நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 4 செப்டம்பர், 2017

புலம்பெயர் மாணவி.ஜெ.அபிராமி சிறுவர் இனிய வாழ்வு இல்லத்திற்கு அன்பளிப்பு

 இலண்டன் புலம்பெயர் 13 வயதான மாணவி அபிராமி ஜெகதீசன் 
சிறிது சிறிதாக 
 சேமித்த ஐம்பது ஆயிரம்(50000.00) ரூபாவை ஈழத்து வன்னியின் மாற்றுத் திறனாளிகள் சிறுவர் இல்லமான இனிய வாழ்வு 
இல்லத்திற்கு அளித்தார்.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அபிராமி அண்மையில் தாயகம் வந்தபோது தனது அன்பினை இவ்விதம் வெளிப்படுத்தினார். இப்பணத்தை அவர் சில மாதங்களாக சிறுகச்சிறுக சேமித்தமை
 குறிப்பிடத்தக்கது
இளம் வயதில் இவர் காருண்ணியம் பாராட்டுக்குரியது போர் காலத்தில் புனிதர்களாக வாழ்ந்த இல்லத்துப்பிள்ளைகள்
இப்போது மிக கஸ்ரநிலையில் வாழ்வது ஏற்றுக்கொள்ளப்பாடாத ஒன்று, அதையறிந்த இந்தச்சிறுமியின்செயல் பாரட்டுக்கு உரியது மட்டுமல்ல இந்தச் செய்தியை பார்பவர்கள் இல்லத்து பிள்ளைகளுக்கு நல்லதை செய்ய துண்டுதலானதாகும்  இவர்பணி வாழ்க
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிராங்க்பேர்ட் நகரின் இருந்து 70 ஆயிரம் பேர் வெளியேற்றம்

ஜேர்மனியின் பிராங்க்பேர்ட் நகரின் பல்கலைக்கழக வாளகமொன்றில் அண்மையில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சக்தி வாய்ந்த குண்டு இன்றைய தினம் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் அதன் பொருட்டு அங்குள்ள சுமார் 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் தற்காலிகத் தங்குமிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குண்டானது 2ம் உலக மகாயுத்தத்தின் போது இங்கிலாந்து விமானப் படையினரால் வீசப்பட்டதாக
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




சனி, 26 ஆகஸ்ட், 2017

ஹார்வி புயல்' அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்துமாம்

அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள 'ஹார்வி புயல்' வலுவடைந்துள்ளதால் அது கரையை கடக்கும் போது பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் உருவாயுள்ள 'ஹார்வி புயல்' வலுவடைந்துள்ளது. இந்த புயல் இன்று அல்லது நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலானது மணிக்கு 160-200 கி.மீ வேகத்தில் டெக்சாஸ், கார்ப்பஸ்
 கிறிஸ்டி நகரங்களில் பேரழிவை உருவாக்கும். மேலும் 97 செ.மீ வரை மழை பெய்யும். இந்த புயலால் 12 அடி உயரம் வரை கடல் அலைகள் எழும் எனவும் புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

பேஸ்புக் திடீரென பல நாடுகளில் திடீர் முடக்கம்?

சமூகவலைத்தளங்களில் முன்னணியாக இருக்கும் பேஸ்புக் திடீரென செயற்படாத காரணத்தால் பல நாடுகளில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த பிரச்சினை குறிப்பாக பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் வடக்கு ஐரோப்பாவில் தான் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறுகளின் காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 24 ஆகஸ்ட், 2017

