நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 25 பிப்ரவரி, 2021

ஆஸ்திரேலிய கொரோனா லாக்-டவுன் வர்த்தகர்களுக்கு உதவித்தொகை வழங்கும்

  ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் விமான நிலையத்தில் உள்ள  Holiday Inn ஹோட்டலில் கொரோனா பரவல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 12 முதல் 5 நாட்கள் முழு அடைப்பை அறிவித்தது விக்டோரியா மாநிலம். காதலர்கள் தினம் மற்றும் லூனார் புத்தாண்டு நாள் வந்த காலத்தில் அறிவிக்கப்பட்ட இந்த முழு அடைப்பினால் உணவகங்கள், பூச்செண்டு தயாரிப்பவர்கள், கலைஞர்கள், தங்குமிட வசதிகளை வழங்குபவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்ததாகக்...

தொற்றுக் கூடிய இடங்களில் பிரான்சில் உள்ளூர் மட்டத்தில் முடக்கம்

  பிரான்சில் வைரஸ் தொற்று வீதம் அதிகமாக உள்ள பகுதிகளில் உள்ளூர் மட்டத்தில் பொது முடக்கங்களை அமுல்ப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. நாடளாவிய தேசிய பொது முடக்கம் ஒன்றைத் தவிர்க்கும் ஓர் உத்தியாகவே பகுதி அளவில் கட்டுப்பாடு களை (reconfinement partiel) நடைமுறைப் படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.நீஸ் மற்றும் கேன் நகரங்களை உள்ள டக்கிய Alpes-Maritimes கடற்கரைப் பிராந்தியத்தில் ஏற்கனவே இறுக்கமான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே போன்று Hauts-de-France,...

புதன், 24 பிப்ரவரி, 2021

இங்கிலாந்தில் திருடப்பட்ட நாயை கண்டுபிடிக்க சென்ற இடத்தில் நிகழ்ந்த சம்பவம்

இங்கிலாந்தில் வசிக்கும் நபர் ஒருவர் திருட்டுபோன தனது நாயை கண்டுபிடிக்க சென்று திருடப்பட்ட சுமார் 70 நாய்களை கண்டுபிடித்துள்ளார்.டோனி க்ரோனின் என்ற நபர் தனது வீட்டில் வளர்ந்து வந்த ஸ்பானியல் வகை குட்டி நாய் உட்பட 5 நாய்கள் சமீபத்தில் காணாமல் போனது.அதனை கண்டுபிடிப்பதற்காக அவர் டிடெக்ட்டிவாகவே மாறி முழு வீச்சில் தனது நாய்களை தேடியுள்ளார்.இதுகுறித்து மெட்ரோ இங்கிலாந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,டோனி க்ரோனின் தனது நாய்கள் இருக்கும் இடம்...

திங்கள், 22 பிப்ரவரி, 2021

கொரோனாவை காரணம் காட்டி உலகநாடுகளின் சில அரசாங்கங்கள் அடிப்படை சுதந்திரத்தை மறுக்கின்றன

உலகநாடுகளின் சில அரசாங்கங்கள் கொரோனா வைரஸ் பரவலை ஒரு காரணமாக முன்வைத்து, அடிப்படை சுதந்திரத்தை குற்றமாகப் பிரகடனப்படுத்துவதற்கும் சுயாதீன செய்தி அறிக்கையிடலைத் தடைசெய்வதற்கும் அரச சார்பற்ற அமைப்புக்களின் செயற்பாடுகளில் இடையூறுகளை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கின்றன. மேலும் சில அரசாங்கங்கள் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாளும் முறைமை தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்த மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், அரசியல்...

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

லூசியானாவில் மெட்டைரி யில் துப்பாக்கி விற்பனை கடையில் துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் லூசியானாவில் மெட்டைரி என்ற பகுதியில் துப்பாக்கி விற்பனை கடை ஒன்று உள்ளது.  இது நியூ ஆர்லியன்ஸ் நகரில் இருந்து வடமேற்கே சில மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது.இந்நிலையில், கடையில் இருந்த நபர் ஒருவர் திடீரென 2 பேரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  இதில் பெண் உள்பட 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூட்டில் வேறு 2 பேர் காயமடைந்தனர்.அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக யுனிவர்சிட்டி மருத்துவமனைக்கு...

சனி, 20 பிப்ரவரி, 2021

தடுப்பில் ஆஸ்திரேலியவில் உள்ள அனைத்து அகதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்று கடல் கடந்த தடுப்பில் உள்ளிட்ட பல தடுப்புகளில் சிறைப்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழ் அகதியான தனுஷ் செல்வராசாவுக்கு சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியுலகத்தைக் காணுவதற்கான சுதந்திரம் கிடைத்திருக்கிறது. “இந்த சுதந்திரம் அற்புதமாக உள்ளது. ஆனால் எனது வாழ்க்கையின் எட்டு ஆண்டுக் காலத்தை நான் இழந்திருக்கிறேன்,” என செல்வராசா கூறியுள்ளார். அதே சமயம், சுமார் 100க்கும் மேற்பட்ட அகதிகள் விடுவிக்கப்படாமல்...

