நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 15 செப்டம்பர், 2022

இலங்கையர்கள் நியூசிலாந்திற்கு வருகை தந்து வாழலாம்: விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு

 
இலங்கையை போன்று இரு மடங்கு பரப்பளவுள்ள நியூசிலாந்தில் இலங்கையர்கள் வந்து வாழலாம் என்று நியூசிலாந்து உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்வுக்கான அதிகாரி ப்ரெட் ஷீல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து உயர் ஸ்தானிகராலயத்தின் நிதியளிப்பினால் ஸ்தாபிக்கப்பட்ட, காத்தான்குடி உளநல ஆற்றுப்படுத்தல் நிலையமும் சுய கற்றல் மையமும் நேற்று முன்தினம்(13) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களுக்கான அழைப்பு
மேலும் தெரிவிக்கையில்,“இலங்கையை போன்று இரு மடங்கு பரப்பளவையும் சுமார் 5 மில்லியன் மக்களையும் கொண்ட நியூசிலாந்தில் இலங்கையர்கள் வந்து வாழலாம்.

ஏற்கெனவே அங்கு 20 ஆயிரம் இலங்கையர்கள் வாழ்கின்றார்கள். அங்கு இலங்கையர்கள் வரவேற்கப்படுகின்றார்கள்.
இதை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் இலங்கையில் இருக்கும் மக்கள் நியூசிலாந்துக்கு வரமுடியும் அங்கே வாழ முடியும். இன்றைய நிகழ்வில் பங்கு கொண்ட சிறுமிகள், இளம் பெண்கள் நியூசிலாந்துக்கு வருவதை நான் ஊக்குவிக்கின்றேன்.

எதிர்காலத்தில் ஒரு சிலரை நியூலாந்தில் காண முடியும் என நம்புகின்றேன். அது ஒரு நீண்ட பயண வழிமுறையாக இருந்தாலும் அது நடக்கலாம். நடப்பதற்கு சாத்தியமுள்ளது.

நான் அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்கு இங்கு இலங்கையிலிருந்து பணியாற்றுவேன். அந்தவேளையில் நான் மீண்டும் கிழக்குக்கு வந்து உங்களை சந்திப்பேன். இந்தத் திட்டம் வெற்றியளித்து உங்கள் வாழ்வு மேம்பட வேண்டும்.”என கூறியள்ளார்.

காத்தான்குடியில் பெண்களுக்கான திட்டம்
இதேவேளை வேறு நூற்றுக்கணக்கான திட்ட முன்மொழிவுகள் நியூசிலாந்து உயர் ஸ்தானிகராலயத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நிதியுதவி அளிப்பதற்கு நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர், காத்தான்குடியில் பெண்களுக்கான இந்த உள நல ஆற்றுப்படுத்தல் மற்றும் சுய கற்றலுக்கான திட்டத்தைத் தெரிவு செய்துள்ளமை 
குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

சனி, 3 செப்டம்பர், 2022

நிலவும் எரிசக்தி கட்டண உயர்வால் பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நிறுத்த தீர்மானம்

பிரித்தானியாவில் உள்ள கிராமங்கள், நகரங்கள் மற்றும் பெரும் நகரங்களில்  ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வண்ண வண்ண விளக்குகளால் கலை கட்டும். ஆனால் 
இந்த வருடம் 
பிரித்தானியாவில் மின் சக்தி கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் மில்லியன் கணக்கான மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாத நிலை
 ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்  வணிக நிறுவனங்களும் இந்த முறை வண்ண வண்ண அலங்காரங்கள் செய்யாது என கூறியுள்ளனர். மேலும் நாடு முழுவதும் உள்ள கவுன்சில்களில்  கிறிஸ்துமஸ் தெரு காட்சிகள் மற்றும் பண்டிகை தொடர்பான அலங்காரங்களை ரத்து செய்வதாக
 தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய போா்டு எஸ்காா்ட் கார் ரூ.6 கோடிக்கு ஏலத்தில் விற்பனை

உலக புகழ்பெற்ற இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த கார் 
விபத்தில் பலியானார். 
அவரது 25-வது நினைவு தினம் விரைவில் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் இளவரசி டயானா 1985 முதல் 1988 வரை பயன்படுத்திய போா்டு எஸ்காா்ட் வகையைச் சேர்ந்த ஒரு கார் இங்கிலாந்தில் 28-08-2022.அன்று  ஏலத்தில் விடப்பட்டது. 
இந்த ஏலத்தில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த செல்வந்தர்கள் பலர் கலந்து 
கொண்டனர். 
1 லட்சம் பவுண்டில் (சுமார் ரூ.93 லட்சம்) ஆரம்பிக்கப்பட்ட ஏலம், பலத்த போட்டிக்கிடையே 6 லட்சத்து 50 ஆயிரம் பவுண்டில் (சுமார் ரூ.6 கோடியே 10 லட்சம்) நிறைவடைந்தது. இங்கிலாந்தை சேர்ந்த நபர் காரை 
ஏலத்தில் எடுத்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் தூங்கிய எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானிகள்

