நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 17 மார்ச், 2017

கனடா செல்லும் இலங்கையர் வீசா அனுமதி பெற வேண்டுமா?

இலங்கையர்களுக்காக தமது வீசா கொள்கையில் எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என கனடா அரசாங்கம் 
​தெரிவித்துள்ளது.
90 நாட்களுக்கு இலங்கையர்கள் வீசா இன்றி கனடாவில் சுற்றுலா அடிப்படையில் பிரவேசிக்க முடியும் என வௌியான தகவல்களை நிராகரிக்கும் வகையில் இந்த அறிக்கை 
வௌியிடப்பட்டுள்ளது.
வர்த்தக நடவடிக்கைகளுக்காகவோ, சுற்றுலாவுக்காகவோ கனடாவுக்கு செல்லும் இலங்கையர்கள் தொடர்ந்தும் வீசா அனுமதியைப் பெற வேண்டியது கட்டாயம் என கொழும்புக்கான கனடா உயர்ஸ்தானிகர் காரியாயலம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, தமது நாட்டிற்கு வருவதற்கு முன்னர் உரிய வீசா தேவைப்பாடுகளை தௌிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 8 மார்ச், 2017

கனடாவில் வதிவிட நிபந்தனையை கடைப்பிடிக்காதோர் வெளியேற்றப்படுகின்றனர்!

வதிவிட நிபந்தனைகளை நிறைவேற்றாததன் காரணமாக, கனேடிய எல்லைகளில் இடைமறிக்கப்பட்டு, கனடாவில் இருந்து வெளியேற்றப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டொன்றிற்கு
 சராசரியாக 1,400 ஆகும்.
இவ்வாறு வெளியேற்றப்படும் புதிய குடிவரவாளர்கள் தமது நிரந்தர வதிவுடைமையை மீளப்பெறும் பொருட்டு மேன்முறையீடு செய்யலாம் எனினும், அத்தகைய மேன்முறையீடுகளில் பத்தில் ஒன்றே வெற்றியடையும் சாத்தியம் உள்ளது என அரச தரவுகள் 
தெரிவிக்கின்றன.
கனேடிய குடிவரவுச் சட்ட விதிகளுக்கமைய, ஐந்து வருட காலப்பகுதியினுள் 730 நாட்கள் கனடாவில் தங்கியிருந்தால் மட்டுமே அவர்கள் தமது நிரந்தர வதிவிட உரிமையை தக்கவைத்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்யத்தவறும் பட்சத்தில் அவர்களது நிரந்தர வதிவிட உரிமை
 பறிக்கப்படும்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 7 மார்ச், 2017

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் சோதனை!

கண்டம் விட்டு கண்டம் பாயும் 4 புதிய ஏவுகணைகளை ஏவி வடகொரியா நேற்று சோதனை செய்தது. இந்த ஏவுகணைகள் எல்லை தாண்டி ஜப்பான் கடலுக்குள் நுழைந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா உள்பட பல்வேறு உலக நாடுகளில் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை, அணுகுண்டு சோதனை, ஹைட்ரஜன் குண்டு சோதனைகளை நடத்தி வருகிறது.
நேற்று மீண்டும் 4 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தி உள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணைகள் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கை தாக்கக்கூடியவை. இச்சோதனை வெற்றி பெற்றதாக வடகொரியா கூறியுள்ளது. இதில் 3 ஏவுகணைகள் 
எல்லை தாண்டி ஜப்பான் கடல் பகுதியில் சென்று விழுந்ததால் புதிய பதற்றம் உருவாகி இருக்கிறது.
இதுதொடர்பாக ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபி கூறுகையில், “வடகொரியா 4 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது. இந்த சோதனைகள் ஒரே நேரத்தில் நடந்தன. இதில் மூன்று ஏவுகணைகள்
 ஜப்பான் கடல் பகுதியில் வந்து விழுந்தன” என்றார். மேலும் வடகொரியாவின் செயல் குறித்து ஜப்பான் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே தென்கொரியாவும் இதனால் ஆத்திரம் அடைந்துள்ளது. தென்கொரியாவின் அதிபர் பொறுப்பில் இருக்கும் வாங் யோ ஆன் உடனடியாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.
மேலும் வடகொரியாவின் ராணுவ நகர்தலை தொடர்ந்து கண்காணிக்கும்படி ராணுவத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார். வடகொரியாவின் இந்த சோதனை அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப்பிற்கு விடப்பட்ட நேரடி சவால் என்று தென்கொரியா கருத்து தெரிவித்துள்ளது.
அதோடு கடந்த வாரம் அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து யாங்யாங் கடல் பகுதியில் அணு ஆயுத
 போர் பயிற்சி மேற்கொண்டன. அதற்கு பதிலடியாக வடகொரியா இந்த சோதனையில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




