நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 25 ஏப்ரல், 2018

ரொறன்ரோவில் நான்கு உடலங்கள் துணியால் மூடப்பட்ட நிலையில்

கனடா ரொறன்ரோவில் 24-04-018-(கனடா நேரம்   பி.ப. 1:30) அளவில் 10 பேர் வரையில் வாகனத்தால் மோதப்பட்டுள்ளனர். தெருவெங்கும் காயமுற்றோர் காணபடுகின்ற நிலையில் இறந்தோர் எண்ணிக்கை தொடர்பான விபரங்கள் தெரியவில்லை நான்கு உடலங்கள் துணியால் மூடப்பட்ட நிலையில்.Yonge Street இல் Finch க்கும் Sheppard க்கும் இடையே காணப்படுவதாக   தெரிவித்தார். இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

சம்பளத்திற்கு எதிராக முறைப்பாடு: செய்து 52,000 டொலர்களைப் பெற்ற பெண்

பணிச்சுரண்டலுக்கு உள்ளாக்கிய முதலாளி மீது மெல்பேர்னைச் சேர்ந்த பூமிகா (வயது 29) முறைப்பாடு செய்ததன் மூலம் 52,000 டொலர்களைப் பெற்றுள்ளார். கடந்த 2014 மார்ச் மாதம் மெல்பேர்னில் குடியேறிய குறித்த பெண் மெல்பேர்ன் தென்கிழக்குப் பகுதியிலுள்ள இந்திய பலசரக்குக் கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். குறித்த பெண் முழு நேரமாக வேலை செயத நிலையில், மணித்தியாலத்திற்கு 16.50 டொலர்கள் மட்டுமே சம்பளமாக பெற்றதாக தெரிவித்துள்ளார். சம்பள பற்றுச்சீட்டு வழங்கப்படாத...

குய்லின் பகுதியில் ஆற்றில் படகுகள் கவிழ்ந்து விபத்து: 17 பேர் பரிதாப பலி

7 சீனாவின் குய்லின் பகுதியில் உள்ள தாவோஹுவாஜியாங் ஆற்றில் இரண்டு படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பரிதாபமாக பலியாகினர். குறித்த ஆற்றில் அவ்வப்போது படகு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். படகு போட்டிகள் நடாத்துவது எனில் பொலிசாரிடம் அனுமதி  பெற வேண்டும். இந்நிலையில் படகு போட்டி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், பொலிசாருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனையடுத்து போட்டிக்கு தயாராகி கொண்டிருந்த போது பயிற்சி...

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

வான்வழி ஏவுகணைகளை இடைமறித்து தகர்த்துள்ள ரஷ்யா

சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய 71 வான்வழி ஏவுகணைகளை இடைமறித்து தகர்த்துள்ளதாக ரஷ்யா இராணுவம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் மொஸ்கோவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ரஷ்ய உயர்மட்ட இராணுவ அதிகாரியொருவர் இதனை  தெரிவித்துள்ளார். சிரியாவின் பல்வேறு நிலைகளை நோக்கி 103 ஏவுகனை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கோட்டா பகுதியில் உள்ள விமான தளத்தின் மீது நடத்தப்பட்ட 12 வான்வழித் தாக்குதல்கள்...

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

இயற்கைப் பேரழிவுகளால் வரலாறு காணாத இழப்பு

 ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளால் 2017 ஆம் ஆண்டு  வரலாறு காணாத அளவிற்கு 144 பில்லியன் டொலர்கள்வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுவிஸ் காப்பீட்டு நிறுவனமான Swiss Re தெரிவித்துள்ளது. அமெரிக்காவையும் கரீபியன் தீவுகளையும் புரட்டி எடுத்த Harvey, Irma மற்றும் Maria ஆகிய மூன்று புயல்கள் ஏற்படுத்திய இழப்பு 92 பில்லியன் டொலர்கள் என்று அந்த நிறுவனத்தின் அறிக்கை  தெரிவிக்கிறது. அந்த நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவரான Martin Bertogg மோசமான பல புயல்கள்...

புதன், 11 ஏப்ரல், 2018

சில பல மணி நேர போராட்டத்திற்கு பின் வாஷிங் மெஷினில் சிக்கிய குழந்தை மீட்பு

சீனாவில் பல மணி நேர போராட்டத்திற்கு பின் வாஷிங் மெஷினில் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. குழந்தைகள் செய்யும் அக்கப்போருக்கு அளவே இல்லை. குழந்தைகள் விளையாட்டு என்ற பெயரில் அடிக்கும் லூட்டி சில சமயம் பெற்றோர்களை தர்ம சங்கட சூழ்நிலையிக்கு ஆளாக்கிவிடுகிறது. சீனாவின் செஜியாங் மாகாணத்தில உள்ள ஷவ்ஷாங் நகரில் சிறுவர், சிறுமிகள் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாட்டில் கலந்து கொண்ட இரண்டு வயது குழந்தை வாஷிங்மெஷினுக்குள்  ஒளிந்து...

ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரிய தலைநகர் அல்ஜீரிஸ் அடுத்து உள்ள பவ்பரிக் விமான நிலையத்திலிருந்து 200 ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு ராணுவ விமானம் புறப்பட்டுள்ளது.  இந்த விமானம் வடக்கு பகுதியில் உள்ள பெசார் என்ற நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது திடீரென கீழே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. ரஷ்ய தயாரிப்பு விமானமான இதில் ராணுவ வீரர்களை தவிர பயணிகளும் பயணித்தாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர்...

புதன், 4 ஏப்ரல், 2018

துப்பாக்கிப் பிரயோகம்: யூத் து பெ தலைமை அலுவலகத்தின் மீது நால்வர் படுகாயம்!

சாப் புருனோ YouTube தலைமை அலுவலகத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த சம்பவத்தில் நாலவர்  படுகாயமடைந்துள்ளதுடன், சந்தேகநபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா – சான்பிரான்சிஸ்கோ, சாப் புருனோ பகுதியில்  அமைந்துள்ள YouTube தலைமைஅலுவலகத்தின்மீதுஇன்றுஇந்ததாக்குதல்நடத்தப்பட்டுள்ளதுஅலுவலகத்திற்குள் நுழைந்த பெண் ஒருவரே...