நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 8 டிசம்பர், 2022

பணக்காரர் பட்டியலில் உலகின் முதலாவது இடத்தை இழந்த எலான் மஸ்க் - முதலிடத்தில் யார்?

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தை எலான் மஸ்க் இழந்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளரான அவர் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3½ லட்சம் கோடிக்கு விலைக்கு வாங்கினார். இதையடுத்து அவர் டெஸ்லா நிறுவனத்தின் ரூ.32 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றார். இதற்கிடையே டுவிட்டர் நிறுவனத்தில் ரூ.3½லட்சம் கோடி முதலீடு செய்ததாலும் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிந்ததாலும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு குறைந்தது. இதையடுத்து...

புதன், 7 டிசம்பர், 2022

சீனாவின் ஷாங்காய் மாகாணத்த்தில் காரமான உணவை சாப்பிட்ட பெண்ணுக்கு நடந்த சோகம்

காரமான உணவை சாப்பிட்டுவிட்டு இருமிய பெண்ணின் 4 விலா எலும்புகள் உடைந்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.சீனாவின் ஷாங்காய் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹுவாங். இவர் காரமான உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென இருமல் ஏற்பட்டுள்ளது. வேகமாக இருமியபோது மார்புப்பகுதியில் ஏதோ நொறுங்குவது போன்று சத்தம் கேட்டுள்ளது. இருப்பினும் ஹுவாங் அதனை பெரிதாக பொருட்படுத்தவில்லை எனத் தெரிகிறது. ஆனால், அதன்புறகு அவருக்கு மார்பு பகுதியில் எப்போதும் வலி இருந்ததுடன்,...

திங்கள், 28 நவம்பர், 2022

பிரிட்டனில் பணி நாட்களை 4 நாட்களாக மாற்றியுள்ள உள்ள 100 நிறுவனங்கள்

உலகில் பல நிறுவனங்கள் வாரத்தில் 4 நாட்கள் வேலை என்ற கொள்கைக்கு மாறிவருகின்றன. அந்த வகையில் பிரிட்டனில் உள்ள 100 நிறுவனங்கள் தங்கள் அலுவலக பணி நாட்களை 4 நாட்களாக மாற்றியுள்ளன. இதனால் பணியை தவிர்த்து மற்ற நாட்களில் பணி நேரம் நீட்டிக்கப்படாது எனவும் சம்பளம் குறைப்பு நடவடிக்கையும் கிடையாது எனவும் அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பணி நேர குறைப்பால் இந்த 100 நிறுவனங்களில்...

வெள்ளி, 11 நவம்பர், 2022

நாட்டுக்கு செல்லமாட்டோம்; வியட்நாமில் கதறும் இலங்கையர்கள்

கனடாவுக்கு சட்டவிரோதமாக பயணித்த நிலையில், பிலிப்பைன்ஸ் கடலில் மீட்கப்பட்டு வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும் 303 சட்டவிரோத புகழிட கோரிக்கையாளர்களான இலங்கையர்கள் தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என கண்ணீர் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.அத்துடன் தங்களை மீட்ட அதிகாரிகள் தங்களை துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், இலங்கையில் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வாழ முடியாத சூழல் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.எனவே...

சனி, 29 அக்டோபர், 2022

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் - சீனாவின் ஷாங்காய் நகரில் ஊரடங்கு

சீனாவின் வர்த்தக தலைநகராக அறியப்படும் ஷாங்காய் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று பரவல் திடீரென உச்சம் தொட்டது. இதன் காரணமாக அங்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. இந்த கட்டுப்பாடுகள் 2 மாதங்கள் வரை அமலில் இருந்தன. இதன் காரணமாக அங்கு பொருளாதார சீர்குலைவு, உணவு தட்டுப்பாடு போன்ற சிக்கல்கள் எழுந்தன. மக்களின் கடும் எதிர்ப்புக்கு பிறகு ஷாங்காய் நிர்வாகம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இந்த நிலையில் ஷாங்காய்...