குடும்ப விசா விண்ணப்பிப்பவர்களுக்கு பிரித்தானியாவில் புதிய சட்டம்?

பிரித்தானிய அரசாங்கம் குடும்ப விசா ஊடாக வந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் (30 மாதங்கள்) தொடர்ந்தும் தங்கும் வதிவுரிமை விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய ஆங்கில மொழி தேவையை அமுல்படுத்த உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
குடும்ப விசா மூலம் மிகவும் அடிப்படை ஆங்கில அறிவுடன் பிரிட்டனுக்குள் வந்தவர்களை இந்த நடைமுறை மூலம் பிரித்தானிய சமுதாயத்திற்குள் ஐக்கியமாவதை ஊக்கப்படுத்த முடியும் என்று அரசாங்கம்
 தெரிவித்துள்ளது.
Family route ஊடாக தொடர்ந்தும் ஐக்கிய இராச்சியத்தில் தங்குவதற்கு விண்ணப்பம் மேற்கொள்ளும் ஐரேப்பிய (EEA) நாடுகளைச் சாராத பெற்றோர்கள் மற்றும் கணவன் மனைவி விண்ணப்பத்தாரர்களுக்கு இந்த புதிய A2 ஆங்கில மொழி தேவைச் சட்டம் 01 மே 2017யிலிருந்து நடைமுறைக்கு வருகின்றது.
அத்துடன், இந்தத் திகதிற்குப் பின்னர், கணவன் மனைவி மற்றும் பெற்றோர் ஆக ஐந்து வருட வதிவிட முறை மூலம் மேலதிக 
தங்குமிட விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கும் இந்த ஆங்கில மொழி விதிமுறை அடங்கும்.
பிரித்தானிய அரசாங்கம் இந்த நடைமுறையை கொண்டுவருவதன் மூலம் பெண்களுக்கு வேலை பெற்றுகொள்வதில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்கின்றது.
இவ்வாறு குடும்ப விசாமூலம் வருபவர்களுக்கு ஆங்கில அறிவை அதிகரிக்கச் செய்வதன் மூலம், அனைவரும் இலகுவாக அனைத்துப் பொதுச்சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கும், பெற்றோர் மூலம் பிள்ளைகளுக்கு கல்விப் பக்கத்தில் இலகுவாக 
உதவிசெய்யமுடியும்.
புதிய இந்த A2 ஆங்கில மொழித் தேவை, அவர்கள் பின்னர் நிரந்தர வதிவுரிமை விண்ணப்பிக்கும் போது இருக்கின்ற B1 ஆங்கில மொழித் தேவை வழிக்கு ஒரு முன்படியாக விளங்கும்.
அத்துடன், இவ்வாறானவர்கள் கணவன் மனைவி ஊடாக மற்றும் பெற்றோர் ஆக ஐந்து வருடம் வசிக்கும் தகுதிக் காலப்பகுதியில் அவர்களுடைய மொழித்திறனை அதிகரிக்கும் என்று அரசாங்கம்
 நம்புகின்றது.
இந்த மொழித்தேவை எவ்வாறு பிரயோகிக்கப்படும்?
01 மே 2017 இலிருந்து, கணவன் அல்லது மனைவியாக இரண்டரை வருடங்கள் (30 மாதங்கள்) வசித்தவர்கள் தொடர்ந்தும் பிரித்தானியாவில் அந்த விசாவின் கீழ் தங்குவதற்கு விண்ணப்பிக்கும் பொழுது இந்த புதிய ஆங்கில மொழித் தேவையை நிவர்த்தி செய்யவேண்டும்.
