நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

மிரட்டும் டோரிஸ் புயல் பிரித்தானியாவில் பேரழிவு ஏற்படும் அபாயம்!!

பிரித்தானியாவில் டோரிஸ் எனும் புயல்காற்று வீசவுள்ளதால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது, டோரிஸ் புயலால் நாட்டில் அதிவேகக் காற்று, மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்படக் கூடும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை காற்று 80மைல் வேகத்தில் வீசக்கூடும். இன்று காலை ஐயர்லாந்தில் 87 மைல் வேகத்தில் காற்று...

வியாழன், 23 பிப்ரவரி, 2017

சர்வதேச புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் வழங்கும் ஆஸ்திரேலிய அரசு !

ஆஸ்திரேலிய அரசு வழங்கும் 2018ம் ஆண்டுக்குரிய Australia Awards சர்வதேச புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், மாலைதீவு, பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த Masters பட்டப்படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும். எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதிக்கு முன்னதாக இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பதற்கு நீங்கள் தகுதியானவரா என்று அறிந்து கொள்வதற்கும், இதற்கான விண்ணப்பத்தைத்...

திங்கள், 20 பிப்ரவரி, 2017

நீங்கள் அமெரிக்காவுக்குப் போறீங்களா மொபைல், லேப்டாப் எடுத்து செல்லாதீங்க!

அமெரிக்காவுல இருக்கிற அண்ணனோ, அக்காவோ நம்மள லீவுக்கு வரச்சொன்னா எவ்ளோ சந்தோஷமா கிளம்புவோம்? அப்படி ஒரு வாய்ப்பு வந்தா கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாக்-ல இருந்து கிருஷ்ணாயில் வரை அவங்க கேட்கிற எல்லாத்தையும் எடுத்துட்டுப் போங்க. ஆனா, உங்க மொபைலை மட்டும் இங்கயே வச்சிட்டுப் போங்க. ஆமாம் பாஸ். ஷாருக்கான் போனாலே “யார் மேன் நீ”ன்னு கேட்டு டவுசுர கழட்டுற நாடு அமெரிக்கா. இப்ப அவங்க  நாட்டுக்குள்ள வர்ற எல்லோருடைய மொபைல் போனையும் செக் பண்ண ஆரம்பிச்சாச்சு....

நூற்றி ஐம்பது கோடி ரூபாய்: தொலைக்காட்சி பெட்டிக்குள் கண்டதும் அதிர்ச்சியில் மூழ்கிய ஊழியர்

கனடா நாட்டில் பழைய தொலைக்காட்சி பெட்டிக்குள் கட்டுக் கட்டாக 1.50 கோடி ரூபாய் வைக்கப்பட்டிருந்ததை கண்ட பெண் ஊழியர் ஒருவர் அதனை நேர்மையாக பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார். ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Barrie நகரில் பழைய பொருட்களை மறுசுழற்சி செய்யும் மையம் ஒன்று  இயங்கி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இந்த மையத்திற்கு செயல்படாத பழைய தொலைக்காட்சி பெட்டி ஒன்று மறுசுழற்சிக்காக(recycling) வந்துள்ளது. தொலைக்காட்சி பெட்டியை வாங்கிய பெண் ஊழியர் ஒருவர்...

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

கனடிய சனத்தொகை2036இல் அரைவாசி பேர் குடியேற்றவாசிகள்?

 கனடாவின் சனத்தொகையில் 2036ஆம் ஆண்டளவில் மூன்றில் ஒரு பங்கினர் குடியேற்றவாசிகளாகவே காணப்படுவர் என ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சனத்தொகையில் 20 வீதமானோர் குடியேற்றவாசிகளின் குழந்தைகளாகவே காணப்படுவதுடன், நாட்டில் குடியேறும் குடியேற்றவாசிகளின் அரைவாசிக்கும் மேற்பட்டோர் ஆசியாவை சேர்ந்தவர்களாகக் காணப்படுவர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடாவின் சனத்தொகையில் குடியேற்றவாசிகளின் வீதம் கடந்த 2011ஆம் ஆண்டு 20.7 வீதமாகக்...

வியாழன், 2 பிப்ரவரி, 2017

இலங்கையருக்கு அமெரிக்காவில் பாதிப்பில்லை அமைச்சு தகவல்?

அமெரிக்க விமான நிலையங்களில் எந்த இலங்கையரும் சிக்கிக் கொள்ளவில்லை என வெளிவிவகார அமைச்சு  உறுதியளித்துள்ளது. அமரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடை உத்தரவிட்டதை அடுத்து இலங்கை உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி  வெளியிட்டிருந்தன. இந்த நிலையில்,அமெரிக்காவுடன் தொடர்பை ஏற்படுத்திய இலங்கை வெளிவிவகார அமைச்சு,பாதிக்கப்பட்டவர்களில் இலங்கையர் உள்ளடங்கப்படவில்லை என்ற இந்த செய்தியை  வெளியிட்டுள்ளது. ஈராக்,...