வியாழன், 18 பிப்ரவரி, 2021

அமெரிக்காவில் நாய்க்கு 100 கோடி ரூபா சொத்தை எழுதி வைத்த உரிமையாளர்

தான் பாசமாக வளர்த்த நாய், தனக்குப் பிறகு கஷ்டப்படக் கூடாது என்பதற்காக சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை நாய்க்கு எழுதி வைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த பாசக்கார நாய் உரிமையாளர் ஒருவர்.நாய் உரிமையாளர் கடந்த ஆண்டே இறந்துவிட்டாலும், சொத்து மதிப்பு இன்னும் மதிப்பிடப்பட்டு வருவதால், 100 கோடி ரூபாய்க்கு சொந்தமான நாய் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.அமெரிக்காவின் டென்னிசிஸ் பகுதியில்நாஷ்வில்லே பகுதியைச் சேர்ந்தவர் பில் டோர்ரிஸ்...

ஏமன் நாட்டில் உள்நாட்டு போரால் பசியால் வாடும் சிறார்கள்

ஏமன் நாட்டில் நடைபெற்று வரும் கடுமையான உள்நாட்டு போர் காரணமாக, அங்குள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, அன்றாட உணவுக்கு அல்லாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியா தலைமையிலான அரசு ஏமன் நாட்டு அரசு படைகளுக்கு ஆதரவாக இருந்து வரும் நிலையில், அவர்களுக்கும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்ட காலமாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் ஏமன் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்துவிட்ட நிலையில், கொரோனா காரணமாக...

திங்கள், 15 பிப்ரவரி, 2021

இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகிறார் இங்கிலாந்து இளவரசர் ஹாரி

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மெர்கல் 2வது குழந்தைக்கு தாயாக இருக்கிறார். இதுதொடர்பாக ஹாரி தம்பதியினர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர்.  இங்கிலாந்து மகாராணி 2-வது எலிசபெத்தின் 2-வது பேரன் ஹாரி, தொலைக்காட்சி நடிகையான மேகன் மெர்கலை காதலித்து திருமணம் செய்தார்.  ஹாரி கடந்த வருடம் மார்ச் மாதம் அரச வாழ்க்கையை விட்டு விலகுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து தனது மனைவியுடன் இங்கிலாந்து அரண்மனையை விட்டு வெளியேறினார். தற்போது இவர் தனது...

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசிகள் 1.5 கோடி பேருக்கு போடப்பட்டு உள்ளன

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசிகள் 1.5 கோடி பேருக்கு  போடப்பட்டு உள்ளன என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்..இங்கிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்து வந்தது.  இதனால் அடுத்த கட்ட ஊரடங்குக்கு அந்நாடு சென்றுள்ளது.  இதனை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு டிசம்பர் 8ந்தேதி தடுப்பூசி போடும் பணிகள் நடந்தன.இதன்படி, உலகிலேயே முதல் நபராக மார்கரெட் கீனன் (90), என்ற மூதாட்டிக்கு பைசர்...

விசா வாங்கித்தருவதாக ஆஸ்திரேலிய கூறி ஏமாற்றிய சீனப்பெண் சிறையில்

  ஆஸ்திரேலியாவில் போலி புலம்பெயர்வு முகவராக அறியப்பட்ட 38 வயது சீன பெண்ணுக்கு ஆறரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்வு தொடர்பான பல்வேறு மோசடியில் ஈடுபட்ட இப்பெண், பல்வேறு நபர்களிடமிருந்து சுமார் 3 லட்சம் டாலர்கள் பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் பதிவுச் செய்யப்பட்ட புலம்பெயர்வு முகவரைப் போன்ற வெளியில் காட்டிக்கொண்ட இப்பெண், விண்ணப்பிக்கப்படாத விசா விண்ணப்பங்களுக்கு பலரிடம் கட்டணம் பெற்றிருக்கின்றார். இப்பெண்...

சனி, 13 பிப்ரவரி, 2021

இணைப்பு விசாக்கள் ஆஸ்திரேலியவில் 12 ஆயிரம் அகதிகள்

ஆஸ்திரேலிய கடந்த ஆண்டு நவம்பர் மாத கணக்குப்படி, ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்ற சுமார் 12,000 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு குறுகிய கால இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இணைப்பு விசா என்பது தற்காலிகமானது என்பதால், குறிப்பிட்ட அகதியின் பாதுகாப்பு விசா பரிசீலிக்கும்படி வரும் வரையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை இணைப்பு விசா புதுப்பிக்க வேண்டிய சூழல் நிலவுவது அகதிகளை பெரும் சிரமத்துக்கு உள்ளாக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. எத்தோப்பிய...

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி திடீரென லண்டன் நோக்கிப் பயணமானார்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி திடீரென்று லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.லண்டனுக்கு புறப்படுவதற்கு முன்னர் விமான நிலையத்தில் படம் எடுத்து தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.ஒருவருட கற்கை நெறி ஒன்றினைப் பூர்த்தி செய்வதற்காக அவர் லண்டனுக்குச் செல்வதாக கூறியுள்ளார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளராக கடமையாற்றிவரும் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரின்போது,...