அதாவது அவர்கள் தங்கள் பேச்சு மற்றும் செவிமடுத்தல் திறமையை (Speaking and Listening) A2 மட்டத்தில் அல்லது அதற்கும் மேலாக பூர்த்தி செய்யவேண்டும்.
பின்வரும் வகையைச் சேர்ந்தவர்களுக்கு விதிவிலக்கு உண்டு
நீங்கள் ஆங்கில மொழி பேசும் நாட்டிலிருந்து வந்திருந்தால்
ஆங்கில முறை மூலம் கற்பிக்கப்பட்ட பட்டம் (ie;BA) பெற்றிருந்தால்
அல்லது இந்த மொழிமுறைக்கு விதிவிலக்கானவர்கள் பட்டியலில் அடங்கியிருந்தால்.
தற்பொழுது உள்ள A1 மொழி தேவை விதியிலிருப்பது போல, விண்ணப்பாதாரிகள் விண்ணப்பம் மேற்கொள்ளும் திகதியண்று A2 விதியிலிருந்து பின்வரும் சந்தர்ப்பங்களில் பொருந்தாமல்
 இருக்கலாம்,
அவர்கள் 65 வயது அல்லது அதற்கு மேல் இருந்தால்.
அவர்களுக்கு இந்த விதிமுறை சந்திப்பதற்கு தடங்கலாக ஏதாவது இயலாமைத் தன்மை இருந்தால்.
அவர்களுக்கு இந்த விதிமுறையை சந்திப்பதை தடுக்கும் வகையில் ஏதாவது பிரத்தியேகமான சூழ்நிலைகள் இருந்தால்.
30 மாதங்கள் பின்னர் இவ்வாறு கணவன் மனைவி மற்றும் 5 வருட குடும்ப வழி விசாவின் கீழ் விசா வழங்கப்பட்ட பெற்றோர்கள் இந்த மொழி விதிமுறைறை பின்பற்ற தவறினால், அவர்கள் குடும்ப விசா விதிமுறையின் கீழ், 10 வருட வழிமுறை மூலம் வதிவுரிமை மேற்கொள்ள வேண்டிய அனைத்து விதிமுறைகளையும், பிரத்தியேக விதிமுறைகளையும் சந்திக்கவேண்டும்.
அதன் மூலமே அவர்கள் குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை அடிப்டையில் அவர்கள் விசா பெறுவதற்கு தகுதியுடையவர்களாக இருப்பார்கள். பின்னர் 10 வருடங்களுக்கு பின்னர், அவர்கள் நிரத்தர வதிவுரிமையயைப் பெறுவதற்கு B1 மற்றும் பிரித்தானியா வாழ்க்கை முறைப் பரீட்சையில் சித்திபெற வேண்டும்.
A2 பரீட்சையை பின்வரும் அமைப்புக்களே வழங்குகின்றன.
Trinity College London
IELTS SELT Consortium
A2 பரீட்சை பற்றி
A2 மட்டத்தில், ஒரு சாதாரண மனிதர் சாதாரண கருத்துகளை விட சற்று ஆழமாக உரையாடலை மேற்கொள்ளலாம். அவர்கள் பிரதான கருத்துக்களை, சிறிய தெளிவான செய்திகளை, அறிவிப்புக்களை விளங்கிக்கொள்வார்கள். அவர்கள் தெரிந்த விடயங்கள் பற்றி குறுகிய தெளிவான உரையாடல்களை மேற்கொள்ள முடியும்.
மேலதிக தகவல்களைப் பெற விரும்பினால் பின்வரும் சட்ட அலுவலகத்தை தொடர்புகொள்ளவும். 10 நிமிட இலவச ஆலோசனை வழங்கப்படும்.
Jay Visva Solicitors, 
First Floor, 
784 Uxbridge Road, 
UB4 0RS Hayes
UK
Tell: 0208 573 6673
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

மிரட்டும் டோரிஸ் புயல் பிரித்தானியாவில் பேரழிவு ஏற்படும் அபாயம்!!

பிரித்தானியாவில் டோரிஸ் எனும் புயல்காற்று வீசவுள்ளதால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது, டோரிஸ் புயலால் நாட்டில் அதிவேகக் காற்று, மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்படக் கூடும்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை காற்று 80மைல் வேகத்தில் வீசக்கூடும். இன்று காலை ஐயர்லாந்தில் 87 மைல் வேகத்தில் காற்று வீசியுள்ளதாக
 பதிவாகியுள்ளது.இந்த புயலால் பிரித்தானியாவில் மத்திய பகுதி கடுமையாக பாதிக்கப்படக் கூடும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்கள் புயலை எதிர்கொள்ள தயராக இருக்க வேண்டும் 
என தெரிவித்துள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 23 பிப்ரவரி, 2017

சர்வதேச புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் வழங்கும் ஆஸ்திரேலிய அரசு !

ஆஸ்திரேலிய அரசு வழங்கும் 2018ம் ஆண்டுக்குரிய Australia Awards சர்வதேச புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், மாலைதீவு, பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த Masters பட்டப்படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதிக்கு முன்னதாக இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிப்பதற்கு நீங்கள் தகுதியானவரா என்று அறிந்து கொள்வதற்கும், இதற்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்வதற்கும் கீழ்க்காணும் இணைப்புக்குச் செல்லுங்கள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 20 பிப்ரவரி, 2017

நீங்கள் அமெரிக்காவுக்குப் போறீங்களா மொபைல், லேப்டாப் எடுத்து செல்லாதீங்க!

அமெரிக்காவுல இருக்கிற அண்ணனோ, அக்காவோ நம்மள லீவுக்கு வரச்சொன்னா எவ்ளோ சந்தோஷமா கிளம்புவோம்? அப்படி ஒரு வாய்ப்பு வந்தா கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாக்-ல இருந்து கிருஷ்ணாயில் வரை அவங்க கேட்கிற எல்லாத்தையும் எடுத்துட்டுப் போங்க. ஆனா, உங்க மொபைலை மட்டும் இங்கயே வச்சிட்டுப் போங்க.
ஆமாம் பாஸ். ஷாருக்கான் போனாலே “யார் மேன் நீ”ன்னு கேட்டு டவுசுர கழட்டுற நாடு அமெரிக்கா. இப்ப அவங்க 
நாட்டுக்குள்ள வர்ற எல்லோருடைய மொபைல் போனையும் செக் பண்ண ஆரம்பிச்சாச்சு. அயன் பட சூர்யா மாதிரி, மொபைல்ல வைரத்த கடத்தினாதானே பிரச்னை… நமக்கு என்னன்னு யோசிக்கிறீங்களா? உங்க போன் வாங்குறப்ப அதோட பாஸ்கோடையும்
 கேட்டு வாங்கிப்பாங்க மைக்ரேஷன் மச்சான்ஸ். உங்க போன்ல இருக்கிற மிஸ்டு கால்ல இருந்து ரெக்கார்ட் பண்ண கால் வரைக்கும் அலசி ஆராஞ்சுதான் திருப்பி தருவாங்க. கிரெடிட் கார்டு பில்ல கட்டலைன்னு ஒருத்தன் திட்டினது, கேர்ள் ஃப்ரெண்டு
கிட்ட வாட்ஸப்ல ஹாய் ஹாய், ப்ளீஸ் ப்ளீஸ்ன்னு நாம கெஞ்சியதோட ப்ளூ டிக் வரைக்குமே மேயுறாங்களாம். இதுக்கு அந்த நாட்டோட பாதுகாப்பு பாயிண்ட்ஸ்லயே குறிப்பு இருக்குன்றது ஹைலைட்.
இணையத்துல வைரல் ஆகிட்டு இருக்கிற இந்த டாபிக்குக்கு பிள்ளையார் சுழி போட்டவர் பெயர் சித். நாசால வேலை செய்ற நண்பர் சித், வெளிநாட்டுக்கு ஒரு ஜாலி ட்ரிப் போயிட்டு அமெரிக்காவுக்கு திரும்பியிருக்காரு. ஹவுஸ்டன் நகர ஏர்போர்ட்ல அவரை மடக்கின ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர் ஒருத்தர் அவரோட போனைக் கேட்டிருக்காரு. அவரும் கொடுத்திருக்காரு.
 பாஸ்கோடு கேட்டதும் சித் ஜெர்க் ஆகியிருக்காரு. இதுல ஸ்பெஷல் மேட்டர் என்னன்னா, அந்த போனை சித்துக்கு நாசாதான் கொடுத்திருக்கு. அதையே சந்தேகப்படுவாங்களான்னு
 சித் யோசிக்க, “அதெல்லாம் படுவோம். பாஸ்கோட கொடுங்க ப்ரோ”ன்னு கேட்டிருக்காரு ஆஃபீஸர். அரை மணி நேரம் அவர் போனை செக் பண்ணிட்டு “உங்களுக்கு கேர்ள் ஃப்ரெண்டே இல்லையா”ன்ற மாதிரி லுக்கோட போனை திருப்பிக் கொடுத்திருக்காரு.
இந்த சம்பவத்தை லார்ஸன் என்பவர் தன்னோட பிளாக்குல எழுதியதும் வைரல் ஆயிடுச்சு. ஒருத்தரோட தனிப்பட்ட டிஜிட்டல் டேட்டாவைப் பாதுகாக்குறத பத்தி லார்ஸன் அதிகம் எழுதுவாரு. அவருக்கு இந்தச் சம்பவம் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கு. ”இனிமேல நம்மளோட டிஜிட்டல் லைஃபுல ப்ரைவசியே இருக்காது. ம்ஹூம். இது ஆகுறதில்லை”ன்னு வருத்தப்பட்டிருக்காரு லார்ஸன்.
அதனால, அமெரிக்காவுக்குப் போறப்ப நம்ம மொபைலை வீட்டுலயே வச்சுட்டுப் போறது நல்லது. அங்க போனதும் சீப்பா ஒரு மொபைலை வாங்கிக்கலாம். அல்லது காஸ்ட்லியான மொபைலை வாடகைக்கு எடுத்துக்கலாம். இல்லைன்னா, அங்கிருக்கிற நம்ம அண்ணன் அல்லது அக்காக்கிட்ட புது மொபைலை அட்வான்ஸா புக் பண்ணி வைக்கலாம்.
அமெரிக்காவின் ஆசான் ட்ரம்ப் இப்பதான் 
கொஞ்ச நாள் முன்ன “இனிமே விசா அப்ளை பண்றவங்க சோஷியல் மீடியாவையும் நாங்க செக் பண்ணுவோம்”ன்னு சொன்னாரு. அமெரிக்காவுலதான் இது ஆரம்பிச்சிருக்குன்னாலும், சீக்கிரமே உலகம் முழுக்க இந்த நடவடிக்கைகள் வரலாம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>