நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 23 அக்டோபர், 2018

ஆலங்கட்டி மழையால் இத்தாலியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது

இத்தாலியில் ஆலங்கட்டி மழை பெய்த காரணமாக சாலைகள்  முழுதும் பனி மூடிக் காணப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தலைநகர் ரோம், பிசா மற்றும் புளோரன்ஸ் உள்ளிட்ட பகுதிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை புயலோடு மழையும் தாக்கியது. சாலைகளில் ஆலங்கட்டி மழைப் பொழிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. பனிக்கட்டிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இறுக்கமாகி பாறை 
போல் மாறியது.
 இதனால் சாலைகளில் நிறுத்தப்பட்ட வாகனங்களை இயக்க முடியாமல் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இத்தாலிய தலைநகரின் கிழக்குப் பகுதியில் ஆலங்கட்டி மழை அதிகமாக பொழிந்தது. அங்கு பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் சாலைகள் முழுவதும்
 மூடி மறைந்தது.
மேலும் நகரத்தில் உள்ள சுரங்க ரயில் நிலையத்தின் நகரும் படிக்கட்டின் மீது பனிக்கட்டி நீர் ஆறு போல ஓடியது. நகரில் பல்வேறு இடங்களில், பேருந்துகள் மற்றும் கார்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சில சாலைகளில் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் 
போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. புளோரன்ஸ், பிசா, மிலன் மற்றும் வடக்கு இத்தாலியின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனை சீரமைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக 
ஈடுபட்டு வருகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிரான்ஸ் தீவில் குடியேறும் தமிழர்கள் 40 பேர் சென்ற கப்பல் சிக்கியது

பிரதான செய்திகள்:இலங்கையை சேர்ந்த பலர் பிரான்ஸை அண்மித்த தீவில் குடியேறி வருவதாக வெளிவிவகார அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு படகு மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான Réunion தீவில் குடியேற்றி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கைக்குள் வசிக்கும் சில குழுக்கள், இவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு கடல் வழியாக அழைத்துச் செல்வதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரான்ஸில் குடியேற விரும்பும் வடக்கு, கிழக்கு பகுதியை சேர்ந்த இளைஞர், யுவதிகளை அழைத்து வந்து சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களுக்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்
 வெளியாகி உள்ளது.
தவிர பிரான்ஸ் நோக்கி சென்ற 40 பேர் கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர், கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, சிலாபம், மன்னார், திருகோணமலை உட்பட பல பிரதேசங்களை சேர்ந்த 21 சிங்களவர்களும் 67 தமிழர்களும் 2 முஸ்லிம்களும் அடங்கும். இவர்களில் பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படகு மூலம் வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் நபர்கள் உரிய விலாசம் அற்ற நபர்களுக்கு பணம் வழங்கியுள்ளதாகவும்
 தெரியவந்துள்ளது.
இதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கையை இதேபோன்று இலங்கையில் இருந்த சட்டவிரோதமாக நடுகடலில் மாயமாகி Réunion தீவில் குடியேறிய நபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் 
வெளியாகியுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 17 அக்டோபர், 2018

தமிழ் பெண்ணைகனடாவில் காணவில்லை பொலிசார் விசாரணை

கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மார்க்கம் பகுதியில் வசிக்கும் 46 வயதான தமிழினி குகேந்திரன் என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கனேடிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கடந்த 15ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் Brimley Road, Highglen Avenue பகுதியில் உள்ள அவரது வீட்டில் இறுதியாக அவர் அவதானிக்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன பெண் 5 அடி 3 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், 140 பவுண்ட் நிறையுடைவர் மற்றும் கறுப்பு நிற தலை முடியை கொண்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில் காணாமல் போயுள்ள குறித்த பெண் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 16 அக்டோபர், 2018

இலங்கைத் தமிழ் குடும்பம் அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தlல்

