நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 9 நவம்பர், 2020

தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்பை, அவரது மனைவி மெலானியா விவாகரத்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்பை, அவரது மனைவி மெலானியா விவாகரத்து செய்ய உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ட்ரம்புக்கும் அவரது மூன்றாவது மனைவி மெலானியாவுக்கும் இடையே மனக் கசப்பு இருந்ததாகவும் ட்ரம்ப் அதிபராக இருக்கும் போது விவகாரத்து பெற்றால் தான் தண்டிக்கப்படலாம் என்ற அச்சத்தில் தற்போதுவரை காத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறியதும், அவரை மெலானியா விவாகரத்து செய்வார் என, வெள்ளை மாளிகையின் முன்னாள் ஊழியர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்
 தெரிவித்துள்ளன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 6 நவம்பர், 2020

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் களம்..வெள்ளை மாளிகையை கைப்பற்றப் போவது யார்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பென்சில்வேனியாவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் இன்று வெளியாகும் என மாநில செயலாளர் கெத்தி புக்வோர் தெரிவித்துள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 264 தேர்தல் வாக்குகளையும், டொனால்ட் ட்ரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளார்.
பைடனுக்கு 50.4 வீத வாக்குகள் கிடைத்துள்ள 
நிலையில், சமீபத்திய கணிப்புகளின்படி ட்ரம்பிற்கு 47.9 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.பைடன் வெற்றி பெற்று அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு ஆறு 
வாக்குகள் மட்டுமே தேவைப்படுகிறது.வாக்கு எண்ணும் பணிகளில் முறைக்கேடு நடந்துள்ளதாகவும் அதனால் மீள தேர்தலை நடத்துமாறும் கோரும் ட்ரம்ப், 50 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.அதனடிப்படையில் 
எலெஸ்கா மாநிலத்தில் 3 தேர்தல் தொகுதிகளும், ஜோர்ஜியா மாநிலத்தில் 16 தேர்தல் தொகுதிகளும், நெவாடா மாநிலத்தில் 6 தேர்தல் தொகுதிகளும், வட கரோலினா மாநிலத்தில் 15 தேர்தல் தொகுதிகளும் 
மற்றும் பென்சில்வேனியா மாநிலத்தில் 20 தேர்தல்கள் உள்ளனஆகவே இந்த ஐந்து மாநிலங்களின் முடிவுகளின் முடிவைப் பொறுத்தே இறுதி முடிவு அமையும் என கூறப்படுகின்றது.
பைடன் ஓரளவு முன்னிலை வகிக்கும் நெவாடா மாநிலம் தவிர மீதமுள்ள அனைத்து மாநிலங்களிலும் ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.அதிலும், குறிப்பாக 20 தேர்தல் வாக்குகளை கொண்ட பென்சில்வேனியா மாநிலத்தில் வெற்றி 
பெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.இங்கு ஆரம்பத்தில் ட்ரம்ப் 1,08,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார்.இதனால், ஜோ பைடன் பென்சில்வேனியாவில் நிச்சயம் வெற்றி பெறுவார் என ஜனநாயக கட்சி பிரசாரக்குழு 
கூறுகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில், பென்சில்வேனியாவில் வாக்குகள் எண்ணி 
முடிக்கப்பட்டு முடிவுகள் இன்று வெளியாகும் என
 மாநில செயலாளர் தெரிவித்துள்ளர் அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




