நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 25 நவம்பர், 2017

ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத நிலையத்தில் அசம்பாவிதம்

லண்டன் ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத  நிலையத்தில் அசம்பாவித நிகழ்வு ஒன்று இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினர்  விரைந்திருக்கிறார்கள் என
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அசம்பாவித இடத்தை காவல் துறையினர் சூழ்ந்திருப்பதாக அறிவிக்கப்படுகின்ற அதேவேளை மக்களை குறித்த பகுதியை தவிர்க்குமாறும் கோரியுள்ளனர்.
மேலும்   குறித்த சம்பவம் தொடர்பான விபரங்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திங்கள், 20 நவம்பர், 2017

ஜேர்மனியில் ஸ்மார்ட் வாட்ச்களின் விற்பனைக்கு தடை!

நாட்டின் கண்காணிப்பு சட்டங்களுக்கு எதிராக செயல்படுவதால் குழந்தைகளுக்கான ஸ்மார்ட் வாட்ச்களின் விற்பனைக்கு ஜேர்மனியில் தடை செய்யப்பட்டுள்ளது.ஜேர்மனியில் குழந்தைகளுக்கான ஸ்மார்ட் வாட்சுகள் அதிகளவில் உபயோகப்படுத்தபடுகின்றன.முக்கியமாக 5-லிருந்து 12 வயதுடைய குழந்தைகளை இவை குறிவைக்கின்றன. இவ்வகை வாட்சுகளில் சிம் கார்டு கூட பொருத்தமுடியும், ஆப்ஸ் மூலம் தங்கள் குழந்தைகள் எங்கிருந்தாலும் அவர்களை கண்காணிக்கவே, உரையாடவோ
 பெற்றோரால் முடியும்.
இது ஜேர்மனியின் கண்காணிப்பு சட்டங்களுக்கு எதிராக இருப்பதையடுத்து விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் பெடரல் நெட்வொர்க் ஏஜென்சி தலைவர் ஜோசென் ஹோமன் கூறுகையில், குழந்தைகளின் பெற்றோர்கள் இவ்வகை வாட்சுகளை உடனடியாக அழித்துவிட அறிவுறுத்தியுள்ளோம்.
எங்கள் விசாரணையில் பள்ளி வகுப்பறையில் இருக்கும் குழந்தைகளையும், ஆசிரியர்களையும் பெற்றோர்கள் ஸ்மார்ட் வாட்சுகள் மூலம் கண்காணிப்பது உறுதியாகியுள்ளது.
பள்ளி நிர்வாகமும் இந்த விடயத்தில் மாணவர்கள் மீது ஒரு கண் வைக்க வேண்டும் என கூறியுள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வெள்ளி, 27 அக்டோபர், 2017

நீங்கள் பிரிட்ஜில் முட்டை வைத்து சாப்பிடாதீங்க: தீமைகள் இதோ

 .அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட, பிரிட்ஜில் வைத்து பராமரிக்கும் முட்டைகள் ஆரோக்கியமற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் மிகுந்த குளிர்ச்சியான இடத்தில் வைத்து முட்டையை பராமரிக்கும் போது, அது பால் போல் திரிந்து கெட்டு போய்விடும்.
பிரிட்ஜில் வைத்த முட்டையின் தீமைகள்?
முட்டையில் ஓடுகளில் சால்மோனெல்லா வகை பாக்டீரியா உருவாகும். இவை பாக்டீரியா தொற்றுக்களை உண்டாக்கும்.
முட்டை ஓட்டில் இருக்கும் சால்மோனெல்லா பாக்டீரியா குளிர்ச்சியான நிலையில் அதிகமாக பெருக்கம் அடைந்து, குடல் மற்றும் வயிறு தொடர்பான நோய்களை ஏற்படுத்தும்.
குறிப்பு
முட்டை பிரஷ்ஷாக இருந்து, அதன் மேல்தோல் நீங்காமல் ஒட்டிக் கொண்டிருந்தால், அந்த முட்டையை பிரிட்ஜில் 
வைக்கக் கூடாது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




