நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 13 ஜூலை, 2017

பிராந்தியத்திற்கு பேராபத்து லண்டனை விட நான்கு மடங்கு பெரிதான பனிப்பாறை உடைவு!

உலகின் ஐந்தாவது மிகப்பெரிய கண்டம் அண்டார்டிக்கா. புவியின் தென்முனையில் இந்த கண்டம் முழுவதும் ஏறக்குறைய பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது.
புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 வீதமானது இங்கேயே உள்ளது. இங்கே நிரந்தர மக்கள் குடியிருப்பு எதுவும் கிடையாது, வெவ்வேறு உலக நாடுகளின் ஆய்வுகூடங்கள் மட்டுமே இருக்கின்றன.
புவி வெப்பமாதலினால் இங்குள்ள பனி உருகி வருகின்றது. இதன் மூலம் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவது
 குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மேற்கு அண்டார்டிக்காவில் அமைந்துள்ள லார்சன் சி பனியடுக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிளவால், பனிப்பாறை ஒன்று பிரிந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து விரிசல் ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலையில், பனிப்பாறையானது முழுவதுமாக உடைந்து பிரிந்து விட்டது நாசா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மூலம்
 உறுதியாகியுள்ளது.
5 ஆயிரம் சதுர கிலோமீட்டர் கொண்ட இந்த பனிப்பாறை லண்டனை விட நான்கு மடங்கு பெரியதாகும். இந்த பனித் தகர்வால் பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

​அண்டார்ட்டிக்காவின் வடக்கில் உள்ள பனியடுக்கான லார்சன் ஏ மற்றும் லார்சன் பி பகுதிகளில் இதுபோன்ற பனித் தகர்வுகள் ஏற்பட்டதால், அவை முற்றிலுமாக நொறுங்கிப் போயின. இதேபோன்று லார்சன் சி பகுதியிலும் நிகழுமோ என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

பனியடுக்கு உடைந்தால், இதே போன்ற உடைப்புகள் அண்டார்டிக்கா தீபகற்பம் முழுவதும் தொடரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள்.

உலக வெப்பமயமாதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில், நமது பூமியானது ஒரு பேராபத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதை இந்த பனித்தகர்வு நமக்கு காட்டுகிறது.

நாங்கள் கடந்த சில மாதங்களாக இந்த நிகழ்வை கண்காணிக்கின்றோம். இறுதி சில கிலோமீற்றர் பனிப்பாறை வெடிப்பதற்கு எடுத்து கொண்ட காலம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக Swansea பல்கலைக்கழகத்தின் Adrian Luckman என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

"நாங்கள் இந்த தாக்கத்தை தீவிரமாக கண்காணிக்கின்றோம். எனினும் இறுதியில் மிதக்கும் பனிப்பாறை தோற்றமே இந்த பனிப்பாறையின் விதி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தால் ஏற்படாத ஒரு இயற்கை நிகழ்வு ஆகும் என Martin O’Leary என்பவர் தெரிவித்துள்ளார். எனினும் இது மிகவும் பாதிக்கக்கூடிய நிலையில் உள்ளதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக