நாட்டின் கண்காணிப்பு சட்டங்களுக்கு எதிராக செயல்படுவதால் குழந்தைகளுக்கான ஸ்மார்ட் வாட்ச்களின் விற்பனைக்கு ஜேர்மனியில் தடை செய்யப்பட்டுள்ளது.ஜேர்மனியில் குழந்தைகளுக்கான ஸ்மார்ட் வாட்சுகள் அதிகளவில் உபயோகப்படுத்தபடுகின்றன.முக்கியமாக 5-லிருந்து 12 வயதுடைய குழந்தைகளை இவை குறிவைக்கின்றன. இவ்வகை வாட்சுகளில் சிம் கார்டு கூட பொருத்தமுடியும், ஆப்ஸ் மூலம் தங்கள் குழந்தைகள் எங்கிருந்தாலும் அவர்களை கண்காணிக்கவே, உரையாடவோ
பெற்றோரால் முடியும்.
இது ஜேர்மனியின் கண்காணிப்பு சட்டங்களுக்கு எதிராக இருப்பதையடுத்து விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் பெடரல் நெட்வொர்க் ஏஜென்சி தலைவர் ஜோசென் ஹோமன் கூறுகையில், குழந்தைகளின் பெற்றோர்கள் இவ்வகை வாட்சுகளை உடனடியாக அழித்துவிட அறிவுறுத்தியுள்ளோம்.
எங்கள் விசாரணையில் பள்ளி வகுப்பறையில் இருக்கும் குழந்தைகளையும், ஆசிரியர்களையும் பெற்றோர்கள் ஸ்மார்ட் வாட்சுகள் மூலம் கண்காணிப்பது உறுதியாகியுள்ளது.
பள்ளி நிர்வாகமும் இந்த விடயத்தில் மாணவர்கள் மீது ஒரு கண் வைக்க வேண்டும் என கூறியுள்ளார்