ஞாயிறு, 23 அக்டோபர், 2022

பரிதாப நிலையில் 120 இலங்கையர்கள் பிரித்தானியாவின் முடிவால்

தாய் நாட்டிற்கு தன்னிச்சையாக திரும்ப மறுத்தால், அவர்களை இடம் மாற்ற பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சாகோஸ் தீவுக்கூட்டங்களில் உள்ள டியாகோ கார்சியாவில் சுமார் 120 இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் புகலிடக்கோரிக்கையாளர்களை இன்னொரு மூன்றாவது நாட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைக்க பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால், எந்த நாட்டிற்கு என உறுதியான தகவலை வெளியிட பிரித்தானிய நிர்வாகம் மறுத்துள்ளது.தற்போது...

வியாழன், 15 செப்டம்பர், 2022

இலங்கையர்கள் நியூசிலாந்திற்கு வருகை தந்து வாழலாம்: விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு

 இலங்கையை போன்று இரு மடங்கு பரப்பளவுள்ள நியூசிலாந்தில் இலங்கையர்கள் வந்து வாழலாம் என்று நியூசிலாந்து உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்வுக்கான அதிகாரி ப்ரெட் ஷீல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.நியூசிலாந்து உயர் ஸ்தானிகராலயத்தின் நிதியளிப்பினால் ஸ்தாபிக்கப்பட்ட, காத்தான்குடி உளநல ஆற்றுப்படுத்தல் நிலையமும் சுய கற்றல் மையமும் நேற்று முன்தினம்(13) திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...

சனி, 3 செப்டம்பர், 2022

நிலவும் எரிசக்தி கட்டண உயர்வால் பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நிறுத்த தீர்மானம்

பிரித்தானியாவில் உள்ள கிராமங்கள், நகரங்கள் மற்றும் பெரும் நகரங்களில்  ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வண்ண வண்ண விளக்குகளால் கலை கட்டும். ஆனால் இந்த வருடம் பிரித்தானியாவில் மின் சக்தி கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் மில்லியன் கணக்கான மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில்  வணிக நிறுவனங்களும் இந்த முறை வண்ண வண்ண அலங்காரங்கள் செய்யாது என கூறியுள்ளனர். மேலும் நாடு முழுவதும் உள்ள கவுன்சில்களில் ...

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய போா்டு எஸ்காா்ட் கார் ரூ.6 கோடிக்கு ஏலத்தில் விற்பனை

உலக புகழ்பெற்ற இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த கார் விபத்தில் பலியானார். அவரது 25-வது நினைவு தினம் விரைவில் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் இளவரசி டயானா 1985 முதல் 1988 வரை பயன்படுத்திய போா்டு எஸ்காா்ட் வகையைச் சேர்ந்த ஒரு கார் இங்கிலாந்தில் 28-08-2022.அன்று  ஏலத்தில் விடப்பட்டது. இந்த ஏலத்தில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த செல்வந்தர்கள்...

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் தூங்கிய எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானிகள்

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737-800 விமானமானது சூடான் நாட்டின் கர்டொம் நகரில் இருந்து எத்தியோப்பியாவின் அட்டிஸ் அபபா நகரத்திற்கு பயணிகளை ஏற்றி  சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகளும் 37,000 அடி உயரத்தில் தானியங்கி விமானம் இயக்கியை  செலுத்தி விட்டு தூங்கி இருக்கின்றார்கள். இந்த சூழலில் அட்டிஸ் அபாபா நகருக்குள் நுழைந்த விமானம் தரையிறங்குவதற்கான எந்த ஒரு முன்னறிவிப்பையும்...