பிரித்தானியாவிலுள்ள இலங்கத் தமிழ் குடும்பம் ஒன்று அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பக்கவாதம் ஏற்படும் அபாயத்தில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினரே இவ்வாறு நாடு 
கடத்தப்படவுள்ளனர்.
எனினும் அவருக்கு விமானத்தில் ஆபத்து உள்ளதாக கூறி குடும்பத்தினர் 4 வைத்தியர்களை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்ற சங்கரப்பிள்ளை பாலசந்திரன் கடந்த 6 வருடங்களில் பக்க வாத நோயினால் 
பாதிக்கப்பட்டுள்ளார்.
60 வயதான அவர், கடந்த 2007ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது தொழில் விசா நிறைவடைந்த காரணத்தினால் அவர் தனது குடும்பத்தினரான மனைவி, மகன் மற்றும் இரண்டு மகளுடன் அவுஸ்திரேலியாவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார்.
27 மணி நேர விமான பயணத்தில் அவரை கண்கானிக்க 4 வைத்தியர்கள் விமானத்தில் பயணிக்க வேண்டும் என பாலச்சந்திரனின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Heathrow விமான நிலையத்திற்கு அருகில் கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இந்த குடும்பத்தினர் திருப்பி அனுப்புவதற்காக தங்க 
வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் பாலசந்திரன் மற்றும் குடும்பத்தினர் தன்னார்வமாக பிரித்தானியாவை விட்டு வெளியேறுவதற்காக விமானத்தில் ஏறிய போதிலும், பாலசந்திரன் நோய்வாய்ப்பட்டமையினால் விமானத்தில் இருந்து இறங்க நேரிட்டுள்ளது.
தாம் பிரித்தானியாவை விட்டு செல்ல தயார், எனினும் மீண்டும் இவ்வாறான நிலைமை ஏற்படலாம் என்பதனால் தங்களுக்கு 4 வைத்தியர்கள் வேண்டும் என பாலசந்திரனினின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் பிரித்தானிய அதிகாரிகள் என்ன தீர்மானம் எடுப்பார்கள் என தெரியவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 13 அக்டோபர், 2018

உலகத்தை நெருங்கும் பேரழிவு ஐ.நா வெளியிட்டுள்ள அதிர்ச்சி அறிக்கை.

உலகம் 2030ஆம் ஆண்டு மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐ.நாவின் "இன்டர்கவர்மெண்டல் பேனல் ஃபார் கிளைமேட் சேஞ்ச் (Intergovernmental Panel for Climate Change)" அமைப்பு 400 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மனித குலத்திற்கே மிகப்பெரிய எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது என கூறப்படுகின்றது.
மனிதர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகைதான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டில் இந்த வாகனங்களின் எண்ணிக்கை இப்போது இருப்பதை விட இரு மடங்கு அதிகரித்து விடும். இதன் காரணமாக புகையின் அளவும் அதிகமாகும். அதேபோல் தொழிற்சாலை புகை மூன்று மடங்காக உயரும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இவ்வாறு சென்றால் பூமியின் வெப்பநிலை வெகு வேகமாக உயர்வடைந்து 2030இல் உலகம் நீரில் மூழ்கிவிடும் என்று ஐ.நாவால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 வருடங்களில் பூமியின் வெப்பநிலை 1 டிகிரி செல்ஸியஸ் உயர்ந்துள்ளது. இது இப்போதே உலகில் பல பனிப்பாறைகளை கரைத்துவிட்டது.
இந்த நிலையில் இந்த வெப்பநிலை உயரும் வேகம் இன்னும் அதிகம் ஆகும். இது பெரிய பேரழிவிற்கு கொண்டு செல்லும் என்று அந்த 
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி 2030ல் பூமியின் வெப்பநிலை 3.5 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கும். 3.5 செல்ஸியஸ் என்பது உலகையே அழிக்கக் கூடிய அளவு வெப்பநிலை ஆகும்.
இதே வேகத்தில் வெப்பநிலை உயர்ந்தால், உலகில் உள்ள முக்கிய பனிப்பாறைகள் எல்லாம் அப்படியே மொத்தமாக உருகிவிடும்.
இதனால் உலகில் 8 - 10 சதவிகிதம் மட்டுமே நிலம் இருக்கும். மற்ற பகுதிகள் அனைத்தும் கடலுக்குள் சென்றுவிடும்.
இது கண்டிப்பாக 2030க்குள் நடந்துவிடும். அதை தாண்டி போகாது அதற்குள், இந்த மோசமான அசம்பாவிதம் நடக்கும் என்று ஐ.நா எச்சரிக்கை
 விடுத்து இருக்கிறது.