பிரித்தானியவில் வதை முகாம் இலகுவில் எவரும் செல்ல முடியாத தீவு

ரஷ்ய புரட்சிக்கு பிறகு, அந்நாட்டிற்கு பிரிட்டிஷ் வீரர்கள் அனுப்பப்பட்டபோது, அவர்களின் முதல் எதிரிகளாக இருந்தது ஜெர்மானியர்கள்.
ஆனால் , அவர்கள் போல்ஷ்விக்குகளுடன் 
(ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்கள் போல்ஷ்விக்குகள் என அழைக்கப்பட்டனர்) சண்டையிடவும், அவர்களை சிறையிலடைக்கும் பணிகளிலும் ஈடுபட்டனர்.
இந்த வகையில் ரஷ்ய மண்ணில் அவர்கள் முதல் சித்திரவதை முகாமை தொடங்கினர். அந்த இடம்தான் ‘மரணத் தீவு’ என அழைக்கப்படுகின்றது.நெருங்கிச் சென்றபோது,
 என்னால் ஒரு கலங்கரை விளக்கத்தையும், சில வானொலி கோபுரங்களையும் பார்க்க முடிந்தது. நானும், என்னுடன் வந்தவர்களும் படகிலிருந்து குதித்து, பாலைவனமாக இருந்த 
கடற்கரையில்நடந்தோம்.
அங்கிருந்த நாய்கள் எங்களை சூழ்ந்து கொண்டு குரைத்தன. அவற்றுக்கு பார்வையாளர்களை பார்த்து பழக்கமில்லை. இந்த ஆள் அரவமற்ற பகுதியில் வாழக்கூடியவர்கள், எல்லை காவலர்களும், ஒரு சில வானிலை ஆய்வாளர்களும்தான்.
சோவியத் சகாப்தத்தில், இந்த மட்யக் தீவிலுள்ள அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்காக படகுகள் மூலமாக பார்வையாளர்கள் வந்தார்கள்.
எஞ்சியுள்ள சிறைக்கூடங்களின் எச்சங்களுக்கு மத்தியில் இது அமைந்துள்ளது. ஆனால் இது கடந்த 1918-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதன் பொறுப்பாளர்கள் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்ச் நாட்டவர்கள் என்பது இன்னும் குறிப்பிடத்தக்கது.
இந்த பிராந்தியத்தின் தலைநகரான, ஆங்கிலத்தில் ஆர்க்ஹான்ஜெல்ஸ்க்-ஆர்கேன்ஜெல் என அறியப்படும் நகரில் வளர்ந்த சக பணியாளரான நடாலியா கோலிஷேவா, இந்த இடத்தின் மீது பயம் இருப்பதாகவும், உள்ளூர்வாசிகள் இதனை மரணத்தீவு என அழைப்பார்கள்
 எனவும் கூறினார்.
நான் சிறுகுழந்தையாக இருந்தபோது, நீ ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை என்றால், வெள்ளையர்கள் வந்து உன்னை மட்யுக்கிற்கு தூக்கிச் சென்றுவிடுவார்கள் என மக்கள் கூறுவார்கள்.
எனக்கு அது புரியாது. மட்யக் என்றால் என்ன? வெள்ளையர்கள் யார்? என நான் கேள்வி கேட்கும் போது, எனது பாட்டி வாயை மூடு என எச்சரித்துவிட்டு, முகத்தை திருப்பிக் கொள்வார். இதற்கு அர்த்தம் இத்துடன் பேச்சு முடிந்துவிட்டது என்பதுதான். என நடாலியா
 கூறினார்.
1917-ஆம் ஆண்டு ரஷ்யப்புரட்சி ஏற்பட்ட பின்னர் வெள்ளையர்கள் என அழைக்கப்பட்ட குழுவினர் , போல்ஷ்விக்குகளுக்கு எதிரானவர்களானார்கள்.
