நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 2 ஜூன், 2018

அகதிகளுக்கு ஜேர்மனியில் இனி இடமில்லை!

ஆயிரக்கணக்கான அகதிகளை கரம் நீட்டி வரவேற்ற ஜேர்மன் நகரம் ஒன்று தற்போது தங்கள் நகரம் நிரம்பி வழிவதாகவும் இனி அங்கு அகதிகளுக்கு இடமில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஜேர்மனியின் Salzgitter நகரத்தின் இந்த முடிவால் ஏற்கனவே யுத்தத்தால் பிரிக்கப்பட்ட குடும்பங்கள் இன்னும் தங்கள் அன்பிற்குரியவர்களுடன் சேர முடியாத சூழ ஏற்பட்டுள்ளது.
ஆனால் இன்னும் பலரை நகருக்குள் அனுமதிப்பதால் அதன் உள்கட்டமைப்பும் ஒருங்கிணைப்பும் பாதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



ஜேர்மனியின் வடக்கிலிருக்கும் நகரமான Salzgitter, நாட்டில் புதிய வாழ்க்கையை தேடி வரும் அகதிகளுக்கு புகலிடம் அளிக்கும் நகரம் என்னும் வரலாற்றுப் பெருமை கொண்ட நகரமாகும்.



2015 ஆம் ஆண்டு அகதிகள் பிரச்சனையின்போது ஏஞ்சலா மெர்க்கல் அகதிகளை தங்கள் நாட்டிற்கு வரவேற்றது முதற்கொண்டு ஜேர்மனி ஐரோப்பாவிலேயே எந்த நாட்டிலும் இல்லாத அளவில் ஒன்றரை மில்லியன் அகதிகளுக்கு தஞ்சம் அளித்தது குறிப்பிடத்தக்கது.



அந்த நேரத்தில் Salzgitter 6000 அகதிகளுக்கு தஞ்சம் அளித்தது. ஆனால் இனி அங்கு அகதிகளுக்கு இடமில்லை.



இந்த செய்தி, தானும் தங்கள் இரட்டைப் பிள்ளைகளும் ஜேர்மனியிலும் தங்கள் கணவரான சமே வாடா நாட்டிற்கு வெளியிலும் வாழும் ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளதாக கவலை தெரிவிக்கும் காட்யா அப்துல்லா போன்ற பெண்களின் துயரத்தை அதிகரித்துள்ளது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




வெள்ளி, 1 ஜூன், 2018

மர்மமான முறையில் பெல்ஜியத்தில் உயிரிழந்த இலங்கை யுவதி

வவுனியா - பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் உயிரிழந்துள்ளார்.
அவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிள்றுது.
பெல்ஜியம் நாட்டில் பெற்றோருடன் வசித்து உயர்கல்வி கற்று வந்த 23 வயதுடைய ஆறுமுகம் லக்‌ஷிகா எனும் யுவதியே இவ்வாறு பெல்ஜியத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கியவராகும். இந்த நிலையில் இவரது மரணத்தில் பலத்த சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, யுவதியின் மரணம் தொடர்பில் பல்வேறு கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
 வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

இலங்கையர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை

வெளிநாடு ஒன்றில் தங்கியிருக்கும் 104 இலங்கையர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பிற்காக இஸ்ரேல் நோக்கி பயணித்து தற்போது வீசா காலம் நிறைவடைந்துள்ள நிலையில் சட்டவிரோதமாக அங்கு தங்கியுள்ளவர்களுக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்களில் 60 பேருக்கு நீதிமன்றம் சட்ட நடவடிக்கையினை முன்னெடுதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 30 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க தயாராகவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு
 தெரிவித்துள்ளது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 24 மே, 2018

ரொறன்ரோ மாநகர வீதியில் கட்டிப் புரண்டு சண்டை போட்ட இளம் பெண்கள்

கனடா ரொறன்ரோ மாநகர வீதியில் நடு வீதியில் கட்டிப் புரண்டு சண்டை போட்ட இளம் பெண்களை பொலிஸார் வளைத்துப் பிடித்தனர்….. அண்மைக்காலமாக ரொறன்ரோவில் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் 
அதிகரித்து வருகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 22 மே, 2018

லண்டனில் இலங்கை தமிழ் இளைஞன் படுகொலை

பிரித்தானிய தலைநகர் லண்டனில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கொலையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பிரித்தானிய தலைநகர் லண்டனில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கொலையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த துயர சம்பவம் தென் லண்டனில் அமைந்துள்ள Mitcham பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி
 வெளியிட்டுள்ளது.
வாழ்வாதாரம் தேடி பிரித்தானியா சென்ற குறித்த இளைஞரின் குடியிருப்புக்கு அருகாமையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதாக
 தெரியவந்துள்ளது.
அத்துடன், உத்தம வில்லன் என கூறப்படும் இந்த இளைஞர் மிகவும் பணிவானவர் மற்றும் அன்பானவர் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 8 மே, 2018

அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட இலங்கையர்கள் கைது

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு சென்ற 131 இலங்கையர்கள் மலேசியா பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு, மலேசிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவேளை, மலேசிய தெற்கு கடல் பிரதேசத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 98 ஆண்கள், 24 பெண்கள் மற்றும் 7 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.குறித்த இலங்கையர்களை அழைத்துச் சென்ற இந்தோனேஷிய நாட்டவர்கள் 3 பேர் மற்றும் மலேசிய நாட்டவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு குடியகல்வு விதிமுறைகளை மீறியமை, மனித கடத்தல், பொருள் கடத்தல் போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவர்கள் யொகோ பாரு எனும் தடுப்பு முகாமில் தடுத்து 
வைக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அகதி முகாமைத்துவ முகவர் நிலையத்தினால் 43 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு இருந்தமையும், ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.சுமார் ஒரு வருடங்களின் பின்னர் வெளிநாட்டுக்குள் சட்டவிரோதமாக குடியேற முயன்ற பெருந்தொகையினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மலேசிய பொலிஸார்
 தெரிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 3 மே, 2018

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள தமிழ் குடும்பம்!

இலங்கை குடும்பம் ஒன்று அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தலை எதிர்நோக்கியுள்ளது.
இந்த நிலையில் இந்த இலங்கை தமிழ்க் குடும்பம் தொடர்பில், மெல்போர்ன் நீதிமன்றம் நாளை தீர்மானிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.
நடேசலிங்கம், பிரியா என்ற குறித்த இலங்கை தம்பதியினருக்கு, அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்தநிலையில், அவர்களின் நாடு கடத்தலை எதிர்த்து, அகதிகள் சபை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
அவர்களின் நாடு கடத்தலைத் தவிர்க்க சாதகமான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தமிழ் அகதிகள் சபையின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>