நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 17 மார்ச், 2017

கனடா செல்லும் இலங்கையர் வீசா அனுமதி பெற வேண்டுமா?

இலங்கையர்களுக்காக தமது வீசா கொள்கையில் எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என கனடா அரசாங்கம்  ​தெரிவித்துள்ளது. 90 நாட்களுக்கு இலங்கையர்கள் வீசா இன்றி கனடாவில் சுற்றுலா அடிப்படையில் பிரவேசிக்க முடியும் என வௌியான தகவல்களை நிராகரிக்கும் வகையில் இந்த அறிக்கை  வௌியிடப்பட்டுள்ளது. வர்த்தக நடவடிக்கைகளுக்காகவோ, சுற்றுலாவுக்காகவோ கனடாவுக்கு செல்லும் இலங்கையர்கள் தொடர்ந்தும் வீசா அனுமதியைப் பெற வேண்டியது கட்டாயம் என கொழும்புக்கான கனடா...

புதன், 8 மார்ச், 2017

கனடாவில் வதிவிட நிபந்தனையை கடைப்பிடிக்காதோர் வெளியேற்றப்படுகின்றனர்!

வதிவிட நிபந்தனைகளை நிறைவேற்றாததன் காரணமாக, கனேடிய எல்லைகளில் இடைமறிக்கப்பட்டு, கனடாவில் இருந்து வெளியேற்றப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டொன்றிற்கு  சராசரியாக 1,400 ஆகும். இவ்வாறு வெளியேற்றப்படும் புதிய குடிவரவாளர்கள் தமது நிரந்தர வதிவுடைமையை மீளப்பெறும் பொருட்டு மேன்முறையீடு செய்யலாம் எனினும், அத்தகைய மேன்முறையீடுகளில் பத்தில் ஒன்றே வெற்றியடையும் சாத்தியம் உள்ளது என அரச தரவுகள்  தெரிவிக்கின்றன. கனேடிய குடிவரவுச் சட்ட விதிகளுக்கமைய, ஐந்து...

செவ்வாய், 7 மார்ச், 2017

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் சோதனை!

கண்டம் விட்டு கண்டம் பாயும் 4 புதிய ஏவுகணைகளை ஏவி வடகொரியா நேற்று சோதனை செய்தது. இந்த ஏவுகணைகள் எல்லை தாண்டி ஜப்பான் கடலுக்குள் நுழைந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா உள்பட பல்வேறு உலக நாடுகளில் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை, அணுகுண்டு சோதனை, ஹைட்ரஜன் குண்டு சோதனைகளை நடத்தி வருகிறது. நேற்று மீண்டும் 4 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தி உள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணைகள் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கை...

குடும்ப விசா விண்ணப்பிப்பவர்களுக்கு பிரித்தானியாவில் புதிய சட்டம்?

பிரித்தானிய அரசாங்கம் குடும்ப விசா ஊடாக வந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் (30 மாதங்கள்) தொடர்ந்தும் தங்கும் வதிவுரிமை விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய ஆங்கில மொழி தேவையை அமுல்படுத்த உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. குடும்ப விசா மூலம் மிகவும் அடிப்படை ஆங்கில அறிவுடன் பிரிட்டனுக்குள் வந்தவர்களை இந்த நடைமுறை மூலம் பிரித்தானிய சமுதாயத்திற்குள் ஐக்கியமாவதை ஊக்கப்படுத்த முடியும் என்று அரசாங்கம்  தெரிவித்துள்ளது. Family route ஊடாக தொடர்ந்தும்...