வியாழன், 5 நவம்பர், 2020

தேர்தல்..2020- பராக் ஒபாமாவின் சாதனையை முறியடித்து வெற்றி நடை போடும் ஜோ பிடன்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், ஜோ பிடன் 264 தேர்தல் சபை வாகுகளுடன் முன்னிலையில் உள்ளார்.தற்போதுவரை
 ஜோ பிடன் பெற்றுள்ள வாக்குகள் 70,298,271 (50.3%)என பதிவாகியுள்ளது. இது 2008 ஆம் ஆண்டு அதிபர் பராக் ஒபாமா பெற்ற 69,498,516 என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுவரை 67,567,559 (48%) வாக்குகள் பெற்றுள்ளார். இது 2016 தேர்தலில் அவர் பெற்ற வாக்குகளைவிடவும், 2012-ல் அதிபர் பராக் ஒபாமா பெற்ற வாக்குகளைவிடவும் அதிகமாகும்.வாக்குகளை
 பெறுவதில் ஜோ பிடன் சாதனை 
புரிந்தாலும், தேர்தல் சபை வாக்குகள் அடிப்படையில் அதிபர் தேர்வு நடைபெறுவதால், இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் தங்கள் வேட்பாளரே இறுதியில் ஆட்சியை
 கைப்பற்றுவார் என கூறி வருகின்றனர்.அமெரிக்க அதிபர் தேர்தலில் வெள்ளை மாளிகையை கைப்பற்ற, ஒரு அமெரிக்க
 வேட்பாளர் மொத்தம் உள்ள 538 தேர்தல் வாக்குகளில் 270 ஐ வெல்ல வேண்டும். நவம்பர் 3 ம் திகதி தேர்தல் நாளுக்கு முன்னதாக 10 கோடி அமெரிக்கர்கள் வாக்களித்தனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 4 நவம்பர், 2020

விண்வெளியிலிருந்து அமெரிக்கத் தேர்தலில் வாக்களித்தர் கேட் ரூபின்ஸ்

அமெரிக்க விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ், அதிபர் தேர்தலுக்கான தனது வாக்கை விண்வெளியிலிருந்தே இரண்டாவது முறையாக பதிவுசெய்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு முதன்முறையாக அதிபர் தேர்தலுக்கான தனது வாக்க‍ை விண்வெளியிலிருந்து பதிவுசெய்தார் ரூபின்ஸ். குறை புவி சுற்றுப்பாதையில் இருந்துகொண்டு இவர் தனது வாக்கைப் ப
திவுசெய்தார்.¨

நிலாவரை.கொம் செய்திகள் >>>





ஞாயிறு, 1 நவம்பர், 2020

பிரித்தானியா..அடுத்த வாரம் முழுமையாக லொக்டவுணுக்கு செல்கிறது

அதிதீவிரமாக மாறும் கொரோனா.. வேறு வழியில்லாமல் அடுத்த வாரம் முதல் நாடு தழுவிய ரீதியில் லொக் டவுனை அறிவிக்க பொறிஸ் ஜேன்சன் தயாராகி வருவதாக  செய்திகள் வெளியாகி உள்ளது. இது நாள் வரை லொக் டவுன் என்னும் பிரச்சனை
 இழுபறி நிலையில் இருந்தது.
ஆனால், மருத்துவ விஞ்ஞானிகள் கொடுத்த அறிக்கை ஒன்றை முற்றாக படித்துப் பார்த்த பிரித்தானிய பிரதமர், லொக் டவுன் ஒன்றை கொண்டு வந்தால் தான், நிலையை கட்டுப்பாட்டினுள் கொண்டு
 வர முடியும் என்ற முடிவை எட்டியுள்ளார் என்று சற்று முன்னர் தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் அரசை மேற்கோள் காட்டி, பிரித்தானிய MP க்கள் பலர் லொக் டவுனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். காரணம் என்னவென்றால், பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் நாடுகளில் அரசின் திறைசேரியில் பணம் இல்லை என்பது தான். இந்த 2 நாடுகளும் ஏற்கனவே வங்குரோத்தில் சென்று தற்போது கடன்கார நாடாக 
மாறியுள்ளது
. எனவே பிரித்தானியாவையும் லொக் டவுன் செய்தால், பிரித்தானியா பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என பல MP க்கள் கருத்து 
தெரிவித்து வந்தார்கள்.இன் நிலையில் தான், மருத்துவ விஞ்ஞானிகளின் அறிக்கை ஒன்று வெளியாகி, உண்மை 
நிலையை உணர்த்தியுள்ளது.
 இதனால் அடுத்த வாரம் முழு அளவிலான லொக் டவுன் வரப்போகிறது.. பிரித்தானிய மக்களே  பிரித்தானியத்தமிழ்மக்களே .உங்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை சேமித்து 
வைத்தால் நல்லது

நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 29 அக்டோபர், 2020

நிலநடுக்கம் துருக்கி, கிரீஸ் நாடுகளில் 7 ரிக்டர் அளவில் 14 பேர்உயிரிழப்பு

துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளில்,30-10-20. இன்று மதியம் இடம்பெற்ற நில அதிர்வில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 419 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தால் பல கட்டங்கள் இடிந்துள்ளன. மீட்பு பணி நடைபெற்று 
வருகின்றது.
இந்த நிலநடுக்கம் துருக்கி கடற்கரையில் சமோஸ் தீவின் வடக்குப் பகுதியில் நியான் கார்லோவேசனுக்கு வடகிழக்கில் 8.5 மைல் தொலைவில் ஏஜியன் கடல் மத்தியில் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் 
கூறுகின்றன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




வியாழன், 22 அக்டோபர், 2020

பிரீசரில் ஒரு வருடத்திற்கு வைத்த நூடுல்ஸ்சை சாப்பிட்ட 9 பேருக்கு நேர்ந்த சோகம்

சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஹீலோங்ஜியாங் மாகாணம் ஜிக்சி நகரில் ஒரு வீட்டில் புளித்த சோள மாவு கலந்த வீட்டில் தயாரித்த நூடுல்ஸ் உணவானது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக 
பிரீசரில் பாதுகாக்கப்பட்டு வந்து உள்ளது. அந்த உணவை குடும்பத்தினர் அக்டோபர் 10 ஆம் திகதி அன்று சமைத்து 
சாப்பிட்டு உள்ளனர். இதில் 8 பேர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.இன்னொருவர் மருத்த்துவ சிகிச்சையில் குணமடைவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த 
நிலையில்,19-10- 20. திங்களன்று மரணமடைந்துள்ளார்.சூடோமோனாஸ் கோகோவெனான்கள் என்ற பாக்டீரியத்தால் உற்பத்தி செய்யப்படும் சுவாச 
நச்சுத்தொகையான போங்க்ரெக்கிக் அமிலத்தின் அதிக செறிவு சோள நூடுல்ஸிலும், நோய்வாய்ப்பட்டவர்களின்
 இரைப்பை 
திரவத்திலும் கண்டறியப்பட்டதாக மாகாண சுகாதார ஆணையம் அக்டோபர் 12 அன்று தெரிவித்துள்ளது.போங்க்ரெக்கிக் அமிலத்தால் மாசுபடுத்தப்பட்ட உணவை உட்கொள்வது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் விஷத்தை ஏற்படுத்தி மரணத்திற்கு கூட 
வழிவகுக்கும், இறப்பு விகிதம் 40 முதல் 100 சதவீதம் வரை அதிகமாக இருக்கும்.ஆனால், சம்பவத்தன்று, அந்த நூடுல்ஸ் உணவை சாப்பிட மறுத்த மூன்று குழந்தைகள், அதிர்ஷ்டவசமாக
 உயிர் தப்பியுள்ளது.பொதுவாக சோள மாவில் தயாரிக்கப்படும் நூடுல்ஸ் உணவானது, குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு ஒருவகை ரசாயனத்தால் கெட்டுப்போகும் எனவும், அது சீனாவில் அடிக்கடி நடப்பது தான் எனவும் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கெட்டுப்போன சோள மாவு நூடுல்ஸ் சாப்பிட்டதும் வயிற்று வலியில் தொடங்கி 24 மணி நேரத்தில் மரணம் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்தோனேசியாவில் இதுபோன்ற 
உடல் உபாதைகளால் 1951 முதல் 1975 வரை ஆண்டுக்கு
 288 பேர் பாதிப்புக்கு உள்ளானதாகவும், அதில் 34 பேர் மரணமடைந்துள்ளதாகவும் 
கூறப்படுகிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>