ஷங்காய் மாநகரில் இதோசுரியூ உலகக் கராத்தேச் சுற்றுப் போட்டியில் சுவிஸ்

சீனாவின் ஷங்காய் மா நகரில் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை இடம்பெறும் இதோசுரியூ உலகக் கராத்தேச் சுற்றுப் போட்டியில் முதற்தடவையாக சுவிஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி எமது ஈழத்து இளந்தலைமுறையினர் அறுவர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு வெற்றியீட்டியுள்ளனர்.
குறித்த போட்டிகடந்த 18, 19,20 ஆகிய தினங்களில் இடம்பெற்றுள்ளதுடன், ஏறத்தாழ 25 நாடுகள் கலந்து கொண்டன.
உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேசப் போட்டிகளில் எங்கள் பதிவுகளை அழுத்தமாகப் பதிவு 
செய்ய வேண்டும்.
அந்த வகையில், சுவிஸ் நாட்டிலிருந்து சுவிஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி எமது ஈழத்து இளந்தலைமுறையினர் அறுவர் கொண்ட குழுவினர் முதற்தடவையாக இப்போட்டிகளில் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக விளையாடி பதக்கங்களைப் பெற்று 
வெற்றியீட்டியுள்ளனர்.
அத்துடன், உலக நாடுகளின் சர்வதேச‌ கராத்தேப் பயிற்சிப் பட்டறையிலும் பங்குபற்றி சிறப்புப் பயிற்சிகளும் பெற்றுக்
 கொண்டுள்ளனர்.
மேலும் சென்செய் வி.கெளரிதாசன் அவர்களுக்கு ஜப்பான் நாட்டிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட உயர் கறுப்புப்பட்டி ஐந்தாவது நிலைச் சான்றிதழும் கொண்டு வரப்பட்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த போட்டில் கலந்து கொண்டோர்கள் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
விபுலாந்தன் கெளரிதாசன் – தலைமைப் பயிற்சி ஆசிரியர்
கெளரிதாசன் ஸப்தேஷ்ணா – சூரிச்
ஸ்ரீபாலன் நிஷாலினி – லுட்சேர்ன்
தெய்வேந்திரம் பகீரதன் – சூரிச்
கெளரிதாஸன் ஷ்வப்தேஷ் – சூரிச்
வாமதேவன் விதுன் – சூரிச்
பாஸ்கரன் மெளனிஷன் – ஷப்கவுசன்
வெற்றியீட்டி சாதனை படைத்தோர்:
கெளரிதாசன் ஸப்தேஷ்ணா – (18 – 20 பெண்கள் பிரிவு) – இரு வெண்கலப் பதக்கங்கள் – காட்டா / குமிற்றே
ஸ்ரீபாலன் நிஷாலினி – (11 – 12 பெண்கள் பிரிவு) – வெண்கலப் பதக்கம் – காட்டா
கெளரிதாஸன் ஷ்வப்தேஷ் – (17 வயது ஆண்கள் பிரிவு) –
 சிறந்த எட்டு – காட்டா
வாமதேவன் விதுன் – (18 – 20 ஆண்கள்) – சிறந்த எட்டு – காட்டா
இதேவேளை, லுட்சேர்ன் தமிழ் மன்ற தலைவர் தர்மபால மற்றும் லுட்சேர்ன் தமிழ் மன்றத்தின் கல்விக்கு பொறுப்பாளர் நா.ரஞ்சன், நிர்வாகத்தினர் சூரிச் விமான‌ நிலையத்தில் வெற்றியீட்டி நாடு திரும்பிய கராத்தே வீரர்களுக்கு பூங்கொத்து வழங்கி கோலாகல வரவேற்பு
 வழங்கியிருந்தனர்.
2021 இல் டென்மார்க் நாட்டில் இடம்பெற இருக்கும் இதோசுரியூ உலகக் கராத்தேச் சுற்றுப் போட்டிகளில் இன்னும் அதிகமான‌ போட்டியாளர்கள் சுவிஸ் நாட்டில் இருந்து பங்குபற்றுவார்கள் 
என தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

ஐரோப்பிய நாடுகளில் மருந்து கலக்கப்பட்ட முட்டைகள்

ஹொங் கொங் மற்றும் 15 ஐரோப்பிய நாடுகளில் மருந்து கலக்கப்பட்ட முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி அமைச்சர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுடன் ஐரோப்பிய ஆணைக்குழு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.
நெதர்லாந்து பண்ணைகளில் உண்ணிகளைக் கொல்ல பயன்படுத்தப்படும் Fipronil எனும் மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதுவே குறித்த முட்டைகள் பாதிப்படையக் காரணமாக அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி மருந்தில் உள்ள நச்சுத்தன்மை முட்டைகளிலும் பரவியிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில், நெதர்லாந்திலிருந்து ஐரோப்பிய சந்தைக்கு அனுப்பப்பட்ட பல மில்லியன் முட்டைகள் முன்னதாக அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

மாபெரும் போட்டியில் சம்பியன் கோப்பையை வென்றார்

15 நாடுகள் பங்குபற்றிய மாபெரும் போட்டியில் சம்பியன் கோப்பையை வென்றார் ஓவியா நரேஸ்
உலகத்தமிழர் பூப்பந்தாட்ட சம்மேளனம் (றுழசடன வுயஅடை டீயனஅiவெழn குநனநசயவழைn) 2017 இல் தனது 5வது போட்டியை கனடா ரொறன்ரோவில் (ஊயயெனய வுழசழவெழ) நடாத்தியது 15 நாடுகள் பங்குபற்றிய மாபெரும் போட்டியில் 13 வயதுக்குட்பட்டவருக்கான போட்டியில் கனடாவுக்காக விளையாடிய ஓவியா நரேஸ் சம்பியன்
 போப்பையை வென்றுள்ளார்
ஸ்காபுறோ (ளுஉயசடிழசழரபா)நகரில் இரு நாட்களாக இரண்டு வௌ;வேறு உள்ளரங்கில் இப்போட்டிகள் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற கால் இறுதிப்போட்டியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரையும் தோல்வியடையச் செய்த ஓவிய நரேஸ் அரை இறுதிப்போட்டியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட யேர்மன் (புநசஅயலெ) நாட்டு 
வீராங்கனையுடன் மோதினார் விறுவிறுவிப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 2-0 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்று
 இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். டென்மார்க் (னுநnஅயசம)நாட்டு வீராங்கனையுடன் நடந்த இறுதிப் போட்டியில் முதல் சுற்றில் தோல்வி அடைந்த
 போதும் 2ம் 3ம் சுற்றுக்களில் வெற்றியை நிலை நாட்டி 13 வயதுக்குட்பட்டவருக்கான சம்பியன் கோப்பையை வென்று கனடாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் 
ஓவியா நரேஸ்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>