ஜார் ராணுவத்தில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் அணியும் கிரீம் நிற சீருடைகள் மூலம் அவர்களுக்கு இந்த பெயர் வந்தது.அவர்களில் சிலர் மீண்டும் முடியாட்சி வர வேண்டும் என விரும்பிய பிற்போக்கு ராணுவ அதிகாரிகள், மற்றவர்கள் மித சோஷியலிஸ்டுகள், சீர்திருத்தவாதிகள்வர்த்தகர்கள், மீனவர்கள் 
அல்லது விவசாயிகள்.
1917-ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் போல்ஷ்விக்குகள் ஆட்சியை கைப்பற்றியபோது, ஜெர்மனி மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்சுடன் இணைந்து முதல் உலகப் போரில் ரஷ்யா தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருந்தது.
லெனின் ஆட்சிக்கு வந்ததும் உணவு
 உற்பத்தியை பெருக்கி,உயர்குடி மக்களின் நிலத்தை பகிர்ந்தளிப்பது மட்டுமல்லாமல் அமைதியையும் கொண்டு வருவேன் என தனது ஆதரவாளர்களுக்கு அவர் உறுதி அளித்தார்.
அவர் ஜெர்மனியுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மாதங்களில், கூட்டணித் தலையீடு என்ற பெயரில் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலியா மற்றும் சில நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்காண ராணுவ வீர்ர்கள் ரஷ்யாவுக்கு 
அனுப்பப்பட்டனர்.
இவர்களில் சிலர் தென் பகுதிக்கும்,  தொலைவில் உள்ள ரஷ்ய கிழக்குப் பகுதிக்கும்,  பிரிட்டனின் கீழ் இருந்த பத்தாயிரம் வீர்ர்கள் ஆர்ட்டிக் துருவப் பகுதியில் உள்ள ஆர்க்ஹான்ஜெல்ஸ்க் பகுதிக்கும் 
அனுப்பப்பட்டனர்.
அந்த பகுதியில் ஜெர்மானியர்கள் நீர்மூழ்கிக் கப்பல் தளம் அமைக்காமல் தடுக்கவும், அங்கிருக்கும் ராணுவ மையத்தை பாதுகாப்பதும் இவர்களின் பணி என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ரஷ்ய உள்நாட்டுப் போரின் ஆரம்பக்கட்டத்தில் போதுஇ இந்த வெளிநாட்டுப் படைகள் வெள்ளையர்களுக்கு ஆதரவாக இருந்தனர். வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற சில ஐரோப்பிய அரசியல் தலைவர்களுக்கு, ஐரோப்பா முழுவதும் கம்யூனிசம் பரவுவது
 கவலையை அளித்தது.
1918-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி கூட்டணிப்படைகள் ஆர்க்ஹான்ஜெல்ஸ்க் பகுதிக்கு வந்தடைந்த சில காலத்தில், அவர்கள் மக்களை சிறைபிடிக்கத் துவங்கினர்.
அவர்களுக்கு யாரை நம்ப வேண்டும் என தெரியவில்லை.யார் கம்யூனிஸ்ட்டுகள், யார் வெள்ளையர்கள் என்றும் அவர்களால் வேறுபாடு அறிய முடியவில்லை.
இதனால் சந்தேகமிருக்கும் அனைவரையும் சிறைபடுத்த அவர்கள் முடிவெடுத்தனர்.என மாஸ்கோவைச் சேர்ந்த வரலாற்றாசிரியரான லுட்மிலா நோவிக்காவா கூறுகிறார்.
