நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 23 ஜனவரி, 2020

அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவில் உள்ள அலஸ்கா மாகாணத்தில் இலங்கை நேரப்படி, இன்று காலை 5.53 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.அந்தவகையில், இந் நிலநடுக்கம் 6.2 ரிச்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் 
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அலஸ்காவின் யு.டி.சி. அலுடியன் தீவுகளில் காணப்படும் தனகா எரிமலைக்கு கிழக்கே 22 கிலோமீற்றர் தூரத்தில் சுமார் 10 கிலோமீற்றர் கடல் ஆழத்தில் இந்நிலநடுக்கம்
 ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பில் இதுவரை எவ்வித செய்திகளும் வெளியாகவில்லை எனத் தெரியவருகின்றது.இந்நிலையில், அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையென அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செவ்வாய், 14 ஜனவரி, 2020

நியூசிலந்தில் எரிமலைக்குள் அகப்பட்டு 20க்கும் மேற்ப்பட்டோர் பலி

நியூசிலந்தின் White Island எரிமலை வெடிப்பில் அகப்பட்டு 20க்கும் மேற்ப்பட்டோர்  இறந்துள்ளதாக அந்நாட்டு 
அரசு அறிவித்துள்ளது.
எரிமலை வெடித்தபோது அந்தப் பகுதியில் 47 பேர் இருந்தனர் எனவும்  அவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்திரேலிய சுற்றுலாப்பயணிகள் எனவும் தெரியவருகிறது.
எரிமலை வெடித்துச் சிதறியபோது வெளிப்பட்ட சூடான சாம்பலும், நீராவியும் பட்டு அவர்கள் கடுமையான தீப்புண் காயங்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரியவருகிறது

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 19 டிசம்பர், 2019

பேஸ்புக்இருப்பிட அமைப்புகள் முடக்கப்பட்டிருந்தாலும் பயனாளர்களைக் கண்காணிப்பதை ஒப்புக்கொண்டது

பயனாளர்கள் தங்களின் இருப்பிடத்தை பின்தொடரக் கூடாது என்று தேர்வு செய்து வைத்திருந்தாலும், பேஸ்புக்கால் அவர்கள் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள முடியும் என அந்நிறுவனமே தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் கோடிக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் பேஸ்புக். தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பயனாளர்கள் இதில் பகிர்ந்து கொள்கின்றனர். அமெரிக்காவில் CCPA என்ற சட்டத்தின் படி சமூக வலைதளங்கள் பயனர்களிடமிருந்து 
என்னென்ன தகவல்களை எடுத்துக்கொள்கின்றன என்பதை அறிந்துகொள்ளும் உரிமை பயனர்களுக்கு உள்ளது.அதன்படி பயனாளர்களின் தகவல்களை சேகரித்து விளம்பர நோக்கத்திற்காக பேஸ்புக் பயன்படுத்துகிறது என அமெரிக்கா 
உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
இந்நிலையில், பேஸ்புக்கில் லொகேஷனை பகிர்ந்துகொள்ளும் முறையை முடக்கி வைக்கப்பட்டிருந்தாலும், பயனர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை பேஸ்புக்கால் அறிய முடியும் என 
செனட் சபையில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனர்களுடைய செல்போன் ஐபி முகவரியை வைத்து அவர்களுடைய லொகேஷனை பேஸ்புக் கண்டுபிடிக்கிறது. விளம்பர நோக்கத்திற்காகவே பயனர்களின் லொகேஷனை, அவர்களுக்கே 
தெரியாமல் எடுத்துக்கொள்வதாக செனட் அவையில் கடிதம் மூலம் பேஸ்புக் விளக்கமளித்துள்ளது.போட்டோக்களில் டேக் செய்யப்படுவது, குறிப்பிட்ட இடத்திற்கு சென்றதை செக் இன்னாக பதிவு செய்வது போன்றவற்றையெல்லாம் மீறி, பயனர்களின் ஐபி முகவரிக்குள் பேஸ்புக் ஊடுருவுவது அதிர்ச்சியை 
ஏற்படுத்தியுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வானில் பறந்து சென்ற விமானத்தில் பெண் செய்த செயல் அச்சத்தில் பயணிகள்

துருக்கியில் விமானத்திற்குள் இருந்த பெண் ஒருவர் திடீரென வெடிகுண்டை வெடிக்கச் செய்யப்போவதாக கூறி பீதியைத் தூண்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இஸ்தான்புல்லின் சபிஹா கோக்கென் விமான நிலையத்திலிருந்து துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சைப்ரஸில் உள்ள எர்கன் சர்வதேச விமான நிலையத்திற்கு 
புறப்பட் விமானம் தயராக இருந்தது.
அப்போது, விமானத்திற்குள் கருப்பு கண்ணாடி மற்றும் நீல நிற முக்காடு அணிந்திருந்து பெண் ஸ்ரீ, தான் FETO இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று கத்தி, கோபமாக குரானை படித்து விமானத்தை வெடிக்கச் செய்வதாக அச்சுறுத்தியதில் பயணிகள் பீதியில் உறைந்துள்ளனர்.
மேலும், தன்னிடம் ஐந்து வெடிக்குண்டுகள் இருப்பதாக அப்பெண் பீதியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், 
சர்ச்சைக்குரிய இயக்கத்தின் பின்னணியில் உள்ள இஸ்லாமிய மதகுருவான ஃபெத்துல்லா குலனின் படத்தையும் அவர் கையில் வைத்திருந்துள்ளார்.
பெண்ணின் பயங்கரமான செயலுக்கு பிறகு பயணிகளால் கட்டுப்படுத்தப்பட்டு விமானத்திலிருந்து வெளியேறப்பட்டார் என்று
 உள்ளுர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.பின்னர், பாதுகாப்பு குழு விமானத்திற்குள் நுழைந்து சோதனை 
செய்துள்ளது, எனினும் சந்தேகத்திற்கிடமான 
எதுவும் சிக்கவில்லை.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 17 டிசம்பர், 2019

ஆழ்கடலில் கடலுக்குள் மூழ்கிய வீரருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விசித்திர மிருகம்


பிரிட்டனில் கடலுக்குள் சென்ற நீர் மூழ்கிய வீரரை சீல் எனப்படும் கடல்நாய் ஒன்று கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்திய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயற்கையின் அழகை ரசிப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் அழகிய கடற்கரைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை காண்பது பலருக்கும் பிடித்தமான செயல் 
எனலாம். ஏனென்றால் கடலுக்குள் நாம் கண்டிராத அரிய வகை உயிரினங்களும் நம் கண்களை
 கொள்ளை கொள்ளும் அழகிய வண்ண மீன்களும் இருக்கும். அதே நேரத்தில் ஆபத்துகளும் இருக்கும் என்பதையும் நாம் அறிவோம்.
கடல்வாழ் உயிரினங்கள், குறிப்பிட்ட பகுதியில் கடலின் தன்மை, புதை படிமங்கள் போன்றவற்றை கண்டறிய
 நீர் மூழ்கி வீரர்களும் கடலுக்குள் செல்வது உண்டு. அவ்வகையில், பிரிட்டனில் கடலுக்குள் சென்ற நீர் மூழ்கி வீரரை சீல் எனப்படும் கடல்நாய் ஒன்று கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்திய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.-

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

                

வெள்ளி, 13 டிசம்பர், 2019

இலங்கைப் பெண் இத்தாலி இளைஞனை ஏமாற்றி செய்த மோசடி

இத்தாலியில் தொழில் செய்யும் இளைஞர் ஒருவரை பேஸ்புக் மூலம் ஏமாற்றி, 35 இலட்சம் ரூபா பணம் மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கம்பளையை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மாவனெல்ல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய அவர்
 கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து இரண்டு தரப்பினரையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்தனர். இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் நிலையத்திற்குள் மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் மோதலுக்கு முக்கிய காரணமான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
27 வயதான இந்த இளைஞன் நீண்ட காலமாக இத்தாலியில் சேவை செய்துள்ள நிலையில் பேஸ்புக் மூலம் இலங்கையில் உள்ள இந்தப் பெண்ணை அறிந்து கொண்டுள்ளார்.இளம் வயதுடைய யுவதி போன்று நடந்து கொண்ட இந்த பெண் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி வழங்கி இளைஞனை ஏமாற்றி பல முறை பணம்
 பெற்றுள்ளார்.தங்கள் இருவருக்கும் வீடு கட்ட வேண்டும் எனக் கூறி பல முறை பணம் பெற்றுக் கொண்டுள்ளார். இவ்வாறு பணம் பெற்று கம்பளை – நுவரெலியா வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றை வாங்கி அதனை வாடகைக்கு வழங்கி வந்துள்ளதாக 
தெரியவந்துள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


அவுஸ்திரேலியாவில் நடந்த உயர் பரீட்சையினல் சாதனை படைத்த ஈழத்து தமிழ் மாணவி

அவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா,
 மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ் மொழியில் இவ்வாறானதொரு சாதனையை நிகழ்த்தியமை தொடர்பில் பலரும்
 பாராட்டுக்களைத் தெரிவித்து
 வருகின்றனர்.அவுஸ்திரேலியாவில், 21 வருடகால தமிழ் மொழிப் பரீட்சை வரலாற்றில் இந்த சாதனை முதல் முறை 
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>