அதிகம் தமிழர்கள்,வாழும் நாடொன்றை தாக்கவுள்ள சுனாமி

அவுஸ்திரேலியாவை சுற்றி பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், சமகாலங்களில் எந்தவித அழிவுகளும் ஏற்படாமல் தப்பித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் கடலோர நகரங்களில் விண்கல் தாக்கங்கள் அல்லது நில அதிர்வு நடவடிக்கைகளால் அழிவுகரமான பேரலைகளால் தாக்கப்படாமல் இருப்பது பெரும் அதிர்ஷ்டம் தான் என நிபுணர்கள் 
சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் அவுஸ்திரேலியாவை எந்த நேரத்தில் சுனாமி பேரலைகள் தாக்கும் அபாயம் உள்ளதாக துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர், அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மேற்கொண்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
1149ஆண்டு அவுஸ்திரேலியாவை சுனாமி பேரலைகள் தாக்கி பேரழிவை ஏற்படுத்தின. 60 மீற்றர் உயரத்திற்கு அலைகள் மேலெழுந்த நிலையில் பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தியதாக 
குறிப்பிடப்படுகின்றது.
அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதற்கமைய 4000 - 5000 ஆண்டுகளுக்கு முன்னரும் இவ்வாறான பாரிய ஆபத்துக்கள் அவுஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டுள்ளதற்கான சான்றுகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதற்கமைய மீண்டும் அவ்வாறான தாக்குதல் ஒன்று எந்த நேரத்திலும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இதன்மூலம் உறுதியாகியுள்ளதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு ஆபத்தான சுனாமி ஒன்று ஏற்படாமல் இருப்பது மிகவும் அதிஷ்டம் என்றே கூற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி சிட்னி நகரில்
 ஆபத்துக்கள் 
ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. அதனை தடுக்க முன்னாயத்தங்களை செய்யப்பட வேண்டும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பெருமளவு தமிழர்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


எந்நேரமும் முடங்கலாம் இணையதளம் குறித்து அவசர அறிவித்தல்; ?

உலக அளவில் அடுத்த 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்கும் வாய்ப்பு இருப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது. "த இண்டர்நெட் கார்பரேஷன் ஒப் நேம்ஸ் அண்ட் நம்பர்" என அழைக்கப்படும் சர்வதேச இணையதள சேவை அமைப்பு வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனால் அடுத்த 48 மணிநேரத்துக்கு பல்வேறு இணையதள சேவைகள் தொடர்பு இழக்கூடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. மேலும் இணைப்புக்கள் கிடைக்காமல் தவிக்கும் சூழல் ஏற்படும். சமீபகாலமாக 
இணையதளங்களில் புகுந்து மர்ப நபர்கள் முடக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து 'சைபர் அட்டாக்' இணையதள முடக்கம் செய்ய முடியாமல் தடுக்க டிஎன்எஸ் எனப்படும் 'டொமைன் நேம் சிஸ்டம்' நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான விரிவான பராமரிப்பு பணிகள் தேவைப்படுவதால் இவை முழுமையாக முடிவடைய 48 மணிநேரங்கள் வரை 
ஆகலாம் என தெரிகிறது.
இந்த சமயத்தில் இணையதள சேவை முடங்குவதுடன், குறிப்பிட்ட இணையதள பக்கங்களை பார்க்க முடியாமல் போகும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஷ்யா கேட்டுக்
 கொண்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>