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737-800 விமானமானது சூடான் நாட்டின் கர்டொம் நகரில் இருந்து எத்தியோப்பியாவின் அட்டிஸ் அபபா நகரத்திற்கு பயணிகளை ஏற்றி  
சென்று கொண்டிருந்தது. 
அப்போது விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகளும் 37,000 அடி உயரத்தில் தானியங்கி விமானம் இயக்கியை  செலுத்தி விட்டு தூங்கி இருக்கின்றார்கள். இந்த சூழலில் அட்டிஸ் அபாபா நகருக்குள்
 நுழைந்த விமானம் தரையிறங்குவதற்கான எந்த ஒரு முன்னறிவிப்பையும் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்காமல் தொடர்ந்து பறந்து
 கொண்டே இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விமான கட்டுப்பாட்டு  அதிகாரிகள் விமானிகளை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால் விமானிகள் கடுமையான உறக்கத்திலிருந்ததால்  கட்டுப்பாட்டு அறையின்  அழைப்புக்கு பதில் அளிக்கவில்லை. 
இந்த சூழலில் தரையிறங்க வேண்டிய இடத்தை கடந்து விமானம் பயணித்ததால் தானியங்கி விமான இயக்கி பலத்த  ஓசை எழுப்பி நின்றிருக்கின்றது. மேலும் இந்த சத்தத்தினால் தூக்கம் கலந்த விமானிகள் விமானத்தை திசை திருப்பி மீண்டும் ஓடு பாதைக்கு கொண்டு சென்று கரை இறக்கி உள்ளனர். 
விமானிகளின் தூக்கத்தால் 2.5 மணி நேரம் பயணிகள் வானில் பறந்தபடியே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  சம்பவத்தால் அங்கு  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



புதன், 17 ஆகஸ்ட், 2022

ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா அழிந்த டாஸ்மேனியன் புலி இனத்தை மீண்டும் கொண்டுவர முயற்சி

ஆஸ்திரேலியாவின் 'டாஸ்மேனியன் புலி' உலகில் அழிந்துபோன விலங்கினங்களில் ஒன்றாகும். இவை தைலசின் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த புலிகள் 1930-ல் வரை பூமியில் வாழ்ந்தன. அதன்பின்னர் வேட்டையாடுதல், ஒருவகையான நோய் காரணமாக இந்த வகை புலி இனங்கள் அழித்தன. 
ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாகாணத்தில் உள்ள உயிரியியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த உலகின் கடைசி டாஸ்மேனியன் புலி 1936-ம் ஆண்டில் இறந்தது. 
இந்த நிலையில், ஸ்டெம் செல், ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அழிந்துபோன டாஸ்மேனியன் புலி இனத்தை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் முயற்சியில் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். 
டாஸ்மேனியன் புலியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இந்த சமீபத்திய திட்டம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழக 
விஞ்ஞானிகள் மற்றும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் வந்துள்ளது. 
இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரிவ் பாஸ்க் பேசும்போது, "இதற்காக டாஸ்மேனியன் புலியை போன்ற ஜீன் அமைப்புடைய விலங்கின் ஸ்டெம் செல்லை பிரித்து எடுக்க இருக்கிறோம். 
பின்னர் ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இன்னும் 10 ஆண்டுகளில் டாஸ்மேனியன் புலியை மீண்டும் பார்க்க முடியும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


 

வெள்ளி, 29 ஜூலை, 2022

கொழும்புத் துறைமுகத்தை திடீரென வந்தடைந்த ஜெர்மனிய போர் கப்பல்

பயர்ன் (Bayern) எனப்படும் ​ஜெர்மனியின் போர் கப்பல், நேற்றைய தினம் (17) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தக் கப்பல் நாட்டை விட்டு வௌியேறுவதற்கு முன்னதாக இலங்கை கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளில்
 ஈடுபடவுள்ளது.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜெர்மனியின் போர் கப்பல் நாட்டிற்கு வந்தடைந்துள்ளது.
ஜெர்மனியின் பயர்ன் போர் கப்பல் 1996 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15 ஆம் திகதி சேவையில் இணைக்கப்பட்டது.
அத்துடன், கடற்பரப்பு மற்றும் வான் பரப்பை கண்காணிப்பதற்கான வசதிகளும் அதி சக்தி வாய்ந்த ரேடார் கட்டமைப்பும் 
இதில் உள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 26 ஜூலை, 2022

நாட்டுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் டொலர் பெறுமதி வீழ்ச்சி

2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், இந்த நாடு பெற்ற வெளிநாட்டு தொழிலாளர்களின் தொகை 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.  இது 51.6 வீத வீழ்ச்சியாகும். 
கடந்த ஆண்டு இதே மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 478.4 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில், ஜூன் மாதத்தில் இலங்கைக்கு வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பிய தொகை 274.3 மில்லியன் 
டொலர்களாகும்.
வெளிநாட்டு தொழிலாளர் விசாரணைகள் ஏப்ரல் மாதத்தில் 249 மில்லியனாக டொலர்களாக இருந்தது மற்றும் மே மாதத்தில் 304 மில்லியனாக டொலராக உயர்ந்தது, ஆனால் ஜூன் மாதத்தில் 
மீண்டும் சரிந்தது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>