
காரை வழிமறித்து ஈரானின் ராணுவ ஆலோசகரும், மூத்த அணு விஞ்ஞானியுமான மொஹ்சென் பக்ரிசாதே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்தது. இதனால், ஈரான் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த படுகொலையால் ஆவேசம் அடைந்துள்ள ஈரான் அதிபர் ரவுகானி, ‘இதற்கு சரியான நேரத்தில் பழி தீர்ப்போம்’ என்று கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘ராணுவத்தினர் பதுங்கிப் பாய்ந்து தாக்குவது போல, ஒரு விஞ்ஞானியை மறைந்திருந்து வழி...