மைய சிறைச்சாலையில் கைதிகள் எண்ணிக்கை அதிகரித்ததனால், பிரச்சனை ஏற்படுத்தக்கூடியவர்களாக கருதப்பட்ட கைதிகள், அங்கிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மட்யக் தீவுக்கு இடம் மாற்றப்பட்டனர்.
அங்கு முதற்கட்டமாக கொண்டு செல்லப்பட்ட கைதிகள், தங்களுக்கான சிறைச்சாலையை தாங்களே அமைக்க
 வற்புறுத்தப்பட்டனர்.
போதுமான கழிப்பறை மற்றும் மாற்று உடைகள் வசதி இல்லாததால், அங்கிருந்த கைதிகளிடம் தைபஸ் காய்ச்சல் காட்டுத்தீ போல பரவியது. அங்கிருந்த 1000 கைதிகளில், நோய் காரணமாகவோ,சுடப்பட்டோ, சித்தரவதை செய்யப்பட்டோ 300 பேர் கொல்லப்பட்டனர்.
பனிக்காலத்தில் இங்கு தட்பவெட்பநிலை 30 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக இருக்கும். இதையும் கைதிகளை சித்திரவதை செய்ய பயன்படுத்திக் கொண்ட கூட்டணிப்படைகள், அங்கு ஐஸ் செல் எனப்படும் பனிக்கட்டி அறைகளை அமைத்தனர்.
இதில் அடைக்கப்படும் கைதிகள், குளிரினால் சித்திரவதை அனுபவிப்பார்கள் அல்லது உயிரிழப்பார்கள் அல்லது தோலுறைவு காரணமாக தங்கள் கால்களை இழப்பார்கள்.
சோவியத் காலகட்டத்தில், இங்கு சித்திரவதையை அனுபவித்த போல்விஷ்க்குகள் அதிகம் நினைவு கூறப்பட்டார்கள். இந்த முகாமிற்கு அருகில் உள்ள சிறிய குன்றில், 25 அடி உயரத்தில் இவர்கள் நினைவாக நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் ,தலையீட்டாளர்களின் சித்திரவதை காரணமாக உயிரிழந்த தேச பக்தர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக அமைக்கப்பட்டது. என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
வெள்ளையர்களை போலவே போல்விஷ்க்குகளும் பல குற்றங்களை இழைத்தனர். ஆனால் அவை சோவியத் ரஷ்யாவில் பல தசாப்தங்களுக்கு குறிப்பிடப்படவில்லை. இருபுறமும் கொடுமைகள் 
அரங்கேறின.
ஆனால் அவற்றின் அளவுகள் வெவ்வேறானவை. என வரலாற்றாசிரியர் லுட்மிலா தெரிவிக்கிறார்.
வடக்கில் பல மரண முகாம்கள் போல்ஷ்விக்குகளால் உருவாக்கப்பட்டன. அவற்றில் ஆர்க்ஹான்ஜெல்ஸ்க்கில் இருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ள ஹோல்கோமோரி பகுதியில் முதல் முகாம் 
அமைக்கப்பட்டது.
இங்கு மூன்றாயிரத்திலிருந்து, எட்டாயிரம் வரையிலான கைதிகள் அடைக்கப்பட்டு, அவர்கள் கொல்லப்பட்டனர்.
இவர்களில் பலர் வெள்ளை ராணுவ அதிகாரிகள் மற்றும் குரோன்ஸ்டாட் பகுதியைச் சேர்ந்த போல்விஷ்க்குகளுக்கு எதிராக கலகம்
 செய்த மாலுமிகள்.
ஆனால், மற்றவர்கள் எதிர் புரட்சியாளர்கள் என முத்திரை குத்தப்பட்ட மதபோதகர்கள் மற்றும் சாதாரண பொதுமக்கள்
 என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 28 செப்டம்பர், 2017

குறைந்த சதுர அடி இடத்தை வாடகைக்கு தரும் மோசமான நகரங்களின் பட்டியலில் பாரீஸ்

அதிக பணம் பெற்று கொண்டு குறைந்த சதுர அடி இடத்தை வாடகைக்கு தரும் மோசமான நகரங்களின் பட்டியலில் பாரீஸும் இணைந்துள்ளது
ரெண்ட் கேப் என்னும் ஓன்லைன் வலைதள நிறுவனம் $1,500 வாடகைக்கு எவ்வளவு சதுர அடி கொண்ட அடுக்குமாடி 
வீடுகள் உலகின் முக்கிய நகரங்களில் தரப்படுகிறது என்ற ஆய்வை நடத்தியது.
இதில் பிரான்ஸின் பாரீஸ் நகரம் 25வது இடத்தில் உள்ளது. இங்கு $1,500 வாடகைக்கு 30m² இடம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு தான் கிடைப்பதாக தெரியவந்துள்ளது
இந்த பட்டியலில் தாராளமான இடம் கிடைக்கும் நகரமாக துருக்கியின் இஸ்தான்புல் முதலிடத்தில் உள்ளது. இங்கு $1,500 வாடகைக்கு 176m² அளவிலான இடம் தரப்படுகிறது
அதாவது பாரீஸை விட ஐந்து மடங்கு அதிகமாகும், பட்டியலில் இரண்டாமிடத்தில் சீனாவின் ஷாங்காய் நகரம் உள்ளது.
மூன்றாமிடத்தில் ஜெர்மனியின் பெர்லின் 139m² அளவிலான இடத்துடன் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது
இந்த விடயத்தில் பாரீஸை விட மோசமாக சான் பிரான்ஸிஸ்கோ, ஸ்விட்சர்லாந்தின் சூரிச், லண்டன் ஆகிய 
நகரங்கள் உள்ளன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 26 செப்டம்பர், 2017

கத்தியால் மனநல மருத்துவரை குத்திக் கொன்ற நோயாளி

அமெரிக்காவில் தெலங்கானாவைச் சேர்ந்த மனநல மருத்துவர் அச்சுதா ரெட்டியை நோயாளி ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியைச் சேர்ந்த அச்சுதா ரெட்டி, அமெரிக்காவில் குடியேறி மனநல மருத்துவராக பணியாற்றி வந்தார். அவர் நடத்தி வந்த கிளினிக்கில் யோகப் பயிற்சிகள் மூலம் மனநல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில் அவர் நோயாளி ஒருவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அச்சுதா ரெட்டியை கொலை செய்தவரை கான்சாஸ் காவல்துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், புதன்கிழமை இரவு 7 மணியளவில்
 நோயாளி ஒருவர் அச்சுதா ரெட்டி கிளினிக்கிற்கு வந்துள்ளார். வந்த வேகத்தில் ரெட்டியை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். ரெட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மேலாளர் நோயாளியை தடுக்க 
முயற்சித்தார்.
அப்போது ரெட்டி அங்கிருந்து ஓடி தப்ப முயற்சித்துள்ளார். ஆனால் அந்த நோயாளி விடாமல் ரெட்டியை துரத்தி பிடித்து மீண்டும் வெறிதனமாக கத்தியால் குத்தியுள்ளார். இதில், ரெட்டி ரத்த வெள்ளத்தில் சம்பவ 
இடத்திலே உயிரிழந்தார். 
மேலும் காவல்துறையினர் கொலை செய்த நோயாளியிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

மரக்கறிகள் வீதியில் விற்ற சிறுவனுக்கு கிடைத்த அதிஷ்டம்!

பிலிப்பைன்ஸில் வீதியில் காய்கறி விற்றுக் கொண்டிருக்கும் சிறுவனை பாடசாலையில் சேர்க்க தான் விரும்புவதாக பிலிப்பைன்ஸ் நடிகை ஷரோன் குனெட்டா கூறியுள்ளார்.
பொருளாதார சிக்கலால் பார்க்கவே அனுதாபப்படும் வகையில் ஒரு சிறுவன் பிலிப்பைன்ஸ் வீதியில் காய்கறி விற்றுக் கொண்டிருக்கும் படம் ஒன்று அண்மையில் இணையத்தில் வெளியானது
இதை புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள அந்நாட்டின் பிரபல நடிகையும், பாடகியுமான ஷரோன் குனெட்டா, சிறுவன் விற்கும் அனைத்து காய்கறிகளையும் தான் வாங்கி கொள்ள 
விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
அதோடு, குறித்த சிறுவனை பள்ளிக்கூடத்துக்கு படிக்க அனுப்ப தான் நினைப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸில் வறுமை அதிகளவில் தலைவிரித்து ஆடுவதால் அந்நாட்டு சிறுவர்கள் பலர் பள்ளிக்கூடத்துக்கு செல்ல முடியாமல் குழந்தை தொழிலாளியாக வேலைக்கு செய்து
வருகிறார்கள்.
இந்நிலையில் குறித்த நடிகையின் இந்த செயல் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>