நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 25 ஜனவரி, 2021

பனிப் பொழிவு பிரித்தானியாவில் -10 டிகிரி உறைவெப்பநிலையில் சிக்கித் தவிக்கும் மக்கள்

பிரித்தானியா அதன் மிக கடுமையான குளிர்கால இரவுகளை சந்திக்கவுள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.கிறிஸ்டோஃப் என்ற கொடிய புயலை அடுத்து , கடுமையான பனி மற்றும் மழையின் மற்றொரு இயற்கை தாக்குதலை பிரித்தானியா சந்திக்கவுள்ளதுமைனஸ் 10 டிகிரி செல்சியசுக்கு ஆர்க்டிக் பகுதியிலிருந்து பனிப்புயல் எதிர்பார்க்கப்படுவதாகவும், 6 அங்குலத்துக்கு பிரித்தானியா முழுவதும் பனிபொழிவு ஏற்படும் என வானிலை அலுவலகம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. முக்கியமாக...

வியாழன், 21 ஜனவரி, 2021

விடுதி தடுப்பிலிருந்து ஆஸ்திரேலியாவில் விடுவிக்கப்படும் அகதிகள்

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டுள்ள சுமார் 60 அகதிகளுக்கு ஆஸ்திரேலிய அரசு தற்காலிக இணைப்பு விசா வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து,21-01-2021. இன்று மெல்பேர்ன் ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த 26 அகதிகளுக்கு ஆறு மாத இணைப்பு விசா வழங்கப்பட்டு விடுவிக்கப்படுள்ளதாக தஞ்சக்கோரிக்கையாளர் வள மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் 34 பேர் நாளை விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

முதல் பெண் துணை அதிபராக அமெரிக்காவில் கமலா ஹாரிஸ்

அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்றார்.இந்நிலையில் கமலாஹாரிஸின் பூர்வீகமான திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராம மக்கள் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலான தர்ம சாஸ்தா சேவகபெருமாள் ஆலயத்திற்கு கமலா ஹாரிஸ் 1991ம் ஆண்டு நன்கொடை அளித்துள்ளதாகவும்,...

ஒஸ்திரியாவில் 30 உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு

ஒஸ்திரியாவில் இடம்பெறும் சிறிலங்காவின்  73வது சுதந்திர தின வைபவத்திற்கு அமைவாக ஒஸ்திரியாவில் விற்பனை செய்யக்கூடிய இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் 30 பொருட்களுக்கு போட்டிமிகு விநியோகஸ்தர்களை கவருவதற்கு அந்நாட்டிலுள்ள எம் டி சி எக்ஸோடிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.எம் டி சி எக்ஸோடிக் வர்த்தக தொகுதியின் ஒத்துழைப்புடன் இலங்கையின் தயாரிப்புகளை எந்தவித செலவுகளுமின்றி வியன்னாவில் உள்ள நகர் மத்திய நிலையத்தில் காட்சிப்படுத்துவதற்கான வசதிகளை செய்வதற்கு...

திங்கள், 18 ஜனவரி, 2021

புதிய வைரஸ் பிரான்ஸில் மார்ச் மாதமே தீவிரமாகுமாம் :தேசிய சுகாதார ஆராய்ச்சி மையம்

தற்சமயம் நாடெங்கும் பரவி வருகின்ற இங்கிலாந்து வைரஸ் வரும் பெப்ரவரி மாத இறுதியில் தொடங்கி மார்ச் மாதத்தில் தீவிரமடையலாம்.பிரான்ஸின் தேசிய சுகாதார மருத்துவ ஆராய்ச்சி மையம் (The Institut national de la santé et de la recherche médicale – Inserm) இவ்வாறு மதிப்பிட்டுள்ளது. சுகாதாரக் கட்டுப்பாடுகளை இறுக்கி தடுப்பூசி ஏற்றுவதை இயன்றவரை விரைவுபடுத்து வதன் மூலம் புதிய வைரஸின் மோசமான விளைவுகளைத் தணிக்க முடியும் என்றும் அது தெரிவித்துள்ளது.தடுப்பூசி...

