நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 31 மார்ச், 2018

பதின் மூன்று நாட்களில் லண்டனில் 11 பேர் கொலை

லண்டனில் கடந்த 13 நாட்களில் 11 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லண்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பல்வேறு காரணங்களுக்கான தனிப்பட்ட முறையில் இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் குறித்த கொலைகள் தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், வெகு விரைவில் குற்றவாளிகளை இனங் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும்...

ஞாயிறு, 18 மார்ச், 2018

நாடு கடத்தப்படுவதிலிருந்து நொடிப் பொழுதில் காப்பாற்றப்பட்ட தமிழ்க் குடும்பம்

ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட இருந்த தமிழ் குடும்பம் ஒன்று கடைசி நொடியில் விமானத்திலிருந்து இறக்கப்பட்டுள்ளனர். சட்டரீதியான நடவடிக்கையின் மூலம் வியத்தகு விதத்தில் அக்குடும்பம் நாடுகடத்தப்படுவதிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.‘நடேசலிங்கம்- பிரியா’  என்ற இணையரும் அவர்களின் இரண்டு குழந்தைகளுமே இதிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். பிரியாவின் இணைப்பு நுழைவு-விசா(டீசனைபiபெ ஏளைய) காலாவதியான நிலையில்,  கடந்த மார்ச்...

வியாழன், 8 மார்ச், 2018

சர்க்கு கப்பல் நடுக் கடலில் பற்றி எரிந்தது மாலுமிகளின் கதி என்ன?

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சர்க்கு கப்பல் ஒன்று இந்தியாவின் Lakshwadeep அருகே விபத்துக்குள்ளாகி கொழுந்து விட்டெரிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விபத்தில் சிக்கிய 23 மாலுமிகளில் 4 பேர் மாயமாகியுள்ளதாகவும் எஞ்சியவர்களை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.கப்பலில் தீவிபத்து ஏறபட்டதாக தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு குழுவினரின் முயற்சிகள் அனைத்தும் வீணானதாக குறித்த கப்பல் நிர்வாகம் தகவல்...

ஞாயிறு, 4 மார்ச், 2018

கடும் புயல் காற்று காரணமாக அமெரிக்காவில் 5 பேர் பலி

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் வீசிய கடும் புயல் காற்று காரணமாக 5 பேர் பலியாகினர். அந்த பிராந்தியத்தில் மணிக்கு 129 கிலோமீற்றர் வேகத்தில் புயல் வீசிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது வானூர்தி சேவைகள் மற்றும் தொடருந்து சேவைகள் என்பன இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெள்ளம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளநிலை பலர் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால்...