நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 8 மே, 2017

மீப்பு படைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கியூபெக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது

கனடாவின் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் அண்மைய நாட்களாக இடைவிடாது மழை பொழிந்ததன் காரணமாக பல இடங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த மழையினால் கியூபெக்கில், குறிப்பாக மொன்றியலைச் சூழவுள்ள பகுதிகளில் தொடர்ந்தும் அதிகரித்துவரும் வெள்ளநீர் அங்குள்ள நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்களுக்கு அச்சுறுத்தலை 
ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கியூபெக்கில் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் உதவிப் பணிகளை முன்னெடுப்பதற்காக, கனடாவின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 400 இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த இராணுவத்தினர் கியூபெக்கின் மேற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களுக்கும், மொன்றியல் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள நிலைமை தொடர்ந்து சிரமங்களை அதிகரித்து வருவதனால், உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ள நகரசபையிடம் உள்ள வளங்கள் தீர்ந்து போய்விட்டதாகவும், மக்களும் மனதளவில் சோர்வடைந்து விட்டதாகவும் கியூபெக் பொதுப்பாதுகாப்பு பிரிவின் இயக்குனர் 
தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை வெளியிடப்பட்ட தகவலில், கியூபெக்கின் சுமார் 130 குடியிருப்புகள் இந்த வெள்ளத்தினால் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும், சுமார் 700 பேர் வரையில் தமது வீடுகளை கைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ள நிலைமை காரணமாக மொன்றியலின் மேற்கு பகுதியில் இருந்த புனர்வாழ்வு மையம் ஒன்றில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட நேர்ந்துள்ளதாகவும், முற்பாதுகாப்பு நடவடிக்கையாக அங்கிருந்த சுமார் 50 பேர் வரையில் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும்
 கூறப்பட்டுகிறது.
கியூபெக்கின் சுற்றுச் சூழல் அமைச்சர் கருத்து வெளியிடுகையில், தற்போதைய இந்த வெள்ள நிலைமையானது கடந்த 55 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவு மோசமாக 
இருப்பதாகக் குறி்பபிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக