நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 26 மே, 2017

நீச்சல் குளம், மரக்கிளை என படபடக்க வைக்கும் பாம்புக் கோவில்!

மலேசியாவில் அமைந்திருக்கும் முருகர் கோவில், முருகர் சிலையால் மட்டுமல்ல அதன் புகழ்- பெருமைகளாலும் உயர்ந்து நிற்கிறது. மலேசிய முருகரை பார்த்து ரசிக்கும் நாம், அங்கே அமைந்திருக்கும் பழமையான பினாங்கு கோவிலை மறந்துவிடுகிறோம். இது பழமையான கோவில் மட்டுமல்ல… பாம்பும், புகையும் சூழ்ந்த விசித்திரமானக்  கோவிலும் கூட. பினாங்கு தீவில், சன்கை குளாங் பகுதியில் தான் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. சீன கட்டிடக்கலையில் கம்பீரமாக நிற்கும் இந்தக் கோவில்,...

புதன், 24 மே, 2017

குண்டுத்தாக்குதல் பிரித்தானியாவில் – 20 பேர் பலி, 50 பேர் காயம்

பிரித்தானியாவில் அமைந்துள்ள மன்செஸ்டர் அரினா மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் 52 க்கும் அதிகமானவர்கள்  காயமடைந்துள்ளனர். நேற்று இரவு பிரித்தானிய நேரப்படி இரவு 10.35 மணியளவில் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிசார்  தெரிவித்துள்ளனர். அமெரிக்க பாப் இசை பாடகியான அரியானா கிராண்டேயின் இசை நிகழ்ச்சி இடம்பெற்ற இடத்தினில் மேற்படி குண்டுத் வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதனால்...

திங்கள், 22 மே, 2017

ஆஸ்திரேலியா சட்டவிரோதமாக தங்கியுள்ள அகதிகளை வெளியேற்ற முடிவு!!

ஆஸ்திரேலியா நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 7500 அகதிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு குடியுரிமை மந்திரி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா நாட்டில் இலங்கை, மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். முறையான காரணங்கள் இல்லாமல் சிலர் தங்கியிருப்பதாகவும், இவர்களால் அரசுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படுவதாகவும் பல்வேறு கட்சியினர்  குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில், அகதிகளாக பதிவு செய்வதற்கு...

ஞாயிறு, 14 மே, 2017

திருடன் படத்தின் முன் அட்டைப்படம் வெளியாகியுள்ளது

யேர்மனியில் இருந்து மிகவிரைவில் வெளிவர இருக்கும் திருடன் குறும் படம் அதற்கான காட்சிப்படுத்தல் நிறைவாகி படத்தொகுப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றது இளம் நாயகன் சுரேந்தர் உடன் மற்றும் பல கலைஞர்கள் இணைந்த நடிப்பில் இளமைத்துடிப்பின் வேகத்தையும் முதுமையின் ஆற்றலையும் வித்தியாசமான கதை ஓட்டத்தில் வெளிவர உள்ளது திருடன் குறும்படம் இதற்கான கதை நெறியாழ்கை ஒளிப்பதிவு படத்தொகுப்பு அனைத்தையும் கமல் அவர்கள் சிறப்பாக செயலாற்றியுள்ளார் , இவர் இதற்கு முதலும்...

சனி, 13 மே, 2017

டோட்முண்ட் நகரில் திருடன் படத்தின் நிறைப்பகுதி 09.05.17 ஒளிப்பதிவாகியது

திருடன் படம் சிறப்பாக டோட்முண்ட் நகரில் ஒளிப்பதிவாகியது திரு சிவலிங்கம் அவர்களின் பி. சி .என் றவல்ஸ் பணிமனையில் ஒளிபதிவாகியுள்ளது இதற்கான கதை நெறியாழ்கை ஒளிப்பதிவு படத்தொகுப்பு அனைத்தையும் கமல் அவர்கள் சிறப்பாக செயலாற்றியுள்ளார் , இவர் இதற்கு முதலும் மூன்று குறுப்படத்தை இயக்கியுள்ளார் அவையாவும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன, இவரின் திறமை என்பது கலைஞர்களால் மதிப்பிடவேண்டும் அதை இந்த திருடன் படம் உறுதிப்படுத்தும், மிக விரைவில் வெளிவர இருக்கும்...

வெள்ளி, 12 மே, 2017

ஓர் முக்கிய தகவல் ஜேர்மனியில் வசிக்கும் வெளிநாட்டினர்களுக்கு?

ஜேர்மனியில் புகலிடம் மறுக்கப்பட்ட அல்லது தானாக முன் வந்து தாயகம் திரும்ப விருப்பம் தெரிவிக்கும் வெளிநாட்டினர்களுக்கு உதவும் வகையில் புதிதாக ஒரு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மனியில் புகலிடம் மறுக்கப்பட்ட அல்லது புகலிடத்திற்காக காத்திருக்கும் வெளிநாட்டினர்கள் தாய்நாடுகளுக்கு திரும்பி செல்வது தற்போது மிகவும் குறைந்துள்ளதாக ஜேர்மனியின் குடியமர்வு துறை அலுவகலம் தெரிவித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு ஜேர்மனியை விட்டு...

செவ்வாய், 9 மே, 2017

பெற்றோர் தங்க 10 ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் வீசா ?

பெற்றோர்களுக்கான புதிய விசா அறிமுகமாகிறது. இப்புதிய விசாவின் கீழ், பெற்றோர்கள் 10 வருடங்கள் வரை ஆஸ்திரேலியாவில் தங்கலாம். ஆனால் அவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகக் குடியேற  அனுமதிக்கப்பட மாட்டார்கள்.  அத்துடன் அவர்களின் பிள்ளைகள் தமது பெற்றோர்களுக்கான தனியார் சுகாதார காப்பீடு எடுக்கவேண்டும். வருடத்துக்கு சுமார் 15,000 பேர் $20,000 டொலர்கள் செலுத்தித் தமது பெற்றோர்களை இங்கு அழைத்துவந்து 10 வருடங்களுக்குத் தம்முடன்  தங்கவைக்கலாம்.  ...

திங்கள், 8 மே, 2017

மீப்பு படைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கியூபெக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது

கனடாவின் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் அண்மைய நாட்களாக இடைவிடாது மழை பொழிந்ததன் காரணமாக பல இடங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழையினால் கியூபெக்கில், குறிப்பாக மொன்றியலைச் சூழவுள்ள பகுதிகளில் தொடர்ந்தும் அதிகரித்துவரும் வெள்ளநீர் அங்குள்ள நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்களுக்கு அச்சுறுத்தலை  ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கியூபெக்கில் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் உதவிப் பணிகளை முன்னெடுப்பதற்காக,...