நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

வட்ஸ்அப் நிறுவனம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு செயற்பாடுகள் நிறுத்தம்

எதிர்வரும் 01-11-2021. நவம்பர் மாதம் முதல் 43 வகையான தொலைபேசிகளில் WHATSAPP பயன்படுத்தினவர்களுக்கு அதிர்ச்சி தகவல்43 வகையான ஸ்மாட்போன்களுக்கு வட்ஸ்அப் சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.உலகின் அதிகளவான 
ஸ்மார்ட்போன் பாவனையாளர்கள் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் வட்ஸ்அப் நிறுவனம் கடந்த சில மாதங்களாக புதிய பல அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.இருப்பினும், எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் அதிக எண்ணிக்கையிலான ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதன் செயற்பாட்டை நிறுத்துவதாக நிறுவனம் 
அறிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

நோர்வே நாட்டில் யாழ் பல்கலைக்கழக மாணவியின் திறமைக்கு கிடைத்த வாய்ப்பு

யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உதவி இரசாயன விரிவுரையாளர் நோர்வே நாட்டின் அழைப்பை ஏற்று ஆராய்ச்சிக்காக அங்கு சென்றுள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் உதவி இராசாயன விரிவுரையாளராக கடைமையாற்றியவர் தான் சுகுமார் – ரவீனா பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்தில் உயர் புள்ளிகளை பெற்று சாதனை
 புரிந்துள்ளார்.
இந்த நிலையில் மாணவி சுகுமார்-ரவீனா நோர்வே நாட்டில் உள்ள அக்டர் பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்று ஆராய்ச்சிக்காக நோர்வே நாட்டிற்கு சென்றுள்ளார்.
மேலும் அக்டர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட உள்ள ரவீனா பொதுபட்டமளிப்புவிழாவில் மூன்று விஷேட தங்கபதக்கங்களைப் பெற்றுள்ளார் என்பதோடு இவரது ஆய்வுகட்டுரை கடந்த ஆண்டு இங்கிலாந்து பல்கலைக்கழகமொன்றினால் இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




சனி, 4 செப்டம்பர், 2021

வெடித்து சிதறிய ஃபயர் ஃபிளை விண்ணுக்கு ஏவிய முதல் ரொக்கெட்

அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ‘ஃபயர் ஃபிளை’ விண்ணுக்கு ஏவிய முதல் ரொக்கெட் நடு வானில் வெடித்துச் சிதறியது என விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் ருவிட்டரில் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள வன்டன்பெர்க் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து ‘ஆல்பா’ என்ற ரொக்கெட், விண்ணுக்கு ஏவப்பட்டு 2 நிமிடங்கள் 30 வினாடிகளில் வெடித்து சிதறியுள்ளது.DAMIKA 01 கலிபோர்னியா கடல் பகுதியில் பசுப்பிக் பெருங்கடலுக்கு மேலான வான்பரப்பில் இந்த ரொக்கெட் வெடித்து சிதறியதாக விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விண்ணுக்கு ஏவப்பட்டு சிறிது நேரத்தில் ரொக்கெட் முதல் சுற்றுப்பாதையை அடைய முயன்றபோது அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது வெடித்துச் சிதறியுள்ளது எ னவும் மேலும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

ஓமானில் இருக்கும் இலங்கை பெண் பாரிய மனித கடத்தலில் ஈடுபட்டுவந்தார்

ஓமானில் உள்ள இலங்கை பெண் ஒருவர், பாரிய மனித கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர் என்று குற்றம் 
சுமத்தப்பட்டுள்ளார்.
இந்திய உத்தர பிரதேசத்தில் உள்ள காவல்துறையினர், பல நாடுகளில் பரவியிருக்கும் ஒரு, பாரிய மனித கடத்தல் தொடர்பை 
கண்டுபிடித்துள்ளனர்.
இதன்மூலம், ஓமன், கட்டார் போன்ற வளைகுடா நாடுகளில் நல்ல வேதனத்துடன் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி 24 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர் என்று பிரஸ் டிரஸ்ட் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் மற்ற பகுதிகளான பஞ்சாப், கோவா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலிருந்து சென்றவர்கள்.
அதேநேரம் இலங்கை, நேபாளம், பங்காளதேஷ் , பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளிலிருந்தும் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

இத்தாலியில் வீடொன்று ஒரு யூரோவுக்கு விற்பனை (இலங்கை நாணயம் 232 ரூபா)

இத்தாலியில் வீடொன்று 232 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இத்தாலியின் தலைநகர் ரோமில் இருந்து 70 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள மென்சா என்கிற நகரிலேயே இவ்வாறு ஒரு யூரோவுக்கு (இலங்கை நாணய மதிப்பில் 232 ரூபா) வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன
1968 ஆம் ஆண்டு பெலிஸ் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு பின் மக்கள் மென்சோ நகரில் இருந்து வெளியேற ஆரம்பித்துள்ளனர். இதனால் மென்சோ நகரத்தில் மக்கள் தொகை கணிசமான 
அளவு குறைந்துள்ளது.
இதையடுத்து இந்த நகரில் மீண்டும் மக்கள் அதிகளவில் குடியேற வேண்டும் என்பதற்காக, இத்தாலி அரசாங்கத்தினால் அங்குள்ள வீடுகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து அந்நகரின் மேயர் கிளாடியோ ஸ்பெர்டி தெரிவிக்கையில், ”வீடுகளின் விற்பனைக்கான விண்ணப்பங்கள் 28 ஆம் திகதியுடன் முடிவடையும். தற்போது ஒரு சில வீடுகள் மட்டுமே விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
நகரில் இருக்கும் கைவிடப்பட்ட அல்லது எவரும் குடியேறாத பல வீடுகள் எதிர்காலத்தில் விற்பனை செய்யப்படும்
எனக் கூறினார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

தங்கம் விலை சில தினங்களாக குறைந்துவந்த நிலையில் திடீரென மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதன்படி சர்வதேச சந்தையில் கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து தங்கம் விலையானது ஏற்றத்தினை கண்டு வருகின்றது
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை.18-08-2021. இன்று 1794.10 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது.
ஒரு அவுன்ஸ் தங்கம் விலை கடந்த வார இறுதியில் 1763.50 டாலர்களுக்கு அருகில் வர்த்தகமாகி முடிவடைந்திருந்தது.
இதேவேளை 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று யாழ்ப்பாணத்தில் ரூபா.123,000 வரையில் விற்பனையாகி வருகின்றது.
அத்துடன் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூபா.112,000 வரையில் விற்பனையாகி உள்ளமை கூறத்தக்கது.
எவ்வாறாயினும் நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்ற நிலையிலேயே இருந்து வருகின்றது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



கபூல் விமானத்தில்இருந்து இருவர் கீழே தவறி வீழ்ந்து உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து இருவர் கீழே தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான டுவிட்டர் காட்சிகள் வெளியாகியுள்ளன.இந்த நிலையில், அது கபூல் விமான நிலையத்திலிருந்து விமானமொன்று உயர எழும்போது, அதிலிருந்து இருவர் தவறுதலாக வீழ்வதை 
வெளிக்காட்டியுள்ளது
தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற, காபூலில் அமைந்துள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.விமான நிலையத்தின் வளாகத்தில் மக்கள் திரண்டதால், அமெரிக்கப் படைகள் வான் நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான், காபூல் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>