புதன், 17 ஆகஸ்ட், 2022

ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா அழிந்த டாஸ்மேனியன் புலி இனத்தை மீண்டும் கொண்டுவர முயற்சி

ஆஸ்திரேலியாவின் 'டாஸ்மேனியன் புலி' உலகில் அழிந்துபோன விலங்கினங்களில் ஒன்றாகும். இவை தைலசின் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த புலிகள் 1930-ல் வரை பூமியில் வாழ்ந்தன. அதன்பின்னர் வேட்டையாடுதல், ஒருவகையான நோய் காரணமாக இந்த வகை புலி இனங்கள் அழித்தன. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாகாணத்தில் உள்ள உயிரியியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த உலகின் கடைசி டாஸ்மேனியன் புலி 1936-ம் ஆண்டில் இறந்தது. இந்த நிலையில், ஸ்டெம் செல், ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பங்களை...

வெள்ளி, 29 ஜூலை, 2022

கொழும்புத் துறைமுகத்தை திடீரென வந்தடைந்த ஜெர்மனிய போர் கப்பல்

பயர்ன் (Bayern) எனப்படும் ​ஜெர்மனியின் போர் கப்பல், நேற்றைய தினம் (17) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.இந்தக் கப்பல் நாட்டை விட்டு வௌியேறுவதற்கு முன்னதாக இலங்கை கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது.இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜெர்மனியின் போர் கப்பல் நாட்டிற்கு வந்தடைந்துள்ளது.ஜெர்மனியின் பயர்ன் போர் கப்பல் 1996 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15 ஆம் திகதி சேவையில் இணைக்கப்பட்டது.அத்துடன், கடற்பரப்பு மற்றும் வான் பரப்பை...

செவ்வாய், 26 ஜூலை, 2022

நாட்டுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் டொலர் பெறுமதி வீழ்ச்சி

2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், இந்த நாடு பெற்ற வெளிநாட்டு தொழிலாளர்களின் தொகை 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.  இது 51.6 வீத வீழ்ச்சியாகும். கடந்த ஆண்டு இதே மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 478.4 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில், ஜூன் மாதத்தில் இலங்கைக்கு வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பிய தொகை 274.3 மில்லியன் டொலர்களாகும்.வெளிநாட்டு தொழிலாளர் விசாரணைகள் ஏப்ரல் மாதத்தில் 249 மில்லியனாக டொலர்களாக இருந்தது மற்றும் மே...

திங்கள், 25 ஜூலை, 2022

இரத்தினக் கற்களை வயிற்ருக்குள் கடத்திச்சென்ற இலங்கையர் சென்னையில் கைது

சென்னை விமான நிலையத்தில் வயிற்றில் இரத்தின கற்களை கடத்திச்சென்ற இலங்கை இளைஞன் ஒருவர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.கொழும்பில் இருந்து, 19ஆம் திகதி ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் சென்னை சென்ற இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள்...

செவ்வாய், 5 ஜூலை, 2022

பணியிட வெற்றிடங்கள் கனடாவில் அதிகரிப்பு விபரங்கள் இதோ

கனடாவில் தற்போது 1,001,100 வேலைக்கான வெற்றிடங்கள் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை ஒன்றில் இது குறித்த விபரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.சுகாதாரம் மற்றும் சமூக உதவித் துறைகளில் வெற்றிடங்கள் 136,800 என்ற சாதனையை எட்டியுள்ளன. கட்டுமானத் துறையில் மட்டும் 81,500 வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் உருவாகியுள்ளது.அதுமட்டுமின்றி, 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது உதவியாளர் மற்றும் தொழிலாளர் பணிக்கான வெற்றிடங்கள் 97 சதவீதம் உயர்ந்துள்ளதுடன்,...

வெள்ளி, 24 ஜூன், 2022

தல்கஸ்பிடியவில் இரண்டரை வயதில் சாதனை படைத்த சிறுவன்

இலங்கை கேகாலை மாவட்டம் தல்கஸ்பிடிய எனும் ஊரைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை நுஹான் நுஸ்கி எனும் சிறுவன் உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார்.19 வினாடிகளில் அனைத்து அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம் கண்டு சர்வதேச சாதனைப் புத்தகத்தில் (International Book of Records) தனது பெயரினை பதிவு செய்து உலக சாதனை படைத்து தனது பொற்றோர்களுக்கும், நாட்டுக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம் காணும் முதலாவது...

புதன், 15 ஜூன், 2022

பிரித்தானிய பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு தேவையின்றி ரயில்களில் பயணிக்க வேண்டாம்

பிரித்தானியாவில் அடுத்த வாரம் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், தேவையின்றி ரயில்களில் பயணிக்க வேண்டாம் என்று பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதன்படி, ஐந்தில் ஒரு பகுதி ரயில் சேவைகள் மட்டுமே இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜூன் 21, 23 மற்றும் 25 ஆகிய திகதிகளில் பிரித்தானியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ள நிலையில் பாதிக்கும் மேற்பட்ட ரயில் பாதைகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பல இடங்களில்...

சனி, 11 ஜூன், 2022

கட்டுப்பாடுகளை தளர்த்த அமெரிக்கா விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கோவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான தீர்மானம் ஒன்றை அமெரிக்க எடுத்துள்ளது.இதன்படி, நாளை முதல் கோவிட் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.முன்னதாக, வேறொரு நாட்டிலிருந்து வருபவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முன்பு, கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.எனினும், கோவிட்-19 தொற்று...

சனி, 4 ஜூன், 2022

ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் உணவிலிருந்து சிமென்ட்தயாரிப்பு

வீணாக்கப்படும் உணவுக் கழிவுகளில் இருந்து கட்டுமானத்திற்கு தேவையான சிமென்ட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றுக் கூறினால் நம்ப முடிகிறதா?‘நீங்க நம்பலனாலும் அதுதான் நெசம்’ஆம். ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் தொழில்துறை அறிவியல் ஆராய்ச்சியாளர்களான கோட்டா மச்சிடா, யுயா சகாய் ஆகிய இருவரும் இணைந்து வீணாகும் உணவுக்கழிவுகளை கொண்டு கட்டுமானப் பயன்பாட்டிற்கான சிமென்ட்டை தயாரித்திருக்கிறார்கள்.சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் உணவு பொருட்களில் இருந்து...

வெள்ளி, 3 ஜூன், 2022

தாய்லாந்தில் ஒருவரின் தொண்டைக்குள் துள்ளி குதித்த மீன்

தாய்லாந்து நாட்டின் பாட்தலங் மாகாணத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் ஆர்வத்தில் நபர் ஒருவர் சென்றுள்ளார். இதற்காக நீரில் தூண்டிலை போட்டு விட்டு காத்திருந்து உள்ளார். அவரது தூண்டிலில் மீன் சிக்குவதற்கு முன், நீரில் துள்ளி குதித்தபடியே வந்த மீன் ஒன்று, அந்த மனிதரின் தொண்டைக்குள் விழுந்துள்ளது.5 அங்குலம் நீளம் கொண்ட அந்த மீன் அவரது மூக்கு வழியே வெளியேற முயற்சித்து முன்னேறி உள்ளது. ஆனால், குறுகலான பகுதியில் அதனால் வெளியே வர முடியவில்லை. தொண்டைக்கும்,...

வெள்ளி, 27 மே, 2022

குரங்கு அம்மையால் கனடாவில் 16 பேருக்குபாதிப்பு உறுதி

கனடாவில்16 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.பாதிப்புக்குள்ளான 16 பேரும் அங்குள்ள கியூபெக் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டு, உள்ளூர் கிளினிக்குகளில் சிகிச்சை பெறுவதாக கனடா பொது சுகாதார துறை தெரவித்துள்ளது.அவர்களிடம் பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, கியூபெக் மாகாணத்துக்கு பொது சுகாதார துறை சிறிய அளவில் ‘இம்வாமுனே’ தடுப்பூசிகளை...