக இருந்தாலும், பாம்புகளை கையில் தூக்கவோ, தொடவோ பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஏனெனில் பாம்புகளை பாதுகாக்கவும், பக்தர்களை பாதுகாக்கவும் ஏராளமான சட்டத்திட்டங்களை கோவில் நிர்வாகம் கடைப்பிடித்து 
வருகிறது.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>



புதன், 24 மே, 2017

குண்டுத்தாக்குதல் பிரித்தானியாவில் – 20 பேர் பலி, 50 பேர் காயம்

பிரித்தானியாவில் அமைந்துள்ள மன்செஸ்டர் அரினா மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் 52 க்கும் அதிகமானவர்கள் 
காயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு பிரித்தானிய நேரப்படி இரவு 10.35 மணியளவில் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் 
தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க பாப் இசை பாடகியான அரியானா கிராண்டேயின் இசை நிகழ்ச்சி இடம்பெற்ற இடத்தினில் மேற்படி குண்டுத் வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இதனால் பிரித்தானியாவில் பதற்ற நிலை தோற்றுவிக்கப்பட்டள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குறித்த தாக்குதல் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் என அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளார்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மன்செஸ்டர், விக்டோரியா புகையிரத நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், அதனூடாகச் செல்லும் சகல புகையிரத பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அத்துடன் குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் அவசர உதவிகளுக்காக தொலைபேசி இலக்கத்தையும் 
கொடுத்துள்ளனர்.
மன்செஸ்டர் குண்டு வெடிப்பையடுத்து பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தனது பிரச்சார நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் 
தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>


திங்கள், 22 மே, 2017

ஆஸ்திரேலியா சட்டவிரோதமாக தங்கியுள்ள அகதிகளை வெளியேற்ற முடிவு!!

ஆஸ்திரேலியா நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 7500 அகதிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு குடியுரிமை மந்திரி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா நாட்டில் இலங்கை, மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். முறையான காரணங்கள் இல்லாமல் சிலர் தங்கியிருப்பதாகவும், இவர்களால் அரசுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படுவதாகவும் பல்வேறு கட்சியினர் 
குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில், அகதிகளாக பதிவு செய்வதற்கு போலியான காரணங்களை அளித்து சட்டவிரோதமாக அங்கு தங்கியிருக்கும் சுமார் 7500 பேரை நாட்டை விட்டு வெளியேற்ற முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு குடியுரிமை மந்திரி பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.
2013-ஆம் ஆண்டுக்கு முன்னர் ஐந்தாண்டு காலத்தில் வந்த சுமார் 50,000 பேரில், 20,000 பேருக்கு அப்போதைய தொழிலாளர் கட்சி அரசு புகலிடம் அளிக்க முடிவு செய்தது. மேலும் 30,000 பேரின் நிலை குறித்து ஐயம் எழுப்பியிருந்தது. இந்நிலையில், அவர்களில் சுமார் 7,500 பேர் முறையான காரணம் இல்லாமல் அகதிகள் அந்தஸ்து பெற முயல்வதாகத் தெரியவந்துள்ளதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்
 தெரிவித்தார்
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>



ஞாயிறு, 14 மே, 2017

திருடன் படத்தின் முன் அட்டைப்படம் வெளியாகியுள்ளது

யேர்மனியில் இருந்து மிகவிரைவில் வெளிவர இருக்கும் திருடன் குறும் படம்
அதற்கான காட்சிப்படுத்தல் நிறைவாகி படத்தொகுப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றது இளம் நாயகன் சுரேந்தர் உடன் மற்றும் பல கலைஞர்கள் இணைந்த நடிப்பில் இளமைத்துடிப்பின் வேகத்தையும் முதுமையின் ஆற்றலையும் வித்தியாசமான கதை ஓட்டத்தில் வெளிவர உள்ளது திருடன் குறும்படம்

இதற்கான கதை நெறியாழ்கை ஒளிப்பதிவு படத்தொகுப்பு அனைத்தையும் கமல் அவர்கள் சிறப்பாக செயலாற்றியுள்ளார் ,

இவர் இதற்கு முதலும் மூன்று குறுப்படத்தை இயக்கியுள்ளார் அவையாவும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன,
இவரின் திறமை என்பது கலைஞர்களால் மதிப்பிடவேண்டும் அதை இந்த திருடன் படம் உறுதிப்படுத்தும்,
மிக விரைவில் வெளிவர இருக்கும் இந்தக் குறும்படம் Kstar Production தயாரிப்பில் சுரேந்தர் இன்னும் பலர் நடிப்பிலும் எதிர்பாருங்கள் இதன் சுருக்க படச்சுறுள் மிகவரைவில் வெளிவரும்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 13 மே, 2017

டோட்முண்ட் நகரில் திருடன் படத்தின் நிறைப்பகுதி 09.05.17 ஒளிப்பதிவாகியது

திருடன் படம் சிறப்பாக டோட்முண்ட் நகரில் ஒளிப்பதிவாகியது திரு சிவலிங்கம் அவர்களின் பி. சி .என் றவல்ஸ் பணிமனையில் ஒளிபதிவாகியுள்ளது
இதற்கான கதை நெறியாழ்கை ஒளிப்பதிவு படத்தொகுப்பு அனைத்தையும் கமல் அவர்கள் சிறப்பாக செயலாற்றியுள்ளார் ,
இவர் இதற்கு முதலும் மூன்று குறுப்படத்தை இயக்கியுள்ளார் அவையாவும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன,
இவரின் திறமை என்பது கலைஞர்களால் மதிப்பிடவேண்டும் அதை இந்த திருடன் படம் உறுதிப்படுத்தும்,
மிக விரைவில் வெளிவர இருக்கும் இந்தக் குறும்படம் Kstar Production தயாரிப்பில் சுரேந்தர் இன்னும் பலர் நடிப்பிலும் எதிர்பாருங்கள் இதன் சுருக்க படச்சுறுள் ஒரிரு நாட்களில் வெளிவரும்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>