வெள்ளி, 15 ஜனவரி, 2021

வலுவான தீர்மானம் இலங்கைக்கு எதிராக கொண்டு வரவேண்டும் மெக்டொனாக்

எதிர்வரும் மார்ச் மாதத்தில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக வலுவானதொரு தீர்மானத்தை பிரித்தானிய அரசு கொண்டு வர வேண்டும் என்று பிரித்தானிய தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டோனாக் வலியுறுத்தியுள்ளார். பிரித்தானியப் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.அவர் மேலும் குறிப்பிடுகையில் , மனித உரிமை மீறல்கள் மற்றும் இறுதிக்கட்ட போரில் ஏற்பட்ட...

புதன், 13 ஜனவரி, 2021

கனடாவில்கணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண்

கனடாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமுலில் இருந்தவேளை தனது கணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண் மீது காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கியூபெக் மாகாணத்தில் உள்ள ஷெர்ப்ரூக் நகரில் இந்த சம்பவம் கடந்த 09-01-2021.சனின்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது.கொரோனா பரவல் காரணமாக கனடாவில் நான்கு வார காலத்திற்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் மக்கள் வீடுகளை விட்டு...

சனி, 9 ஜனவரி, 2021

ஒலிம்பிக் 2021 ஆம் ஆண்டு நடப்பதும் சந்தேகமே வெளியான புதுத் தகவல்

ஒலிம்பிக் 2021 ஆம் ஆண்டு  நடப்பதும் சந்தேகமே என ஒலிம்பிக் தலைமை செயல் அதிகாரி சூசகமாக தெரிவித்துள்ளார்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது தெரிந்ததே.இதன்படி ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 08 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாராலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 24 தொடங்கி செப்டம்பர் 5 ஆம் தேதி...

வியாழன், 7 ஜனவரி, 2021

கொரோனா தொற்ரால் யேர்மனியில் ஒரு நாளில் 1019 பேர் பலி!!!

யேர்மனியில் கொரோனா தொற்று நோய்க்கு 1019 பேர் 06-01-21அன்று  புதன்கிழமை உயிரிழந்துள்ளனர். அத்துடன் 26,651 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது  இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>...

கொரோனா தொற்ரால் பிரித்தானியாவில் ஒரு நாளில் மட்டும் 1041 பேர் பலி

பிரித்தானியாவில் உருமாறிய வீரியமிக்க கொரோனா தொற்று நோயினால் ஒரு நாளில் 06-01-21.அன்று  புதன்கிழமை)மட்டும் 1041 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்62,322 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.இங்கிலாந்து மருத்துவமனைகளில் 30,074 கோவிட் நோயாளிகள் உள்ளனர். தொற்று நோயாளிகள் எண்ணிக்கை கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் 37 சதவீதம் அதிகரித்துள்ளது. மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்து வர முடியாமல் ஆம்புலன்ஸ் சேவை திணறி வருகின்றது.அடுத்த சில வாரங்களுக்கு இறப்புகளின்...

செவ்வாய், 5 ஜனவரி, 2021

பிரிட்டநில் 6 வாரத்துக்கு பாடசாலைகள் பூட்டு!பரீட்சைகள் ரத்து

 பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தேசிய அளவில் நாட்டை முடக்கும் கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறார்.05-01-21. இன்று செவ்வாய் முதல் அங்கு பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டு பரீட்சைகள் இரத்தாகின்றன.உடனடியாக அமுலுக்கு வருகின்ற கட்டுப்பாடுகள் பெப்ரவரி நடுப்பகுதி வரை – சுமார் ஆறுவாரங்கள் – தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.டவுணிங் வீதி பிரதமர் அலுவலகத்தில் இருந்து லண்டன் நேரப்படி இன்றிரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய...