நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 14 ஜூன், 2019

தடுப்பு முகாமிலிருக்கும் ஈழ அகதியின் பரிதாபமான வேண்டுகோள்

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் கடந்த ஐந்து வருடங்களிற்கு மேலாகதடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் ஒருவர் தன்னை விடுதலை செய்து பிரிட்டனில் உள்ள சகோதரியிடம் செல்வதற்கு அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் .2013 முதல் மனஸ் தீவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திரவியராஜா சுப்பிரமணியம் என்ற 37 வயது இலங்கை தமிழரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.பிரிட்டனில் உள்ள தனது குடும்பத்தினருடன்  இணைவதற்கு பிரிட்டனின் உள்துறை அமைச்சு...

செவ்வாய், 11 ஜூன், 2019

உலகில் அதிக திருமணம் செய்து சாதனை படைத்த கல்யாண மன்னன்

உலகிலேயே அதிக முறை திருமணம் செய்து கொண்டவர் என்ற பெயருக்கு கலிபோர்னியாவில் வசித்த கிளையன் உல்ப் என்பவர்  சொந்தக்காரராக உள்ளார்.1908ம் ஆண்டு பிறந்த கிளையன் 1997ம்  ஆண்டு உயிரிழந்தார். கின்னஸ் சாதனை புத்தகத்தின் தகவல்படி கிளையன் 29 பெண்களை தனித்தனியாக திருமணம்  செய்து உள்ளார் . கிளையனுக்கு 40க்கும் அதிகமான குழந்தைகள் உள்ளனர்.இவரின் முதல் மனைவி பெயர் மார்கி மெக்டொனால்ட். இவரை  கிளையன் 1926ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ....

புதன், 5 ஜூன், 2019

தாய், மகள் பிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு வழக்கு

பிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும்  நகரத்தின் காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  அதற்கான இழப்பீட்டுத் தொகையாக 160000 யுரோக்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் 1.24 கோடி) வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர். மாசுபாட்டை தடுக்க அரசு எந்தவித பாதுகாப் பு நடவடிக்கையும்  எடுக்கவில்லை,...

அவுஸ்திரேலியா 20 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ளது

அவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த   20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது. அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி செய்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்குள் நுழையம் நோக்குடன் பயணித்துக்கொண்டிருந்த   படகை கடந்தவாரம் தடுத்துநிறுத்தி அதிலிருந்தவர்களை நாடு கடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்து சமுத்திர பகுதியில் குறிப்பிட்ட படகு கண்டுபிடிக்கப்பட்டது அதில் குழந்தையொன்று...

இனி பேஸ்புக் பயன்படுத்தினாலே அமெரிக்கா செல்ல முடியும்

அமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது சமூக வளை தளங்கள் தொடர்பான தரவுகளை வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. ஐந்து வருடங்களாக பாவிக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் சமூக வளை தளங்கள் தமது பெயர்கள் மற்றும் பாவனை காலம் என்பவற்றை விண்ணப்பதார்கள் சமர்பிக்க வேண்டுமெ ன தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நடவடிக்கையினூடாக 14.7 மில்லயன் மக்கள் பாதிப்படைவார்கள் என அந்த நாட்டு...